2024 பிப்ரவரி மாத காம்பாக்ட் SUV விற்பனையில் Maruti Grand Vitara -வை வீழ்த்தி முதலிடம் பிடித்தது Hyundai Creta
published on மார்ச் 13, 2024 03:24 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் கிரெட்டா 15000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி இந்தியாவில் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை எட்டியது.
பிப்ரவரி 2024 மாதத்தில் ஹூண்டாய் கிரெட்டா மாருதி கிராண்ட் விட்டாராவை முந்தி மாதாந்திர (MoM) நேர்மறையான முடிவுடன் விற்பனை அட்டவணையில் அதன் முதல் இடத்தைப் பிடித்தது. இந்தியாவில் கடந்த மாதம் 45000 காம்பாக்ட் எஸ்யூவி -கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் இதோ:
காம்பாக்ட் எஸ்யூவி-கள் & கிராஸ்ஓவர்கள் |
||||||||
|
பிப்ரவரி |
ஜனவரி |
|
|
|
|
|
|
ஹூண்டாய் கிரெட்டா |
15276 |
13212 |
15.62 |
34.01 |
35.44 |
-1.43 |
12316 |
|
|
11002 |
13438 |
-18.12 |
24.49 |
31.23 |
-6.74 |
10459 |
|
கியா செல்டோஸ் |
6265 |
6391 |
-1.97 |
13.94 |
27.25 |
-13.31 |
10275 |
|
டொயோட்டா ஹைரைடர் |
5601 |
5543 |
1.04 |
12.47 |
11.24 |
1.23 |
4239 |
|
ஹோண்டா எலிவேட் |
3184 |
4586 |
-30.57 |
7.08 |
0 |
7.08 |
4530 |
|
|
1286 |
1275 |
0.86 |
2.86 |
5.63 |
-2.77 |
1875 |
|
|
1137 |
1082 |
5.08 |
2.53 |
6.06 |
-3.53 |
2099 |
|
|
1036 |
966 |
7.24 |
2.3 |
3.46 |
-1.16 |
870 |
|
|
127 |
231 |
-45.02 |
0.28 |
0 |
0.28 |
137 |
|
|
44914 |
46724 |
-3.87 |
|
|
|
|
முக்கிய சிறப்பம்சங்கள்
-
பிப்ரவரி 2024 மாதத்தில் ஹூண்டாய் கிரெட்டா 15000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி அதிக விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி -யாக உருவெடுத்தது. இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கும் வகையில் மாதாந்திர விற்பனையில் 15 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஹூண்டாய் கிரெட்டாவிற்கான விற்பனை புள்ளிவிவரங்கள் 2015 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் காட்டுகின்றன.
-
கிரெட்டாவைத் தவிர மாருதி கிராண்ட் விட்டாரா மட்டுமே 10000 யூனிட்களின் விற்பனை இலக்கைத் தாண்டிய ஒரே காம்பாக்ட் SUV ஆகும் பிப்ரவரியில் 11000 யூனிட்கள் விற்கப்பட்டன. எவ்வாறாயினும் கிராண்ட் விட்டாரா மாதாந்திர விற்பனையில் 2400 யூனிட்டுகளுக்கு மேல் சரிவை சந்தித்தது. மேலும் அதன் வருடாந்திர சந்தை பங்கும் கிட்டத்தட்ட 7 சதவீதம் குறைந்துள்ளது.
-
கியா செல்டோஸ் கடந்த மாதம் 6000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாதாந்திர நிலையான தேவையைத் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் பிப்ரவரி 2024-இல் அதன் விற்பனை கடந்த ஆறு மாதங்களில் அதன் சராசரி விற்பனையை விட கிட்டத்தட்ட 4000 யூனிட்கள் குறைவாகவே இருந்தது.
-
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் பிப்ரவரி 2024 மாதத்தில் நிலையான விற்பனையை வெளிப்படுத்தியது. டொயோட்டா கடந்த மாதம் 5500 யூனிட்டுகளுக்கு மேல் ஹைரைடரை விற்பனை செய்துள்ளது.
மேலும் பார்க்க: Hyundai Creta N Line மற்றும் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
-
பிப்ரவரி 2024 மாதம் ஹோண்டா எலிவேட் மாதாந்திர விற்பனையில் 30 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தது. இருப்பினும் எலிவேட் எஸ்யூவி -யின் 3000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையானது . இந்த செக்மென்ட்டில் எலிவேட்டின் தற்போதைய சந்தை பங்கு 7 சதவீதமாக உள்ளது.
-
ஃபோக்ஸ்வேகன் டைகுனின் மாதாந்திர விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை பிப்ரவரி 2024-இல் 1200-க்கும் மேற்பட்ட டைகுன் எஸ்யூவி -கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கிடையில் ஸ்கோடா குஷாக் மாதாந்திர விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது அதன் விற்பனை இலக்கான 1000 யூனிட்களையும் தாண்டியது. இருப்பினும் இது டைகுனின் பிப்ரவரி விற்பனையுடன் ஒப்பிடும் போது 149 யூனிட்கள் குறைவாகவே இருந்தது.
-
MG ஆஸ்டர் மாதாந்திர விற்பனையில் நேர்மறையான வளர்ச்சியை அடைந்தது கடந்த மாதம் 1000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
-
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் பிப்ரவரி 2024-இல் குறைந்த விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி -யாக இருந்தது மொத்தமாகவே 127 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful