சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Altroz ​​Racer R1 மற்றும் Hyundai i20 N Line N6: விவரங்கள் ஒப்பீடு

published on ஜூன் 11, 2024 05:09 pm by ansh for tata altroz racer

இரண்டு கார்களில் ஆல்ட்ரோஸ் ரேசர் மிகவும் விலை குறைவாக உள்ளது. அதேசமயம் இதில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை.

ஆல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் காரின் ஸ்போர்ட்டியர் பதிப்பாக சமீபத்தில் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது சந்தையில் அதன் நேரடி போட்டியாளராக இருப்பது ஹூண்டாய் i20 N லைன் மட்டுமே. அவற்றின் பேஸ் வேரியன்ட்களின் விலை கிட்டத்தட்ட நெருக்கமாக இருப்பதால் எது சிறந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

விலை

எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியன்ட்

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் R1

ஹூண்டாய் i20 N லைன் N6

மேனுவல்

ரூ 9.49 லட்சம்*

ரூ.9.99 லட்சம்

ஆட்டோமெட்டிக்

இல்லை

ரூ.11.15 லட்சம்

* ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் விலை விவரங்கள் அறிமுகத்துக்கானவை

இரண்டு ஹேட்ச்பேக்குகளின் என்ட்ரில் லெவல் வேரியன்ட்களை பார்க்கும் போது ஹூண்டாய் நிறுவன காரை விட டாடா ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக் விலை ரூ.50,000 வரை குறைவாக உள்ளது. அதே நேரத்தில் i20 N லைனில் ரூ. 1.16 லட்சம் கூடுதலாக கொடுக்க தயாராக இருந்தால் பேஸ்-ஸ்பெக் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் கிடைக்கும்.

பவர்டிரெய்ன்

விவரங்கள்

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர்

ஹூண்டாய் i20 N லைன்

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

120 PS

120 PS

டார்க்

170 Nm

172 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

இரண்டு மாடல்களும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின்களை பெறுகின்றன. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அவுட்புட்டை கொண்டுள்ளன மற்றும் இரண்டும் 6-ஸ்பீடு மேனுவலை ஸ்டாண்டர்டாக பெறுகின்றன. செயல்திறனைப் பொறுத்தவரை பேப்பரில் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால் i20 N லைன் 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனை பெறுகிறது. இது மிகவும் வசதியாக மட்டுமின்றி உள்ளது பேடில் ஷிஃப்டர்களுடன் (ஆல்ட்ரோஸ் ரேசரில் கிடையாது) ஓட்டுவதற்கு மிகவும் ஃபன் ஆகவும் இருக்கும்.

மேலும் படிக்க: Hyundai Creta CVT மற்றும் Honda Elevate CVT: எது நமக்கான சிறந்த செயல்திறனை வழங்குகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

வசதிகள்

அம்சங்கள்

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் R1

ஹூண்டாய் i20 N லைன் N6

வெளிப்புறம்

  • ஆட்டோ ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • LED DRLகள்

  • முன்பக்க ஃபாக் லைட்ஸ்

  • பன்னெட் மற்றும் கூரையில் வெள்ளை பின்கோடுகள்

  • முன் ஃபெண்டர்களில் ரேசர் பேட்ஜ்கள்

  • 16-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள்

  • டூயல் டிப் எக்சாஸ்ட்

  • பின்புற ஸ்பாய்லர்

  • ஹாலஜன் ஹெட்லைட்கள்

  • LED டெயில் லைட்ஸ்

  • முன் ப்ரொஜெக்டர் மூடுபனி லைட்ஸ்

  • சுற்றிலும் ரெட் ஆக்ஸன்ட்கள்

  • கிரில், முன் ஃபெண்டர்கள் மற்றும் சக்கரங்களில் N லைன் பேட்ஜ்கள்

  • டூயல் டிப் எக்சாஸ்ட்

  • 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • ரியர் ஸ்பாய்லர்

உட்புறம்

  • லெதரைட் சீட்ஸ்

  • லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் கியர் நாப்

  • லெதர் சுற்றப்பட்ட முன் பக்க ஆர்ம்ரெஸ்ட்

  • ஆரஞ்சு ஹைலைட் கொண்ட ஆல் பிளாக் கேபின் தீம்

  • "N" லோகோவுடன் லெதரைட் இருக்கைகள்

  • லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் கியர் நாப்

  • ரெட் ஹைலைட் கொண்ட ஆல் பிளாக் கேபின் தீம்

  • பேடில் ஷிஃப்டர்கள் (DCT)

  • மெட்டல் பெடல்கள்

  • டே/நைட் IRVM

இன்ஃபோடெயின்மென்ட்

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்ப்ளே

  • 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

  • 8 இச்ன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்ப்ளே

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

கம்ஃபோர்ட் வசதி

  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • ரியர் வென்ட்களுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டார்ட்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் மற்றும் ஆட்டோ ஃபோல்டிங் ORVMகள்

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • டில்ட் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஸ்டீயரிங்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • ஆம்பியன்ட் லைட்ஸ்

  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • ரியர் வென்ட்களுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

  • சன்ரூஃப்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் மற்றும் ஆட்டோ ஃபோல்டிங் ORVMகள்

  • ஸ்டீயரிங் வீலுக்கான டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்மென்ட்

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • க்ரூஸ் கன்ட்ரோல்

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்குகள்

  • EBD உடன் ABS

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • ரியர் டிஃபாகர்

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ரியர்வியூ கேமரா

  • பின்புற வைப்பர் மற்றும் வாஷர்

  • 6 ஏர்பேக்குகள்

  • EBD உடன் ABS

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட்

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • பின்புற டிஃபோகர்

  • ரியர்வியூ கேமரா

  • ரியர் வைப்பர் மற்றும் வாஷர்

வசதிகளை பொறுத்தவரையில் ஆல்ட்ரோஸ் ரேசர் R1 சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் பேக்கேஜ் மற்றும் சில கூடுதல் வசதிகளுடன் உள்ளது. இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான கம்ஃபோர்ட் மற்றும் வசதிக்கான விஷயங்களை கொண்டிருந்தாலும் கூட i20 N லைன் N6 பாதுகாப்பு என்று வரும்போது சற்று முன்னிலையில் உள்ளது.

தீர்ப்பு

இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் உங்கள் தேவைகளைப் பொறுத்து மாறுபடலாம். ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்), i20 N லைன் N6 ஒரு ஸ்போர்ட்டி டிசைன், பிரீமியம் இன்டீரியர், ஒரளவுக்கு சிறப்பான இன்ஃபோடெயின்மென்ட் பேக்கேஜ் மற்றும் நல்ல வசதிகளை வழங்குகிறது. மேலும் ரூ.1 லட்சம் கொடுக்க தயாராக இருந்தால் ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் உங்களுக்கு கிடைக்கும்.

மறுபுறம் ஆல்ட்ரோஸ் ரேசர் R1 ஒரே மாதிரியான எக்ஸ்ட்ரீயர் மற்றும் இன்ட்டீரியர் உடன் வருகிறது. மேலும் கலவையில் சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் பேக்கேஜையும் கொண்டுள்ளது. வசதிகள் உங்களுக்கு முன்னுரிமையாக இருந்தால் நீங்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷனை விரும்பினால், ஆல்ட்ரோஸ் ​​ரேசரை தேர்ந்தெடுப்பது சிறப்பாக இருக்கும். மேலும் இது மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: Tata Altroz ​​Racer மற்றும் Tata Altroz: இரண்டுக்கும் இடயே உள்ள 5 முக்கிய வித்தியாசங்கள்

ஆனால் பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் வசதியை நீங்கள் விரும்பினால் சிறந்த வசதிகளின் கலவையுடன் i20 N லைன் N6 உங்களுக்கானதாக இருக்கும்.

மேலும் படிக்க: ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆன்ரோடு விலை

a
வெளியிட்டவர்

ansh

  • 15 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா ஆல்டரோஸ் Racer

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.6.65 - 11.35 லட்சம்*
Rs.4.99 - 7.09 லட்சம்*
Rs.3.99 - 5.96 லட்சம்*
Rs.4.26 - 6.12 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.53 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை