- + 5நிறங்கள்
- + 16படங்கள்
- shorts
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 531 km |
பவர் | 201 பிஹச்பி |
பேட்டரி திறன் | 64.8 kwh |
சார்ஜிங் time டிஸி | 32min-130kw-(10-80%) |
சார்ஜிங் time ஏசி | 6:45hrs-11kw-(0-100%) |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- ஏர் ஃபியூரிபையர்
- voice commands
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பவர் விண்டோஸ்
- advanced internet பிட்டுறேஸ்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

ஐஎக்ஸ்1 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: BMW iX1 இந்தியாவில் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை: இதன் விலை ரூ.66.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேரியன்ட்கள்: இந்தியா-ஸ்பெக் iX1 ஒரு ஃபுல்லி லோடட் xDrive30 வேரியன்ட்டில் கிடைக்கிறது.
சீட்டிங் கெபாசிட்டி: இதில் அதிகபட்சம் ஐந்து பேர் அமரலாம்.
பேட்டரி, மின்சார மோட்டார் மற்றும் ரேஞ்ச்: பிஎம்டபிள்யூ X1 -வின் ஆல் எலக்ட்ரிக் பதிப்பாக இது இருக்கிறது. 66.4kWh பேட்டரியுடன், 313PS மற்றும் 494Nm ஆற்றலை வெளிப்படுத்தும் ஆல்-வீல் டிரைவ் டூயல் மோட்டார் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 440 கிமீ வரை WLTP கிளைம் செய்யப்பட்டுள்ள ரேஞ்சை வழங்குகிறது. ஒரு 11kW வால்பாக்ஸ் ஏசி சார்ஜர் பேட்டரியை காலியாக இருந்து முழுமையாக நிரப்ப 6.3 மணிநேரம் எடுக்கும்.
வசதிகள்: BMW iX1 இல் உள்ள வசதிகளில் இன்டெகிரேட்டட் டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 10.7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ், 12-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் மெமரி மற்றும் மசாஜ் ஃபங்ஷன் உடன் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகளையும் பெறுகிறது.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இது பல ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா, பார்க் அசிஸ்ட் மற்றும் பிரேக் ஃபங்ஷன் மற்றும் ஃபிரன்ட் கொலிஷன் வார்னிங் உடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்: இது வோல்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் வோல்வோ C40 ரீசார்ஜ் ஆகியவற்றுடன் போட்டியிடும். BYD அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவற்றுக்கு இது ஒரு பிரீமியம் மாற்றாக கருதப்படலாம்.
மேல் விற்பனை ஐஎக்ஸ்1 எல்டபிள்யூடி64.8 kwh, 531 km, 201 பிஹச்பி | ₹49 லட்சம்* |
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1 விமர்சனம்
Overview
BMW iX1 என்பது BMW -ன் X1 பிரிமியம் காம்பாக்ட் எஸ்யூவி -யின் எலக்ட்ரிக் பதிப்பாகும். இது 66.4kWh பேட்டரியுடன் வருகிறது. இது 417-440 கி.மீ வரை கிளைம்டு (WLTP - உலகளாவிய இணக்கமான இலகுரக வாகன சோதனை செயல்முறை) ரேஞ்சை வழங்குகிறது. BMW X1 (இந்தியாவில் விற்கப்படும் பதிப்புகள்) போலல்லாமல் iX1 ஆல்-வீல் டிரைவ் உடன் ஸ்டாண்டர்டாக வருகிறது.
BMW iX1 -க்கு மிக நெருக்கமான மாற்று கார்களில் வோல்வோ XC40 ரீசார்ஜ், வோல்வோ C40 ரீசார்ஜ், கியா EV6 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQB ஆகியவை அடங்கும்.
வெளி அமைப்பு
பச்சை நிற நம்பர் பிளேட்டை விடுங்கள் பெரும்பாலான மக்களுக்கு இது BMW X1 -ஐ தவிர்த்து BMW iX1 எனக் கூறுவது கடினமாக இருக்கும். மூடிய முன் கிரில்லை தவிர்த்து பார்த்தால் iX1 இதன் பெட்ரோல் வெர்ஷன் போலவே தெரிகிறது. சொல்லப்போனால் BMW iX1 ஸ்போர்ட்டியாக தெரிகிறது மற்றும் இதன் மஸ்குலர் பாடி பேனல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. 18-இன்ச் எம் ஸ்போர்ட் சக்கரங்களும் iX1 -ன் அத்லெட்டிக் நிலைப்பாட்டை கொடுக்கின்றன. மேலும் இந்த எஸ்யூவி மிக உயர்ந்த அல்லது அசாதாரணமான வடிவமைப்புடன் ஒரு தோற்றத்தை கொண்டுள்ளது.
உள்ளமைப்பு
சில வார்த்தைகளில் சொல்லப்போனால் தரம், தரம் மற்றும் இன்னும் கொஞ்சம் தரம்!. ஆம் iX1 காரின் கேபினில் BMW கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது மற்றும் கேபினில் உள்ள ஒவ்வொரு டச் பாயிண்டும் சிறப்பாகத் தோற்றமளிக்கிறது. கேபின் முழுவதும் லெதரெட் பேடிங் மற்றும் மெட்டாலிக் ஃபினிஷிங் ஆகியவற்றின் புத்திசாலித்தனமான பயன்பாடு iX1 -ன் உட்புறத்தை மிகவும் விலையுயர்ந்த சொகுசு காராக மாற்றியுள்ளது. இங்கேயும் அனுபவம் BMW X1 காரில் உள்ளதை போலவே இருக்கின்றது. மற்றும் தரத்தில் இந்த முன்னேற்றம் மற்றும் கேபினில் உள்ள சிறப்பான உணர்வு புதிய தலைமுறை BMW -களின் ஸ்டாண்டர்டாக மாறி வருகின்றன.
கப்ஹோல்டர்கள் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் அண்டர் ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் ட்ரே ஆகியவை உங்கள் நீண்ட கால உரிமை அனுபவத்தை மிகவும் வசதியானதாக மாற்றும் வகையில் காக்பிட் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க பயணிகளும் மேம்பட்ட கீழ் தொடை ஆதரவுக்காக நீட்டிக்கக்கூடிய இருக்கை தளங்களுடன் மிகவும் ஆதரவான இருக்கைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் பயன் தரக்கூடிய ஒன்றாக மாறியுள்ளன.
கேபின் இடத்தை பொறுத்தவரை iX1 4 பயணிகள் வசதியாக அமரக்கூடிய அளவுக்கு விசாலமானது. டைப்-சி சார்ஜ் போர்ட்கள் இரண்டு இருக்கை வரிசைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பின்பக்க பயணிகளுக்கு ஏசி வென்ட்களும் உள்ளன. இருப்பினும் BMW X1 -க்கு எதிராக சில குறைகள் உள்ளன. முதலில் தொடையின் கீழ் ஆதரவு சராசரியாக உள்ளது. 5.7 அடி உயரமுள்ள ஒரு பயனர் கூட நீட்டப்பட்டாலும் கூட முழங்கால்கள் சற்று உயர்த்தப்பட்டதாக உணரப்படுவதால், தொடையின் கீழ் சிறந்த ஆதரவு இருக்க வேண்டும் என விரும்புவார். iX1 ஆனது X1 போன்ற ஸ்லைடு-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின் இருக்கைகளை பெறவில்லை, இரண்டு குறைகளும் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருப்பதன் விளைவாகும்.
வசதிகள்:
-
டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்
-
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளேக்கான சப்போர்ட் உடன் 10.7 இன்ச் டச் ஸ்கிரீன்
-
10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
-
12-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம்
-
பவர்டு ஃபிரன்ட் சீட் வித் டிரைவர் மெமரி (இருக்கை மற்றும் கண்ணாடிகள்)
-
மசாஜ் ஃபங்ஷன் முன் இருக்கைகள்
-
பனோரமிக் சன்ரூஃப்.
கேபின் அமைப்பு நேரடியானது மற்றும் கன்ட்ரோல்களை இயக்குவது மிகவும் எளிதானது. இருப்பினும், AC கன்ட்ரோல்கள் டச் ஸ்கிரீனில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனம் ஓட்டும் போது பட்டன்களை பயன்படுத்துவதைப் போல அவை இயல்பான உணர்வை கொடுக்கவில்லை. ஏசி செயல்திறனும் வலுவாக இருந்திருக்கலாம் மற்றும் ஈடுசெய்ய ஃபுளோவர் வேகத்தை நீங்கள் அதிகமாக வைக்கலாம்.
இதர வசதிகள்
க்ரூஸ் கன்ட்ரோல் | ஸ்பீடு லிமிட்டர் |
ஆம்பியன்ட் லைட்ஸ் | பவர்டு டெயில்கேட் |
பாதுகாப்பு
6 ஏர்பேக்குகள் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளைத் தவிர, iX1 ஆட்டோ-எமர்ஜென்சி பிரேக்கிங், கொலிஷன் வார்னிங் மற்றும் லேன் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது. விலைப் புள்ளியைக் கருத்தில் கொண்டு, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட்-வியூ கண்காணிப்பு மற்றும் சரவுண்ட் வியூ கேமரா (ஐஎக்ஸ்1 உடன் சர்வதேச அளவில் கிடைக்கிறது) போன்ற வசதிகள் தவிர்க்கப்பட்டிருப்பது ஒரு மோசமான விஷயம். BMW X1, Euro NCAP -லிருந்து விபத்து பாதுகாப்பிற்காக 5/5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. மற்றும் BMW iX1 -க்கும் அதே முடிவுகள் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பூட் ஸ்பேஸ்
பேப்பரில் பூட் ஸ்பேஸ் ஈர்க்கக்கூடிய வகையில் 490 லிட்டராக உள்ளது. இருப்பினும் ஸ்பேர் டயர் நிறைய இடத்தை எடுத்துக்கொள்கிறது. பெட்ரோல்/டீசல் X1 sDrive வேரியன்ட்டில், இந்தச் சிக்கலைக் கவனித்துக்கொள்ளும் பூட் -டின் தளத்தின் கீழ் ஒரு ஸ்டோரேஜ் பகுதி உள்ளது. நீங்கள் ஸ்பேர் வீலை சுற்றி 2-3 சிறிய பைகளை வைக்கலாம் அல்லது பெரிய சூட்கேஸ்களுக்கு பொருத்தமாக அதை முழுவதுமாக அகற்றலாம்.