Hyundai Creta N Line மற்றும் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
published on மார்ச் 12, 2024 08:06 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா செல்டோஸ் மட்டுமே 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனுடன் வரும் ஒரே எஸ்யூவி ஆகும்.
ஹூண்டாய் கிரெட்டா N லைன் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த எஸ்யூவியின் வசதிகள், விவரங்கள் மற்றும் மைலேஜ் பற்றிய அனைத்து விவரங்களையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் பிரத்தியேகமாக கிடைக்கும் கிரெட்டா N லைன் காம்பாக்ட் எஸ்யூவி -களின் இதேபோன்ற சக்திவாய்ந்த வேரியன்ட்களுக்கு முக்கிய போட்டியாக இருக்கின்றது. கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக். அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் கிரெட்டா N லைன் காரில் மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
விவரங்கள் |
ஹூண்டாய் கிரெட்டா N லைன் |
கியா செல்டோஸ் |
ஃபோக்ஸ்வேகன் டைகுன் |
ஸ்கோடா குஷாக் |
இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
160 PS |
160 PS |
150 PS |
150 PS |
டார்க் |
253 Nm |
253 Nm |
250 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு iMT / 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT |
கிளைம்டு ரேஞ்ச் |
18 கிமீ/லி (MT) / 18.2 கிமீ/லி (DCT) |
17.7 கிமீ/லி (iMT) / 17.9 கிமீ/லி (DCT) |
18.61 கிமீ/லி (MT) / 19.01 கிமீ/லி (DCT) |
18.60 கிமீ/லி (MT) / 18.86 கிமீ/லி (DCT) |
முக்கியமான விவரங்கள்
-
ஹூண்டாய் கிரெட்டா N லைன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT ஆட்டோமேட்டிக்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கியா செல்டோஸை விட சற்று சிறந்த மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி -களை விட மிகவும் சிக்கனமானது.
-
செல்டோஸ் கிரெட்டா N லைன் போன்ற அதே 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இருப்பினும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து எஸ்யூவி -களிலும் இது குறைந்த மைலேஜை வழங்குகிறது. இருப்பினும் செல்டோஸ் 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) டிரான்ஸ்மிஷனுடன் வரும் ஒரே சிறிய எஸ்யூவி ஆகும்.
மேலும் பார்க்க: Hyundai Creta N Line மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
-
டைகுன் மற்றும் குஷாக்கின் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கிரெட்டா N லைன் மற்றும் செல்டோஸில் உள்ளதை விட 10 PS குறைவான சக்தி வாய்ந்தது. இருப்பினும் ஃபோக்ஸ்வேகனின் காம்பாக்ட் எஸ்யூவி DCT ஆட்டோமேட்டிக்கில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து எஸ்யூவி -களை விட அதிக மைலேஜை வழங்குகிறது.
-
ஸ்கோடா குஷாக் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி -யின் மைலேஜ் உடன் கிட்டத்தட்ட பொருந்துகிறது. ஆனால் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனில் உள்ள டைகுனை விட மைலேஜ் சற்று குறைவாக உள்ளது.
-
ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் இன்ஜின் யூனிட் பெர்ஃபாமன்ஸ் உடன் கூடிய சிலிண்டர் டெக்னாலஜியை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டெக்னாலஜி நான்கு இன்ஜின் சிலிண்டர்களில் இரண்டை இன்ஜின் சுமையின் கீழ் இல்லாதபோது ஆஃப் செய்து வைக்கின்றது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள மைலேஜ் புள்ளிவிவரங்கள் அந்தந்த நிறுவனங்களால் கிளைம் செய்யப்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும். டிரைவிங் மோட்கள், வாகன நிலை மற்றும் காலநிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் உண்மையான மைலேஜில் வேறுபாடு இருக்கலாம்.
எனவே ஃபோக்ஸ்வேகன் டைகுன் இங்கு மிகவும் சிறப்பான மைலேஜ் கொண்ட காம்பாக்ட் எஸ்யூவியாக உள்ளது. மறுபுறம் கியா செல்டோஸ் குறைந்த மைலேஜை வழங்குகிறது. ஆனால் 6-ஸ்பீடு iMT ஆப்ஷன் உள்ளது. ஒட்டுமொத்தமாக ஹூண்டாய் கிரெட்டா N லைன் கிளைம் செய்யப்படும் மைலேஜ் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஈர்க்கக்கூடியதாக இல்லை.
விலை
ஹூண்டாய் கிரெட்டா N லைன் |
கியா செல்டோஸ் |
ஃபோக்ஸ்வேகன் டைகுன் |
ஸ்கோடா குஷாக் |
ரூ.16.82 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் (அறிமுகம்) |
ரூ.15 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை |
ரூ.16.77 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை |
ரூ.15.99 லட்சம் முதல் ரூ.20.49 லட்சம் |
விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை இந்த எஸ்யூவி -களின் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் படிக்க: கிரெட்டா N லைன் ஆன் ரோடு விலை