• English
  • Login / Register

Tata Altroz ​​Racer மற்றும் Tata Altroz: இரண்டுக்கும் இடயே உள்ள 5 முக்கிய வித்தியாசங்கள்

published on ஜூன் 10, 2024 05:48 pm by samarth for tata altroz racer

  • 25 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக்  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​காரை விட சில கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது.

Tata Altroz Racer vs Tata Altroz

டாடா அல்ட்ராஸ் இப்போது ஒரு புதிய, சிறந்த ஸ்போர்ட்டியர் உடன்பிறப்பான டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் காரை பெற்றுள்ளது. பிரீமியம் ஹேட்ச்பேக்கின் இந்த எடிஷனில் காஸ்மெட்டிக் அப்டேட்கள் மட்டுமின்றி அதிக சக்தி வாய்ந்த இன்ஜின் மற்றும் புதிதாக சில விஷயங்களையும் பெறுகிறது. ஆல்ட்ரோஸ் ரேசர் உடன், டாடா இப்போது ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸையும் அப்டேட் செய்துள்ளது. இப்போது இரண்டு புதிய ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்கள் மற்றும் ஆல்ட்ரோஸ் ரேசரின் பல புதிய வசதிகளையும் இதில் கொடுத்துள்ளது. இங்கே அப்டேட்டட் ஆல்ட்ரோஸ் ​​மற்றும் ஆல்ட்ரோஸ் ​​ரேசருக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை நாங்கள் இங்கே பார்க்கலாம், இதன் மூலம் உங்களுக்காக இரண்டில் எது சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். 

வெளிப்புறம் 

Tata Altroz Racer front three-fourth

இரண்டு பிரீமியம் ஹேட்ச்பேக்குகளின் ஒட்டுமொத்த சில்ஹவுட் ஒரே மாதிரியாகவே உள்ளது. ஆனால் ​​ரேசருக்கு டூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. இரண்டு ஹேட்ச்பேக்குகளிலும் கிடைக்கும் வண்ணங்களின் பட்டியல் இங்கே:

ஆல்ட்ரோஸ் ரேசர்

ஆல்ட்ரோஸ்

  • அட்டாமிக் ஆரஞ்ச் (புதியது)

  • அவென்யூ ஒயிட்

  • பியூர் கிரே

  • டவுன்டவுன் ரெட்

  • அவென்யூ ஒயிட்

  • ஆர்கேட் கிரே

  • ஓபரா ப்ளூ

  • காஸ்மிக் டார்க்

ஹேட்ச்பேக்கின் புதிதாக சேர்க்கப்பட்ட ஸ்போர்டியர் மாற்றங்களாக பிளாக்-அவுட் ஹூட் முதல் ரூஃப் வரை உள்ள ரேஸ் ஃபிளாக்-ஈர்க்கப்பட்ட டீக்கால்கள் ஆகியவை உள்ளன. டாடா லோகோ பிளாக்-அவுட் மற்றும் 16-இன்ச் அலாய் வீல்களில் டார்க்-ஃபினிஷ் ஆகியவை அடங்கும். கூடுதலாக ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது முன் ஃபெண்டர்களில் ஒரு தனித்துவமான 'ரேசர்' பேட்ஜையும் டெயில்கேட்டில் 'i-Turbo+' பேட்ஜையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் ஒவ்வொரு வேரியன்ட்டிலும் கிடைக்கும் வசதிகள் இவைதான்

உட்புறம்

Tata Altroz Racer interiors
Tata Altroz Steering Wheel

ரேசர் பதிப்பானது ஸ்டாண்டர்டான மாடலை போன்ற டேஷ்போர்டு செட்டப்பையே கொண்டுள்ளது. ஆனால் ஏசி வென்ட்களை சுற்றி ஆரஞ்ச் கலர் ஆக்ஸன்ட்கள், ஹெட்ரெஸ்ட்களில் "ரேசர்" எம்போஸிங் மற்றும் இருக்கைகளில் ஆரஞ்ச்-வொயிட் லைன்கள் உள்ளன. இரண்டும் லெதரெட் இருக்கைகளைப் பெற்றாலும் அவை ஸ்டாண்டர்ட் மாடல் போல இல்லாமல் ரேசரில் ஆல் பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளன. மேலும் ட்ரை-ஆரோவ் டிஸைனை கொண்டுள்ளன. இந்த மாடல்க்கு மட்டுமே தனித்துவமாக கொடுக்கப்பட்டுள்ளது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Altroz Racer Touchscreen

ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸஸில் புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்ட பிறகு இரண்டு ஹேட்ச்பேக்குகளும் இப்போது 8-ஸ்பீக்கர் செட்டப் உடன் கூடிய பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் வருகின்றன. இருப்பினும் இங்குள்ள முக்கிய வித்தியாசம் முன்பக்கத்தில் உள்ள  வென்டிலேட்டட் சீட்கள் ஆகும். இது ரேசர் பதிப்பிற்கு பிரத்தியேகமான விஷயமாகும். கூடுதல் வசதிகளில் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா ஆகியவை இப்போது இரண்டு மாடல்களிலும் கிடைக்கின்றன.

6 airbags

டாடா ஆல்ட்ரோஸ் ரேசரை மூன்று வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகளுடன் வழங்குகிறது. டாடா நிறுவனம்  ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸில் 6 ஏர்பேக்குகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட அவை ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பவர்டிரெய்ன்

ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் போல இல்லாமல் ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய நெக்ஸானிலிருந்து கடன் வாங்கிய மிகவும் சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆகியவற்றுக்கு இடையேயான ஆப்ஷனுடன் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை மட்டுமே பெறுகிறது. ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​ஐ விட கூடுதலாக 32 PS அவுட்புட்டை பெற்றாலும் கூட ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படவில்லை.

கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் (90 PS/200 Nm) பெறுகிறது. இது 5-ஸ்பீடு MT உடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆனது ஒரு பெட்ரோல்-ஒன்லி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது.

விவரங்கள்

ஆல்ட்ரோஸ் ரேசர்

ஆல்ட்ரோஸ்

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.2 லிட்டர் பெட்ரோல்

பவர்

120 PS

88 PS

டார்க்

170 Nm

115 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT

5-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு DCT

மேலும், ஆல்ட்ரோஸ் ரேசர் அறிமுகத்துடன், ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​வரிசையில் இருந்து i-Turbo பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை டாடா நிறுத்தியுள்ளது. எனவே இனிமேல் ரேசர் பதிப்பில் மட்டுமே டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கிடைக்கும். 

ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​உடன் ஒப்பிடும் போது ஆல்ட்ரோஸ் ​​ரேசரில் டூயல் டிப் எக்ஸாஸ்ட் கிடைக்கிறது. ஆல்ட்ரோஸ் ரேசரை அதன் ஸ்போர்ட்டி இயல்புடன் செல்ல த்ராட்டியான எக்சாஸ்ட் நோட்டை டாடா கொடுத்துள்ளது.

விலை

Tata Altroz Racer rear three-fourth

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரேசர் பதிப்பு மற்றும் ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​ஆகியவற்றின் விலை விவரங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன: 

ஆல்ட்ரோஸ் ரேசர்

ஆல்ட்ரோஸ்

ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் (அறிமுகம்)

ரூ.6.65 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் வரை 

ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​இன் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டை விட கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் அதிகமாக உள்ளது. ஆல்ட்ரோஸ் ரேசர் மூன்று வேரியன்ட்களில் (R1, R2, மற்றும் R3) விற்கப்பட்டாலும், ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் 6 டிரிம் லெவல்களில் கிடைக்கிறது: XE, XM, XM+, XT, XZ மற்றும் XZ+.

இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியாவுக்கானவை

மேலும் படிக்க:டாடா ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆன்-ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata ஆல்டரோஸ் Racer

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • Kia Syros
    Kia Syros
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience