• English
    • Login / Register

    2023 Audi Q5 லிமிடெட் எடிஷன் ரூ.69.72 லட்சத்தில் வெளியிடப்பட்டது

    ஆடி க்யூ5 க்காக செப் 18, 2023 05:28 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 63 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    லிமிடெட் எடிஷன் ஆடி க்யூ5 மித்தோஸ் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேட் மற்றும் கேபின் ஓகாபி பிரவுன் நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

    Audi Q5 limited edition

    • ஆடி Q5 -ன் டெக்னாலஜி வேரியன்ட்டின் அடிப்படையில் லிமிடெட் எடிஷனை ஆடி தயாரித்துள்ளது.

    • இது ஆடி லோகோ, க்யூ5 மோனிகர், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிரில்லுக்கான பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜை கொண்டுள்ளது.

    • வாடிக்கையாளர்கள் லிமிடெட் எடிஷக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பல ஆக்சஸரீஸ்களை தேர்வு செய்யலாம்.

    • 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 8 ஏர்பேக்குகள் ஆகியவற்றைப் பெறுகிறது.

    • 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்ட 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது; 4-வீல் டிரைவ் டிரெய்னை பெறுகிறது.

    இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் ஒரு புதிய லக்ஸரி எஸ்யூவி -யை வாங்குவதற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், புதிய ஆடி Q5 லிமிடெட் எடிஷன் காரையும் உங்களது லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். இது Q5 -யின் ‘டெக்னாலஜி’ வேரியன்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் விலை ரூ.69.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லிமிடெட் எடிஷனில்  உள்ள மாற்றங்களை பற்றிய விவரம் இங்கே:

    பெரிய அளவிலான எக்ஸ்டீரியர் அப்டேட்கள்

    ஆடி Q5 லிமிடெட் எடிஷன் மித்தோஸ் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேடில் பிரத்தியேகமாக கிடைக்கிறது. ‘ஆடி’ லோகோ, ‘க்யூ5’ மோனிகர் மற்றும் கிரில் ஆகியவற்றுக்கு பிளாக் கலர் டச் கொடுக்கப்பட்டுள்ளது இது பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜை பெறுகிறது. ஆடி லிமிடெட் எடிஷன் ஒரு பகுதியாக பிளாக் ரூஃப் ரெயில்ஸ், விண்டோ பெல்ட்லைனுக்கான பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

    லிமிடெட் எடிஷன் Q5 -வை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் எஸ்யூவி -க்கான பல்வேறு பாகங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெறுவார்கள், இதில் என்ட்ரி LED ஆடி ரிங்க்ஸ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல் கவர்ஸ், டைனமிக் ஹப் கேப்கள், சில்வர் ORVM ஹவுசிங் மற்றும் ஆடி வால்வ் கேப்கள் ஆகியவை அடங்கும்.

    மேலும் படிக்க: BMW 2 சீரிஸ் கிரான் கூபே M ஃபெர்பாமன்ஸ் எடிஷன் வெளியிடப்பட்டது

    உள்ளே என்ன மாறியிருக்கிறது ?

    Audi Q5 limited edition cabin

    ஒகாபி பிரெளவுன் கேபின் தீம் மற்றும் செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரியில் லிமிடெட் எடிஷன் பதிப்பான Q5 -வை ஆடி வழங்குகிறது. எஸ்யூவி -யானது 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ரிவர்சிங் கேமரா மற்றும் 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றை பெறுகிறது. இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பவர்டு ஃபிரன்ட் சீட் வித் மெமரி பங்ஷன், 8 ஏர்பேக்குகள் மற்றும் 19-ஸ்பீக்கர் 755W பேங் மற்றும் அலுஃப்சென் மியூசிக் சிஸ்டத்துடன் வருகிறது.

    இதர விவரங்கள் 

    Audi Q5 2-litre turbo-petrol engine

    Q5 ஆனது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (265PS/370Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 6.1 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 240 கிமீ ஆகும். ஆடி குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் மற்றும் ஆறு டிரைவ் மோட்களுடன் கிடைக்கிறது:கம்ஃபோர்ட், டைனமிக், இன்டிவிஜுவல், ஆட்டோ, எபிஷியன்சி மற்றும் ஆஃப்-ரோடு.

    Q5 - க்கு மாற்றாக இருக்கும் கார்கள்

    Audi Q5 rear

    ஆடி க்யூ5 லிமிடெட் எடிஷன் பதிப்புக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் ஸ்டாண்டர்டு எஸ்யூவி BMW X3, வோல்வோ XC60, லெக்சஸ் NX, மற்றும் Mercedes-Benz GLC ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. இறுதியாக, பெயரில் குறிப்பிடுட்டுள்ளது போல, இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்.

    மேலும் படிக்க: Q5 ஆட்டோமெட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on Audi க்யூ5

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience