• English
  • Login / Register

Hyundai Creta EV: காரில் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்

published on ஜனவரி 02, 2025 07:18 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காராக கிரெட்டா EV இருக்கும்.

Hyundai Creta EV what to expect

இப்போது, ​​உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் விரைவில் வெளிவரும். இது ஏற்கனவே சில முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், பிரபலமான ஹூண்டாய் எஸ்யூவியின் முழு மின்சார பதிப்பைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இந்தக் கதையில், 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் கிரெட்டா EV அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஐந்து முக்கிய விஷயங்களை நாங்கள் உள்ளடக்கியுள்ளோம்:

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் மிகப் பிரபலமான கார்களில் ஒன்றான கிரெட்டா -வில் எலக்ட்ரிக் பதிப்பு மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கடந்த சில மாதங்களில் சோதனை செய்யப்படும் போது ஹூண்டாய் கிரெட்டா EV படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக கிரெட்டா EV -யில் எதிர்பார்க்கக்கூடிய 5 முக்கிய விஷயங்கள் இங்கே:

புதிய வடிவமைப்பைப் கொண்டிருக்கலாம்

ஆல்-எலக்ட்ரிக் கார் என்பதை காட்டும் வகையில் கிரெட்டா EV வழக்கமான ICE கிரெட்டாவை விட வடிவமைப்பில் சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். குளோஸ்டு-ஆஃப் கிரில் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் -க்கான வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை ஆகியவற்றை இது கொண்டிருக்கலாம்.

Hyundai Creta LED DRLs

செங்குத்தாக கொடுக்கப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் ரேப்பரவுண்ட் கனெக்டட் எல்இடி டெயில் லைட்களுடன், முன் மற்றும் பின்புறத்தில் அதே கனெக்டட் லைட்டிங் செட்டப்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வழக்கமான கேபின்

சோதனை காரின் படங்களை பார்க்கையில் கிரெட்டா EV -ன் கேபின் வழக்கமான மாடலுடன் ஒற்றுமையைக் கொண்டிருக்கலாம். சில சோதனை கார்கள் டூயல் டோன் உட்புறம் மற்றும் டூயல் ஸ்கிரீன் செட்டப் இருக்கும் என தெரிந்தது. பெரிய ஹூண்டாய் அயோனிக் 5 EV -யை போலவே டிரைவ் செலக்டர் லீவருடன் 3-ஸ்போக் ஸ்டீயரிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பார்க்கவும்: 2024 ஆம் ஆண்டில் கார்தேக்கோ யூடியூப் சேனலில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் இங்கே

தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Hyundai Creta cabin

ICE மாடலில் உள்ள 10.25-இன்ச் யூனிட்டை விட பெரிய டச் ஸ்க்ரீன் உடன் கிரெட்டா EV -யை ஹூண்டாய் கொடுக்கிறது. ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை அடங்கும். நிலையான ICE-பவர்டு கிரெட்டாவை விட ஹூண்டாய் இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

பாதுகாப்புக்காக அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டா EV பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்

கிரெட்டா EV காரின் எலக்ட்ரிக் பவர் ட்ரெயின் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் இது 400 கி.மீ கிளைம்டு ரேஞ்ச் மற்றும் ஒரே ஒரு மோட்டார் செட்டப்பை கொண்ட பல பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் படிக்க: இந்தியாவில் 2025-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில எலக்ட்ரிக் கார்கள்

வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை

ஹூண்டாய் கிரெட்டா EV ஜனவரி 17, 2025 அன்று விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா பிஇ 6, MG ZS EV, டாடா கர்வ்வ் EV மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள மாருதி மற்றும் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக கிரெட்டா EV  இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா எலக்ட்ரிக்

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வாய்வே மொபிலிட்டி eva
    வாய்வே மொபிலிட்டி eva
    Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா ev
    டாடா சீர்ரா ev
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience