க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் கார்களுக்கு லிமிடெட் ரன் அர்பன் நைட் எடிஷனை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்
published on செப் 04, 2023 01:20 pm by shreyash for ரெனால்ட் க்விட்
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஸ்பெஷல் அர்பன் நைட் எடிஷன் ரெனால்ட் மாடலுக்கு 300 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும்.
-
ரெனால்ட் கார்களின் அர்பன் நைட் எடிஷன் ஸ்டீல்த் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேடில் வருகிறது.
-
முன்புற மற்றும் பின்புற பம்பர், ரூஃப் ரெயில்ஸ் போன்ற பாகங்கள் சில்வர் இன்செர்ட்களை பெற வாய்ப்புள்ளது.
-
கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவை ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஸ்மார்ட்வியூ மானிட்டர் ஆகியவற்றை பெறுகின்றன, இது இன்டீரியர் வியூ மிரர் மற்றும் டூயல் டேஷ்கேமரா அமைப்பாக வேலை செய்கிறது
- க்விட் -ன் இந்த ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 6,999 கூடுதலாக வருகிறது, அதேசமயம் கைகர் மற்றும் ட்ரைபருக்கு, வாடிக்கையாளர்கள் ரூ.14,999 அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.
பண்டிகைக் காலத்தைக் குதுகலமாகக் கொண்டாட, ரெனால்ட் இந்தியா நிறுவனம், ரெனால்ட் க்விட், ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய மூன்று மாடல் கார்களுக்கும் புதிய அர்பன் நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன், ஒவ்வொரு ரெனால்ட் மாடலின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் அடிப்படையில், புதிய ஸ்டீல்த் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேடை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இன்டீரியரில் பல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ரெனால்ட் கார்களின் இந்த புதிய எடிஷன் என்ன வழங்குகிறது என்பதை ஆராய்வோம்
புதிதாக என்ன உள்ளது?
புதிய ஸ்டீல்த் பிளாக் பாடி நிறத்துடன், ஹெட்லேம்ப் பெசல் மற்றும் பம்பர் அலங்காரம், பியானோ பிளாக் ORVMகள் (ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மெண்ட் வெளிப்புற ரியர் வியூ மிரர்), பின்புற ட்ரங்க் குரோம் லைனர், சில்வர் இன்செர்ட்டுகளுடன், இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் எக்ஸ்டீரியர், முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்டார்டஸ்ட் சில்வர் டச்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூஃப் ரெயில்ஸ், படில் லேம்ப்ஸ் மற்றும் ஒரு ஒளிரும் ஸ்கஃப் பிளேட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய வசதிகளில் 9.66-இன்ச் ஸ்மார்ட்வியூ மானிட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை அடங்கும், பிந்தையது கைகருக்கு மட்டுமே கிடைக்கும். ஸ்மார்ட்வியூ மானிட்டர், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கோணங்களுடனான உட்புற ரியர்-வியூ மிரர் (IRVM) ஆகவும், டூயல் டாஷ்கேம் அமைப்பாகவும் செயல்படும், இதில் முன் மற்றும் பின்புற கேமராக்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஃபைல்களை பதிவிறக்குவதற்கான வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு அம்சம் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மூன்று மாடல்களிலும், க்விட் மாடல் கார் ஸ்மார்ட்வியூ மானிட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் அம்சங்களைப் பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் க்விட் கார் சக்கரங்களில் ஸ்டார்டஸ்ட் சில்வர் ஃப்ளெக்ஸ் ஃபினிஷ் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: செப்டம்பர் 2023 இல் அறிமுகமாகும் 6 கார்கள் இவை
இன்ஜினில் மாற்றங்கள் இல்லை
இந்த எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் அப்டேட்களை தவிர, இந்த கார்களின் ஸ்பெஷல் எடிஷனில் எந்த இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை. க்விட் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் (AMT) இணைக்கப்பட்ட 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை (68PS/ 91Nm) பயன்படுத்துகிறது. மறுபுறம், ட்ரைபர் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமெட்டி மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1-லிட்டர் 'நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்' 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (72PS/ 96Nm) மூலம் இயக்கப்படுகிறது.
கைகர் கார் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 1-லிட்டர் 'நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்' பெட்ரோல் இன்ஜின் (72PS/96Nm) மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (100PS/160Nm). இரண்டு யூனிட்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இரண்டு யூனிட்டுகளுக்கும் கிடைக்கிறது, முந்தையவற்றுக்கு 5-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) மற்றும் மற்றொன்றுக்கு CVT கிடைக்கிறது.
நீங்கள் எவ்வளவு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்?
அனைத்து ரெனால்ட் மாடல்களின் அர்பன் நைட் எடிஷன் அவற்றின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. கைகர் மற்றும் ட்ரைபர் கார்களுக்கு, இந்த ஸ்பெஷல் எடிஷன் ரூ. 14,999 அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் க்விட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6,999 அதிகமாக செலுத்த வேண்டும். குறிப்புக்கு, ஒவ்வொரு ரெனால்ட்க்கான டாப்-எண்ட் வேரியன்ட்களின் விலை பின்வருமாறு:
மாடல் |
எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) |
ரெனால்ட் க்விட் RXT |
ரூ. 5.67 லட்சம் |
ரெனால்ட் ட்ரைபர் RXZ |
ரூ.8.22 லட்சம் |
ரெனால்ட் ட்ரைபர் RXZ EASY-R |
ரூ. 8.74 லட்சம் |
ரெனால்ட் கைகர் RXZ எனர்ஜி MT |
ரூ. 8.80 லட்சம் |
ரெனால்ட் கைகர் RXZ EASY-R AMT 1-லிட்டர் எனர்ஜி |
ரூ. 9.35 லட்சம் |
ரெனால்ட் கைகர் RXZ 1-லிட்டர் டர்போ MT |
ரூ. 10 லட்சம் |
ரெனால்ட் கைகர் RXZ X-டிரானிக் (CVT) 1.0 லி டர்போ |
ரூ 10.10 லட்சம் |
ரெனால்ட் கைகர் அர்பன் நைட் எடிஷன் கார் டாடா நெக்ஸான் டார்க் எடிஷன், கியா சோனெட் X-லைன் மற்றும் ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் கார்களுக்கு போட்டியாக இருக்கிறது. இதற்கிடையில், க்விட் மாருதி ஆல்டோ K10 மற்றும் S-பிரஸ்ஸோ போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது, இவை இரண்டும் பிளாக் பாடி ஷேடில் வழங்கப்படுகின்றன. கடைசியாக, ட்ரைபருக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை.
மேலும் படிக்க: க்விட் AMT
0 out of 0 found this helpful