2024 ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 4 கார்கள்
published on மே 31, 2024 07:46 pm by dipan for tata altroz racer
- 153 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த கோடை காலத்தில் டாடா -வில் ஒரு ஹேட்ச்பேக் மற்றும் நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட்ட டிசையர் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் வெளியீடுகள் மற்றும் உலகளாவிய வெளியீடுகளின் அடிப்படையில் மே மாதமானது அதிக நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. எனவே அடுத்த மாதம் இது சற்று குறைவான வெளியீடுகளே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் இது வெளியீடுகளின் அடிப்படையில் மட்டுமே, ஏனென்றால் ஜூன் 2024 -ல் டாடா மற்றும் மாருதியிலிருந்து சில அற்புதமான புதிய கார் வெளியீடுகள் உள்ளன:
டாடா அல்ட்ரோஸ் ரேசர்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இந்த காருக்கான அதிகாரப்பூர்வ டீசர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. மேலும் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் நடந்து வருகின்றன.ஆகவே டாடா அல்ட்ரோஸ் ரேசர் ஜூன் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது ஸ்போர்ட்டி டீக்கால்களை மட்டுமல்ல, கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் கூடிய பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்ஸ், ஒரு சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிளுடன் வரும். இது வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற பிரீமியம் வசதிகளையும் பெறலாம். டாடா அல்ட்ரோஸ் ரேசரில் , டாடா நெக்ஸான் காரிலுள்ள 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கொடுக்கப்படலாம்.
மாருதி டிசையர்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6.70 லட்சம்
முதல் மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் அதன் புதிய நான்காம் தலைமுறை அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சப்-4m செடான் பதிப்பும் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய மாருதி டிசையர் ஆனது பெரிய டச் ஸ்கிரீன், இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் உள்ளேயும் வெளியேயும் இதே போன்ற ஸ்டைலிங் அப்டேட்களுடன் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்படலாம். புதிய தலைமுறை மாருதி டிசையர் புதிய ஸ்விஃப்ட்டில் காணப்படுவது போல், அதே 1.2-லிட்டர் 3-சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை (82 PS/112 Nm) பயன்படுத்தும். இந்த யூனிட் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கனெக்ட் செய்யப்படும்.
ஆடி Q8 ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1.17 கோடி
ஃபேஸ்லிஃப்ட் ஆடி Q8 செப்டம்பர் 2023 -ல் உலகளவில் வெளியிடப்பட்டது மற்றும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் Q8 முதன்முதலில் அறிமுகமான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நுட்பமான காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் புதிய வசதிளைக் கொண்டுள்ளது. லேசர் ஹை பீட், டிஜிட்டல் டேடைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட லைட் சிக்னேச்சர் கொண்ட புதிய HD Matrix LED ஹெட்லைட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அப்டேட் ஆகும். அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் செட்டப்களில் 360-டிகிரி கேமரா மற்றும் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் ஆகியவற்றிற்கான புதுப்பிப்புகள் அடங்கும். இது இப்போது லேன்-சேஞ்ச், டிஸ்டன்ஸ்-வார்னிங் மற்றும் பிற முக்கிய தகவல்களை முழு HD இல் காட்டுகிறது. இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பு அதே 3-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 340 PS மற்றும் 500 Nm வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.39.50 லட்சம்
எம்ஜி குளோஸ்டர் இது Maxus D90 காரை அடிப்படையாகக் கொண்டது. இது மிட்-லைஃப்சைக்கிள் அப்டேட் செய்யப்பட உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற சந்தைகளில் ஏற்கனவே கிடைக்கும் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு முற்றிலும் புதிய வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. ரெட் ஆக்ஸன்ட்களுடன் கூடிய பெரிய அறுங்கோண கிரில், ஒரு புதிய ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப், ப்ரொனவ்ஸ்டு வீல் ஆர்ச்கள், ரக்கட் கிளாடிங், புதிய கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் புதிய வடிவிலான ரியர் பம்பர் ஆகியவை ஹைலைட்களாக கொடுக்கப்படலாம்.. 18-இன்ச் அலாய் வீல்களும் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இந்தியா-ஸ்பெக் மாடலில் அதிக குரோம் கொடுக்கப்படலாம். உள்ளே டாஷ்போர்டு பெரிய டச் ஸ்கிரீன், புதிய வடிவிலான ஏர் வென்ட்ஸ் மற்றும் புதிய வடிவிலான சுவிட்ச் கியர் கொண்ட புதிய சென்டர் கன்சோல் ஆகியவற்றுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போதுள்ள 2-லிட்டர் டீசல் இன்ஜின், 4x2 மற்றும் 4x4 ஆகிய இரண்டு செட்டப்களிலும் கிடைக்கும்.
0 out of 0 found this helpful