• English
  • Login / Register

இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW iX1 LWB, விலை ரூ. 49 லட்சமாக நிர்ணயம்

பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1 க்காக ஜனவரி 18, 2025 04:00 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 25 Views
  • ஒரு கருத்தை எழுதுக

iX1 லாங்-வீல்பேஸ் (LWB) அதிக சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது. இது 531 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.

BMW iX1 Longwheelbase

  • iX1 LWB ஆனது குளோஸ்டு கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல்கள் உட்பட சிறிய வடிவமைப்பு மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது.

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 10.7-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் கர்வ்டு டிஸ்பிளே செட்டப்பை பெறுகிறது.

  • பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும்.

  • டூயல் மோட்டார் செட்டப் உடன் 66.4 kWh பேட்டரி பேக் இதில் உள்ளது. மோட்டார் செட்டப் 204 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கும்.

  • ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னுடன் வருகிறது.

BMW iX1 இந்தியாவில் முதன்முதலில் 2023 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அதன் நீண்ட வீல்பேஸ் (LWB) பதிப்பு பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 நிகழ்வின் மூலமாக இந்தியாவில் களமிறங்கியுள்ளது. iX1 LWB இந்த முறை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 49 லட்சம் ஆக உள்ளது. (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). BMW இந்தியாவில் iX1 LWB -க்கான டெலிவரிகளையும் தொடங்கியுள்ளது.

வழக்கமான iX1 போன்ற தோற்றம் இருந்தாலும் EV-க்கான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

BMW iX1 Side

iX1 LWB காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் BMW iX1 போலவே உள்ளது. மற்றும் சிறிய வடிவமைப்பு மாற்றங்களை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கமாக இது குளோஸ்டு கிரில் மற்றும் புதிய வடிவிலான அலாய் வீல்களை கொண்டுள்ளது. இது iX1 -ன் வழக்கமான பதிப்பில் இருந்து ஸ்லீக்கரான LED ஹெட்லைட்கள் மற்றும் LED டெயில் லைட்ஸ் போன்ற எலமென்ட்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. iX1 LWB -ல் வேறு என்ன வீல்பேஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கேபின் மற்றும் வசதிகள்

BMW iX1 LWB front seats
BMW iX1 LWB front seats

BMW iX1 LWB -ன் டேஷ்போர்டு செட்டப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 10.7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட அதன் கர்வ்டு இன்டெகிரேட்டட் டிஸ்ப்ளே ஹைலைட்ஸ் ஆக இருக்கும். எஸ்யூவி -யில் 12-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், மசாஜ் உடன் கூடிய எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 8 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா, பார்க் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிரேக்கிங் ஃபங்ஷன் உடன் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களையும் பெற்றுள்ளது.

கிளைம்டு ரேஞ்ச்

iX1 LWB ஆனது 66.4 kWh பேட்டரி பேக் இதில் உள்ளது. விரிவான விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

66.4 kWh

கிளைம்டு ரேஞ்ச்

531 கி.மீ (எம்ஐடிசி)

பவர்

204 PS

டார்க்

250 Nm

ஆக்ஸிலரேஷன் (0-100 கிமீ/மணி)

8.6 வினாடிகள்

போட்டியாளர்கள்

BMW iX1 LWB rear

BMW iX1 ஆனது வோல்வோ EX40 ரீசார்ஜ் மற்றும் வோல்வோ C40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு க்கு நேரடி போட்டியாக இருக்கும். இது BYD அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 போன்ற கார்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on BMW ஐஎக்ஸ்1

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience