- + 6நிறங்கள்
- + 33படங்கள்
- வீடியோஸ்
வோல்வோ ex40
வோல்வோ ex40 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 592 km |
பவர் | 237.99 - 408 பிஹச்பி |
பேட்டரி திறன் | 69 - 78 kwh |
சார்ஜிங் time டிஸி | 28 min 150 kw |
top வேகம் | 180 கிமீ/மணி |
regenerative பிரேக்கிங் levels | Yes |
- 360 degree camera
- memory functions for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- voice commands
- android auto/apple carplay
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

ex40 சமீபகால மேம்பாடு
Volvo EX40 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
வோல்வோ அதன் XC40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் பெயரை ‘EX40’ எனப் மாற்றியுள்ளது. இது இப்போது 2WD (2-வீல்-டிரைவ்) மற்றும் AWD (ஆல்-வீல்-டிரைவ்) ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் கிடைக்கிறது.
Volvo EX40-ன் விலை எவ்வளவு ?
Volvo EX40 விலை ரூ. 54.95 லட்சத்தில் இருந்து ரூ. 57.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.
Volvo EX40 -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
வோல்வோ EX40 -யை இரண்டு இரண்டு வேரியன்ட்களில் வழங்குகிறது: பிளஸ் மற்றும் அல்டிமேட்.
Volvo EX40 என்ன வசதிகளை பெறுகிறது?
EX40 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர்டு முன் இருக்கைகள் (ஹீட்டிங் மற்றும் கூலிங் வசதியுடன்), பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் LED ஹெட்லைட்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது.
Volvo EX40 எவ்வளவு விசாலமானது?
வோல்வோ EX40 -ன் பின்புற இருக்கைகள் இரண்டு நபர்களுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இருக்கையின் அடிப்பகுதி குறுகியதாக இருப்பதால், தொடையின் கீழ் ஆதரவு இல்லாததால், இருக்கை பின்புறம் சற்று நிமிர்ந்தபடி உள்ளது. இருப்பினும் போதுமான அளவுக்கு முழங்கால் அறை மற்றும் ஹெட்ரூம் உள்ளது. EX40 ஆனது 460 லிட்டர் பூட் ஸ்பேஸையும், பானட்டின் கீழ் 31 லிட்டர் ஃப்ரங்க் இடத்தையும் கொண்டுள்ளது.
Volvo EX40 -ல் என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன?
எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 408 PS மற்றும் 660 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஆல்-வீல்-டிரைவ், டூயல்-மோட்டார் அமைப்புடன் இணைக்கப்பட்ட 78 kWh பேட்டரி பேக்கை பெறுகிறது. இது WLTP கிளைம்டு 418 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. EX40 ஆனது 4.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். அதே நேரத்தில் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ ஆக இருக்கும்.
150kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி EX40 -ன் பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில் 0-80 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய முடியும். 50kW DC சார்ஜர் சுமார் 2.5 மணிநேரம் எடுக்கும் மற்றும் 11kW AC சார்ஜர் அதன் பேட்டரியை 8-10 மணி நேரத்திற்குள் நிரப்பும்.
Volvo EX40 எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ADAS செயல்பாடுகளான லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்காக உள்ளன
Volvo EX40 உடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
வோல்வோ EX40 -க்கு 9 எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது: கிரிஸ்டல் ஒயிட், ஓனிக்ஸ் பிளாக், தண்டர் கிரே, சேஜ் கிரீன், கிளவுட் ப்ளூ, சில்வர் டான், பிரைட் டஸ்க், வேப்பர் கிரே மற்றும் ஃபிஜோர்ட் ப்ளூ.
நீங்கள் Volvo EX40 -யை வாங்க வேண்டுமா?
வோல்வோ EX40 ஸ்டைலாக தெரிகிறது, உயர்தர உட்புறத்தை கொண்டுள்ளது மற்றும் சிறப்பான வசதிகளுடன் வருகிறது. உயர்-செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து, இந்த குணங்கள் EX40 -யை ஓட்டுவதற்கு இன்னும் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குகிறது. எனவே தரத்தில் சமரசம் செய்யாமல் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த எலக்ட்ரிக் எஸ்யூவியை நீங்கள் தேடுகிறீர்களேயானால், EX40 கருத்தில் வைக்கலாம்.
Volvo EX40 -க்கு மாற்று என்ன?
இது கியா EV6, ஹூண்டாய் அயோனிக் 5 உடன் போட்டியிடுகிறது, மேலும் இது BMW i4 -க்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
மேல் விற்பனை ex40 e60 பிளஸ்(பேஸ் மாடல்)69 kwh, 592 km, 237.99 பிஹச்பி | Rs.56.10 லட்சம்* | ||
ex40 e80 ultimate(டாப் மாடல்)78 kw kwh, 418 km, 408 பிஹச்பி | Rs.57.90 லட்சம்* |
வோல்வோ ex40 comparison with similar cars
![]() Rs.56.10 - 57.90 லட்சம்* | ![]() Rs.48.90 - 54.90 லட்சம்* | ![]() Rs.49 லட்சம்* |