• English
  • Login / Register

2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான 7 கார்கள்

published on செப் 29, 2023 08:22 pm by shreyash for ஹோண்டா எலிவேட்

  • 137 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய மாடல்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்களைத் தவிர, ரெனால்ட், ஸ்கோடா, MG, ஜீப், ஆடி மற்றும் BMW ஆகியவற்றின் சில எடிஷன் வெளியீடுகளும் நடந்தன .

These Are The 7 Car Launches We Saw In September 2023

செப்டம்பர் மாதத்தில் வெகுஜன சந்தை மற்றும் பிரீமியம் கார் பிராண்டுகளின் புதிய கார் அறிமுகங்கள் நிறைந்துள்ளன. இந்த மாதத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் 2023 டாடா நெக்ஸான் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் வால்வோ C40 ரீசார்ஜ், மெர்சிடிஸ் பென்ஸ் EQE மற்றும் BMW iX1 போன்ற ஆடம்பர EV -களும் நம்  தளங்களில் கரை இறங்கியுள்ளன. செப்டம்பரில் மட்டும், ஏழு புதிய மாடல்கள் மற்றும் சில ஸ்பெஷன் எடிஷன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாதம் இந்தியா வரவேற்றுள்ள ஒவ்வொரு புதிய கார்களை பற்றியும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ஹோண்டா எலிவேட்

விலை வரம்பு: ரூ. 11 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை

Honda Elevate

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய மாடலை எலிவேட் காம்பேக்ட் SUV வடிவில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . ஹோண்டா எலிவேட் அதன் பிளாட்ஃபார்ம் மற்றும் இன்ஜின் / டிரான்ஸ்மிஷன் விருப்பங்களை ஹோண்டா சிட்டியுடன் பகிர்ந்து கொள்கிறது. ஹோண்டாவின் சுத்திகரிக்கப்பட்ட இன்ஜின் மற்றும் பிராண்ட் நம்பகத்தன்மை உடன் கூடுதலாக, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களையும் எலிவேட் பேக் செய்கிறது.

இருப்பினும், ஹோண்டா சிட்டியை போலல்லாமல், எலிவேட் ஹைபிரிட் பவர்டிரெயின் விருப்பத்தை வழங்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஹோண்டா நிறுவனம்  எலிவேட்  காம்பேக்ட் SUV யின் எலக்ட்ரிக் பதிப்பை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வோல்வோ C40 ரீசார்ஜ்

விலை ரூ. 61.25 லட்சம்

Volvo C40 Recharge

வோல்வோ நிறுவனம் தனது இரண்டாவது பியூர் எலக்ட்ரிக் மாடலான C40 ரீசார்ஜ் மாடலை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இது XC0 ரீசார்ஜின் கூபே-SUV பதிப்பாகும், இது அதே 78kWh பேட்டரி பேக்குடன் வருகிறது, ஆனால் 530 கிமீ  மேம்பட்ட ரேன்ஜ் -ஐ வழங்குகிறது. பேட்டரி பேக்கின் மேம்பட்ட ஆற்றல் செயல்திறன் மற்றும் C40 ரீசார்ஜின் அதிக ஏரோடைனமிக் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு காரணமாக இந்த மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் i20 மற்றும் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்

விலை வரம்பு:

  • 2023 ஹூண்டாய் i20: ரூ. 6.99 லட்சம் முதல் ரூ. 11.01 லட்சம் வரை

  • 2023 ஹூண்டாய் i20 N லைன் ரூ. 9.99 லட்சம் முதல் ரூ.12.47 லட்சம் வரை

Hyundai i20 N Line Facelift

ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,  சிறிய ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் ஒரே ஒரு அம்ச சேர்க்கையுடன், இது டைப்-C USB சார்ஜர் கொண்டது. இருப்பினும் அதன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ரெகுலர் i20 காரில் இனி 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படாது. அதற்கு பதிலாக, இது இப்போது 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் இப்போது ஹூண்டாய் i20 N லைனுக்கு  என ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் i20 N லைனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் அறிமுகப்படுத்தியது, இது இப்போது முறையான 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது, இது 6-ஸ்பீடு iMT (க்ளட்ச்லெஸ் மேனுவல்) -க்கு பதிலாக வருகிறது. 7-ஸ்பீடு DCT யின் ஆப்ஷன் i20 N லைனுடன் தக்கவைக்கப்பட்டுள்ளது.

2023 டாடா நெக்ஸான் மற்றும் டாடா நெக்ஸான் EV

விலை வரம்பு

  • 2023 டாடா நெக்ஸான்: ரூ. 8.10 லட்சம் முதல் ரூ. 15.50 லட்சம் வரை

  • 2023 டாடா நெக்ஸான் EV ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம் வரை

2023 Tata Nexon

இந்த மாதத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில், புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் EV ஆகியவை செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளன. 2023 டாடா நெக்ஸானின் இரண்டு பதிப்புகளும் விரிவான வடிவமைப்பு புதுப்பிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றுள்ளன.

நெக்ஸானின் பெட்ரோல் பதிப்பில் இப்போது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) உள்ளிட்ட கூடுதல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. மறுபுறம், நெக்ஸான் EV மேம்படுத்தப்பட்ட இலகுரக மின்சார மோட்டாரை பெற்றுள்ளது, இதன் விளைவாக 465 கிமீ வரை மேம்பட்ட பயணதூர ரேன்ஜ்  -ஐ பெற்று உள்ளது.

சிட்ரோன் C3 ஏர்கிராஸ்

விலை வரம்பு: ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 12.10 லட்சம் வரை

Citroen C3 Aircross

ஹோண்டா எலிவேட் வெளியீட்டைத் தொடர்ந்து, காம்பேக்ட் SUV பிரிவில் மற்றொரு புதிய அறிமுகம் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகும். C3 ஏர்கிராஸை பிரிவில் உள்ள மற்ற காம்பேக்ட் SUVகளில் இருந்து வேறுபடுத்துவது எதுவென்றால், அது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் (அகற்றக்கூடிய மூன்றாம் வரிசை இருக்கைகளுடன்) உள்ளமைவுகளில் கிடைக்கிறது.

C3 ஏர்கிராஸ் அதன் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பின் அடிப்படையில் அதன் ஹேட்ச்பேக் உடன்பிறப்பான சிட்ரோன் C3 -லிருந்து உத்வேகம் பெறுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி,  C3 மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் EQE

விலை 1.39 கோடி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மாடலான EQE  காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் தற்போதைய இந்திய தயாரிப்பு வரிசையில் இது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனமாகும். EQE  எலெக்ட்ரிக் SUV, முழுமையாக பொருத்தப்பட்ட ஆல் வீல் டிரைவ் (AWD) கொண்ட ஒரு வேரியன்ட் மட்டுமே வழங்கப்படுகிறது, இது WLTP உரிமை கோரும் பயணதூர வரம்பை 550 கிமீ வரை உறுதியளிக்கிறது.

ஆடம்பர வாகன உற்பத்தியாளர் EQE க்கு 10 ஆண்டு பேட்டரிக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது, இது எந்தவொரு உற்பத்தியாளரும் ஒரு மின்சார வாகனத்திற்கு வழங்கும் மிக உயர்ந்த உத்தரவாத காலம் ஆகும்.

விலை 66.90 லட்சம்

இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி  BMW iX1 ஆகும். இது BMW X1, ICE  (இன்டர்னல் கம்பஸ்டன் என்ஜின் ) SUV -யின் முழுமையான மின்சாரப் பதிப்பாகும். இந்தியாவில் iX, i7 மற்றும் i4 ஆகிய மாடல்களுடன் வந்த நான்காவது BMW EV கார் iX1 ஆகும்.

இந்தியாவுக்கான தனிப்பட்ட BMW iX1 கார் WLTP -ல் கோரப்பட்ட 440 கிமீ தூரம் வரை பயணிக்கும்  திறன் கொண்ட முழுமையாக பொருத்தப்பட்ட சிங்கிள்  ஆல் வீல் டிரைவ் கார் வேரியன்ட் மட்டுமே கிடைக்கிறது.

ஸ்பெஷல் எடிஷன் & புதிய கார் வேரியன்ட்கள்

Renault Kwid, Kiger and Triber

  • ரெனால்ட் அர்பன் நைட் எடிஷன்கள்: க்விட், கிகர் மற்றும் ட்ரைபர் ஆகிய மூன்று ரெனால்ட் மாடல்களும் இப்போது வரையறுக்கப்பட்ட 'அர்பன் நைட்' பதிப்பில் கிடைக்கின்றன. இந்த ஸ்பெஷல் எடிஷனுடன், மூன்று கார்களும் புதிய ஸ்டீல்த் பிளாக் வெளிப்புற ஷேடைக் கொண்டுள்ளன. கூடுதலாக, கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவற்றில் ஸ்மார்ட்வியூ மானிட்டர் பொருத்தப்பட்டுள்ளது, இது உட்புற ரியர்-வியூ மிரர் மற்றும் டூயல் டாஷ்கேம் ஆகிய இரண்டிலும் செயல்படுகிறது. இருப்பினும், இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் ஒவ்வொன்றிலும் 300 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். வாடிக்கையாளர்கள் க்விட் சிறப்பு பதிப்புக்கு கூடுதலாக ரூ.6,999 மற்றும் ட்ரைபர் மற்றும் கிகரின் சிறப்பு பதிப்புகளுக்கு ரூ.14,999 செலுத்த வேண்டும்.

Skoda Slavia and Kushaq

Hyundai Venue

MG Astor Black Storm Edition

 Audi Q5 limited edition

  • ஆடி Q8 & ஆடி Q5 லிமிடெட் எடிஷன்கள்: ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் வரிசையில் இணைந்த ஆடி நிறுவனம் Q5 மற்றும் Q8 சொகுசு எஸ்யூவி -களின் லிமிடெட் எடிஷன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. முந்தையதின் விலை ரூ. 69.72 லட்சமாகவும், பிந்தையதின் விலை ரூ.1.18 கோடியாகவும் உள்ளது. Q5 இன் சிறப்பு பதிப்பு அதன் 'டெக்னாலஜி' வேரியன்ட் அடிப்படையாகக் கொண்டது, இது மைடோஸ் பிளாக் வெளிப்புற ஷேடில் கிடைக்கிறது.  மறுபுறம், Q8 சிறப்பு பதிப்பு மூன்று வெளிப்புற ஷேடுகளில் வருகிறது: மைத்தோஸ் பிளாக், க்ளேசியர் ஒயிட் மற்றும் டேடோனா கிரே.

Jeep Compass Black Shark and Meridian Overland 

  • ஜீப் காம்பஸ் புதிய கார் வேரியன்ட்கள்: ஜீப் காம்பஸ் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவை முறையே பிளாக் ஷார்க் மற்றும் ஓவர்லேண்ட் பதிப்புகளுடன் சிறப்பு பதிப்புகளின் பட்டியலில் சேர்ந்துள்ளன. அது மட்டுமல்லாமல், ஜீப் இப்போது காம்பஸ் 4X2 மாடலை இந்தியாவுக்காக பிரத்யேகமாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்குகிறது. காம்பஸ் MT இப்போது ரூ.20.49 லட்சத்திலிருந்து தொடங்குகிறது, அதே நேரத்தில் அதன் ஆட்டோமேட்டிக் கார் வேரியன்ட்களுக்கு இப்போது ரூ.23.99 லட்சத்திலிருந்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது காம்பஸ் காரின் முந்தைய விலை கொண்ட ஆட்டோமேட்டிக் வேரியன்ட் காரை விட கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் கூடுதல் விலை கொண்டது.

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்: எலிவேட் ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Honda எலிவேட்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience