சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் அறிமுகமாலாம் என எதிர்பார்க்கப்படும் 6 கார்கள் இதோ

published on மே 03, 2023 06:09 pm by tarun for மாருதி ஜிம்னி

2023 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு கார்கள் இறுதியாக மே மாதத்தில் சந்தையில் நுழையக்கூடும்.

உற்சாகமான மற்றும் முக்கியமான அறிமுகங்களின் மற்றொரு மாதம் இது. நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கும் சில கார்கள் 2023 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் வரிசையாக வெளிவர உள்ளன. மாருதி இறுதியாக பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கியாவிலிருந்தும் ஏதாவது புதுமையாக வெளிவரக்கூடும். மே மாதத்தில் நாம் எதிர்பார்க்கும் முதன்மையான ஆறு கார்கள் இதோ:

மாருதி ஜிம்னி

எதிர்பார்க்கப்படும் விலை - 10 லட்சம் ரூபாய் முதல்

2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்த மாதம் மாருதி ஜிம்னி காரின் விலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஜிப்ஸிக்கான மாற்றான இது, ஐந்து கதவு பதிப்பில் 4×4 ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். மாருதியின் நம்பகமான 103பிஎஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கொடுக்கப்படும். 9 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் ஏசி, பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் அதிகபட்சம் ஆறு ஏர்பேகுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம். அதே லைஃப்ஸ்டைல் எஸ்யூவி ஸ்பேஸுடன் மிகவும் வித்தியாசமான அணுகுமுறையுடன் கூடிய மஹிந்திரா தார் காருக்கு வலுவான போட்டியாக இது இருக்கும்.

டாடா அல்ட்ரோஸ் CNG

எதிர்பார்க்கப்படும் விலை - 7.35 லட்சம் ரூபாய் முதல்

சிஎன்ஜி பேன்ட்வேகன் வரிசையில் டாடா அல்ட்ராஸ் இணைந்துள்ளது, இது மே மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரோஸ் சிஎன்ஜி -யின் சிறப்பம்சம் அதன் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் அமைப்பாக இருக்கும், இது வழக்கமான சிஎன்ஜி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது நிறைய பூட் ஸ்பேஸை விடுவிக்கிறது. 73.5 பிஎஸ் பவரையும், 103 நிமீ டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜின் அதில் பயன்படுத்தப்படும். இதற்கு மாற்றாக, மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா CNG கார்களையும் பார்க்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர்

எதிர்பார்க்கப்படும் விலை - 6 லட்சம் ரூபாய் முதல்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மே மாதம் வெளியிடப்படடும். எக்ஸ்டர் ஒரு மைக்ரோ எஸ்யூவியாக இருக்கும், இது வென்யூவுக்கு கீழே நிலைநிறுத்தப்படும். பெட்டி போன்ற மற்றும் நேரான ஸ்டைலுடன், கிராண்ட் i10நியோஸுக்கு முரட்டுத்தனமான மற்றும் எஸ்யூவி போன்ற மாற்றாக இதைக் காணலாம். அம்சங்களை பொறுத்தவரை, எலக்ட்ரிக் சன்ரூஃப், பெரிய டச் ஸ்கிரீன் அமைப்பு, சீர்வேகக் கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற கேமரா ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் நிறுவனம் இந்த மைக்ரோ எஸ்யூவியை நியோஸின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்குகிறது. டர்போ-பெட்ரோல் இன்ஜினின் தேர்வையும் எதிர்பார்க்கலாம்.

கியா செல்டோஸ் 2023

எதிர்பார்க்கப்படும் விலை - 11 லட்சம் ரூபாய் முதல்

மே மாதத்தில் ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸ் காரின் அறிமுகம் நடைபெறும் அல்லது சில விவரங்களை நாம் பார்க்கலாம் . காம்பேக்ட் எஸ்யூவி அதன் அசல் தோற்றத்தை பராமரிக்கும் அதேநேரத்தில் காரின் உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க காட்சி மேம்பாடுகளைப் பெறும். ஏற்கனவே அம்சங்கள் நிறைந்த கேபினில் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, அகலமான சன்ரூஃப், ஹீட்டட் ஃபிரன்ட் சீட்கள் மற்றும் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஆகியவற்றிற்கான புதிய டூயல் 10.25 இன்ச் டிஸ்பிளே கூடுதலாக வழங்கப்படும். 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் அதே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் தொடரும். கரென்ஸின் 160 பிஎஸ் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் தோற்ற மாற்றத்துடன் வழங்கப்படும்.

பிஎம்டபிள்யூ X3 M40i

எதிர்பார்க்கப்படும் விலை - ரூ 90 லட்சம்

பிஎம்டபிள்யூ X3 காரின் ஸ்போர்ட்டியான வேரியன்ட் ஏற்கனவே ப்ரீ-ஆர்டரில் கிடைக்கிறது மற்றும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும். M40i காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்திற்கான 'எம் ஸ்போர்ட்' குறிப்பிட்ட கூறுகளைப் பெறுகிறது, இது வழக்கமான எக்ஸ் 3 வேரியன்ட் கார்களை விட மிகவும் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கிறது. 3 லிட்டர் ட்வின்-டர்போ இன்லைன் ஆறு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் X3 M40i உடன் வழங்கப்படும், இது 360 பிஎஸ் மற்றும் 500 நிமீ. செயல்திறனைக் கொண்டுள்ளது. இது வெறும் 4.9 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

பிஎம்டபிள்யூ M2

எதிர்பார்க்கப்படும் விலை - ரூ 1 கோடி

ஸ்போர்ட்டி பிஎம்டபிள்யூ பற்றி பேசுகையில், இது ஜெர்மன் கார் தயாரிப்பாளரின் ஸ்போர்ட்டி கார்களில் ஒன்றாக இருக்கும். காம்பேக்ட் ஸ்போர்ட்ஸ் கூபே M2, உலகின் மிகச்சிறிய பிஎம்டபிள்யூ -க்களில் ஒன்றாகும், மேலும் அதன் சமீபத்திய ஜெனரேஷன் கார் மே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். இந்த கார் 460 பிஎஸ் ஆற்றலையும், 550 நிமீ டார்க் திறனையும் வழங்கும் 3 லிட்டர் ட்வின் டர்போ 6 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 0-100 கிமீ/மணி வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடுகிறது.

(அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோருமுக்கானவை)

t
வெளியிட்டவர்

tarun

  • 45 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி ஜிம்னி

Read Full News

explore similar கார்கள்

ஹூண்டாய் எக்ஸ்டர்

Rs.6.13 - 10.28 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி27.1 கிமீ / கிலோ
பெட்ரோல்19.4 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

டாடா ஆல்டரோஸ்

Rs.6.65 - 10.80 லட்சம்* get சாலை விலை
டீசல்23.64 கேஎம்பிஎல்
சிஎன்ஜி26.2 கிமீ / கிலோ
பெட்ரோல்19.33 கேஎம்பிஎல்
மே சலுகைகள்ஐ காண்க

பிஎன்டபில்யூ எக்ஸ்3

Rs.68.50 - 87.70 லட்சம்* get சாலை விலை
டீசல்16.55 கேஎம்பிஎல்
பெட்ரோல்16.35 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

மாருதி ஜிம்னி

Rs.12.74 - 14.95 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்16.94 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.86.92 - 97.84 லட்சம்*
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை