• English
  • Login / Register

MG Astor பிளாக் ஸ்டோர்ம் எடிஷன் இப்போது ரூ.14.48 லட்சத்துக்கு கிடைக்கிறது

published on செப் 07, 2023 04:48 pm by ansh for எம்ஜி ஆஸ்டர்

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பிளாக் ஸ்டோர்ம் பதிப்பு மிட்-ஸ்பெக் ஸ்மார்ட் டிரிம் அடிப்படையில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனுடன் வருகிறது

MG Astor Black Storm Edition

  • பிளாக் ஸ்டோர்ம் எடிஷனின் விலை ரூ.14.48 லட்சம் முதல் ரூ.15.77 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்).

  • குளோஸ்டர் பிளாக் ஸ்டோர்ம் எடிஷன் போலவே ஆல் பிளாக் எக்ஸ்டீரியரை பெறுகிறது.

  • உட்புறத்தில், இது சிவப்பு நிற இன்செர்ட்களுடன் கூடிய ஆல் பிளாக் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது.

  • 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகியவற்றை இது கொண்டுள்ளது.

  • ஆஸ்டர் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது: ஒரு 110PS, 1.5-லிட்டர் யூனிட் மற்றும் ஒரு 140PS, 1.3-லிட்டர் டர்போ சார்ஜ்டு யூனிட்.

எம்ஜி ஆஸ்டர் அதன் புதிய பிளாக் ஸ்டோர்ம் எடிஷனில் பிளாக்-அவுட் உடன் இணைந்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் எம்ஜி குளோஸ்டர் பிளாக் ஸ்டோர்ம் எடிஷன் போன்றே சிவப்பு சிறப்பம்சங்கள் கொண்ட பிளாக் நிறத்துடன்வருகிறது. பிளாக் ஸ்டோர்ம் பதிப்பு ஆஸ்டரின் மிட்-ஸ்பெக் ஸ்மார்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது , அதன் விலைகள் இங்கே:

விலை (எக்ஸ்-ஷோரூம்)

 

வேரியன்ட்கள் 

 

ஸ்டாண்டர்டு 

 

பிளாக் ஸ்ட்ரோம் எடிட்டர் 

 

வித்தியாசம் 

ஸ்மார்ட் MT

ரூ. 14.21 லட்சம்

ரூ. 14.48 லட்சம்

+ ரூ. 27,000

ஸ்மார்ட் CVT

ரூ. 15.50 லட்சம்

ரூ. 15.77 லட்சம் 

+ ரூ. 27,000

பிளாக் ஸ்டோர்ம் எடிஷன்  வழக்கமான ஆஸ்டர் ஸ்மார்ட்டை விட ரூ.27,000 கூடுதல் விலையில் கிடைக்கும்.

காஸ்மெட்டிக் மாற்றங்கள் 

MG Astor Black Storm Edition Side

எக்ஸ்டீரியரில், ஸ்பெஷல் எடிஷனான ஆஸ்டர் ஒரு தனித்துவமான ஆல் பிளாக் ஹனிகோம்ப் கிரில், முன் மற்றும் பின்புற பிளாக் கலர் பம்ப்பர்கள், ஸ்மோக்டு ஹெட் லேம்ப்ஸ் மற்றும் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் முழு-பிளாக் சிகிச்சையைப் பெறுகிறது. இந்த பிளாக் நிறத்துடன் கூடுதலாக, இது சிவப்பு நிற முன் பிரேக் காலிப்பர்களையும் பெறுகிறது. ஸ்பெஷல் எடிஷனை அடையாளம் காண ஒவ்வொரு முன் ஃபெண்டரிலும் “பிளாக் ஸ்ட்ரோம்” பேட்ஜ் உள்ளது.

MG Astor Black Storm Edition Cabin

காரின் உள்ளே, இது அதே போன்ற  கலர் ஸ்கீமை பெறுகிறது. கேபின் இருக்கைகளில் சிவப்பு நிற ஸ்டிச் உடன் ஆல் பிளாக் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது. இது ஸ்டீயரிங், ஏசி வென்ட்கள் மற்றும் ஆல் பிளாக் கன்சோலில் ரெட் இன்செர்ட்களை பெறுகிறது.

ஏதாவது புதிய வசதிகள் இருக்கின்றதா ?

 

MG Astor Black Storm Edition Dashboard

பிளாக் ஸ்டோர்ம் எடிஷன் முதன்மையாக இந்த விலையில் காஸ்மெட்டிக் மாற்றங்களை கொண்டுவருகிறது மற்றும் அம்சங்களின் பட்டியல் அப்படியே உள்ளது. இருப்பினும், இது வழக்கமான ஆஸ்டர் ஸ்மார்ட் வேரியன்டில் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டத்தை பெறுகிறது. எம்ஜி காம்பாக்ட் எஸ்யூவி -யானது ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: MG தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது

பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் வேரியன்ட்-ல் டூயல் முன் ஏர்பேக்குகள், ABS வித் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவற்றை வழங்குகிறது.

ஒரே ஒரு பவர்டிரெய்ன் 

MG Astor Turbo-petrol Engine

எம்ஜி ஆஸ்டர் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (140PS/220Nm) 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (110PS/144Nm) 6 உடன் இணைக்கப்பட்டுள்ளது. 6 -வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT கியர்பாக்ஸ். பிளாக் ஸ்டோர்ம் எடிஷன் 1.5-லிட்டர் இன்ஜின் ஆப்ஷனை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மட்டுமே பெறுகிறது.

விலை& போட்டியாளர்கள்

MG Astor

எம்ஜி ஆஸ்டரின் விலை ரூ.10.82 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிஷன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகியவற்றின் மேட் பதிப்புகளுடன் போட்டியிடும் போது, பிளாக் ஸ்டோர்ம் எடிஷன், கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் போன்றவற்றுக்கு விலை குறைவான மாற்றாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட் மற்றும் வரவிருக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகிய காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கும் இது போட்டியாக இருக்கும்.

 

மேலும் படிக்க: எம்ஜி ஆஸ்டர் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on M g ஆஸ்டர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience