• English
  • Login / Register

2023 Hyundai i20 N Line ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது, விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

published on செப் 22, 2023 03:10 pm by rohit for ஹூண்டாய் ஐ20 n line 2021-2023

  • 25 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் i20 N லைன், முன்பு வழங்கப்பட்ட 6-ஸ்பீடு iMT (கிளட்ச்லெஸ் மேனுவல்) கியர்பாக்ஸுக்கு பதிலாக இப்போது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இப்போது கிடைக்கிறது, இதன் விளைவாக, குறைவான தொடக்க விலையில் இந்த கார் கிடைக்கிறது.

2023 Hyundai i20 N Line facelift

  • ஹூண்டாய் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்டின் விலையை ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.12.32 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயித்துள்ளது.

  • புதிய மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் அதன் தொடக்க விலையானது ரூ.20,000 குறைந்துள்ளது.

  • i20 N லைன் முதன்முதலில் 2021 -ல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

  • இப்போது சற்று மாற்றம் செய்யப்பட்ட கிரில், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட LED ஹெட்லைட்களை பெறுகிறது.

  • உள்ளே, அது இன்னும் முழுவதும் சிவப்பு சிறப்பம்சங்கள் கொண்ட கருப்பு தீம் மூலம் தொடர்கிறது.

  • இப்போது ஆறு ஏர்பேக்குகள், ESC மற்றும் TPMS ஆகியவை ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றன.

ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்திய குறுகிய காலத்துக்குள்ளாகவே , ஸ்போர்ட்டியர் தோற்றத்திலான ஹூண்டாய் i20 என் லைன் ஃபேஸ்லிஃப்ட் இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் i20 N லைன் விற்பனைக்கு வந்ததில் இருந்து பெறக்கூடிய முதல் அப்டேட் ஆகும். இது முன்பை போலவே இன்னும் இரண்டு பரந்த டிரிம்களில் கிடைக்கிறது: N6 மற்றும் N8, ஆனால் முந்தையதை இப்போது DCT உடன் கிடைக்கும்.

மாற்றியமைக்கப்பட்ட விலை

டிரான்ஸ்மிஷன்

N6

N8

MT

ரூ. 9.99 லட்சம்

ரூ. 11.22 லட்சம்

DCT

ரூ. 11.10 லட்சம்

ரூ. 12.32 லட்சம்

ஃபேஸ்லிஃப்ட்டுடன், i20 N லைன் இப்போது iMT ஷிஃப்டருக்கு (கிளட்ச்லெஸ் மேனுவல்) பதிலாக மேனுவல் கியர்பாக்ஸை பெறுகிறது. இது ஹூண்டாய் நிறுவனம் i20 N லைனை ரூ. 10 லட்சத்தில் இருந்து வழங்க உதவியுள்ளது, மேலும் இது ரூ. 20,000 விலை குறைவான உள்ளது. மேலும், அடிப்படை N6 டிரிம் DCT கியர்பாக்ஸுடனும் கிடைக்கும்.

வெளியில் என்ன மாறியிருக்கிறது ?

2023 Hyundai i20 N Line facelift grille
2023 Hyundai i20 N Line LED headlights

வழக்கமான i20 ஃபேஸ்லிஃப்ட்டில் காணப்படுவது போல், i20 N லைன் குறைந்தபட்ச ஒப்பனை மாற்றங்களையும் பெறுகிறது. மாற்றப்பட்ட முன்பக்க பம்பர், புதிய வடிவிலான கிரில் இன்செர்ட் மற்றும் அப்டேட்டட் LED ஹெட்லைட்கள் ( இன்வெர்ட்டட் LED DRL ஸ்ட்ரிப்ஸ்) ஆகியவை இதில் அடங்கும்.

2023 Hyundai i20 N Line facelift

பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, புதிய அலாய் வீல் வடிவமைப்பு மட்டுமே பெரிய மாற்றமாக தெரிகிறது. புதிய i20 N லைனின் பின்புறம் ஏறக்குறைய மாறாமல் உள்ளது, ஏனெனில் இது Z- வடிவ லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் டிப்ஸ் ஆகியவற்றுடன் அதே LED டெயில்லைட் வடிவமைப்பை இந்த கார் கொண்டுள்ளது.

2023 Hyundai i20 N Line red brake calipers

ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட மாடலாக இருப்பதால், i20 N லைன் ரெட் பிரேக் காலிப்பர்கள், ரெட் இன்செர்ட்கள் மற்றும் 'N Line' மோனிகர்களுடன் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. கார் தயாரிப்பாளர் i20 N லைன் 2023 மாடலை ஐந்து மோனோடோன் மற்றும் புதிய அபிஸ் பிளாக் ஷேட் உட்பட இரண்டு டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது.

இதையும் பாருங்கள்: Mercedes-Maybach GLS எஸ்யூவியை வாங்கிய பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு

கேபினுக்கு பெரிய அப்டேட்கள் எதுவும் இல்லை

2023 Hyundai i20 N Line cabin

ஹூண்டாய் இந்த அப்டேட்டில்  i20 N லைனின் கேபினில் எதையும் பெரிதாக மாற்றியமைக்கவில்லை. சுற்றிலும் ரெட் ஆக்ஸன்ட்களை கொண்டிருக்கும் அதே சமயம் கருப்பு நிற தீம் டேஷ்போர்டையே கொண்டுள்ளது. 2023 i20 N லைன் N லோகோவுடன் கூடிய லெதரைட் இருக்கை கவர்கள், வடிவமைப்பு மற்றும் மாறுபட்ட சிவப்பு தையல் மற்றும் சிவப்பு சுற்றுப்புற விளக்குகள் ஆகியவற்றைப் பெறுகிறது. அதன் அம்சங்களின் தொகுப்பில் உள்ள ஒரே சிறிய மாற்றம், முன்பக்கத்தில் டைப்-சி யூ.எஸ்.பி போர்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

i20 N லைனின் அம்சங்கள் பட்டியலில் வேறு எந்த அப்டேட்களும் செய்யப்படவில்லை. இது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் தொடர்கிறது.

2023 Hyundai i20 N Line six airbags

ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), அனைத்து பயணிகளுக்கும் நினைவூட்டலுடன் கூடிய 3-பாயின்ட் சீட்பெல்ட் மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSM) ஆகியவற்றை உள்ளடக்கிய 35 பாதுகாப்பு அம்சங்களை இது இப்போது ஸ்டாண்டர்டாக இந்த கார் பெறுகிறது.

இன்ஜினில் மிக முக்கியமான மாற்றம்

2023 Hyundai i20 N Line 6-speed MT

இந்த அப்டேட் உடன், ஹூண்டாய் முன்பு வழங்கப்பட்ட 6-ஸ்பீடு iMT கியர்பாக்ஸை 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனாக மாற்றியுள்ளது. ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய ஹேட்ச்பேக் அதன் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனையும் 120PS/172Nm 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இரண்டு வேரியன்ட்களிலும் கிடைக்கும்.

இதையும் பாருங்கள்: 5 படங்களில் ஹூண்டாய் எக்ஸ்டரின் பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட்டை பாருங்கள்

போட்டியாளர்கள்

2023 Hyundai i20 N Line rear

இந்த காரின் ஒரே ஒரு நேரடி போட்டியாளர் டாடா ஆல்ட்ராஸ் டர்போ ஆகும், மேலும் இனிமேல் புதிதாக வரவிருக்கும் டாடா ஆல்ட்ரோஸ் ​​ரேசரையும் எதிர்கொள்ளும். i20 N லைன் மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா மற்றும் டாடா ஆல்ட்ரோஸ் ஆகிய ப்ரீமியம் ஹேட்ச்பேக்குகளுக்கு ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட மாற்று தேர்வாகவும் இது இருக்கும். 

மேலும் படிக்க: ஹீண்டாய் i20 ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Hyundai ஐ20 n line 2021-2023

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • வாய்வே மொபிலிட்டி eva
    வாய்வே மொபிலிட்டி eva
    Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience