டிராக் ரேசில் Hyundai i20 N மற்றும் Maruti Fronx கார்களை தோற்கடித்தது Tata Altroz Racer
published on ஜூன் 28, 2024 05:02 pm by samarth for tata altroz racer
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
2 வினாடிகளுக்கு மேல் முன்னிலையுடன் i20 N லைனை தோற்கடித்ததன் மூலம், இது வேகமான இந்திய ஹேட்ச்பேக் என்ற "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" சாதனையை படைத்துள்ளது.
-
டாடா ஆல்ட்ரோஸ், ஹூண்டாய் i20 N லைன் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ ஆகிய கார்கள் CoASTT ரேஸ் டிராக்கில் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனால் சோதிக்கப்பட்டன.
-
ஆல்ட்ரோஸ் ரேசர் ஒரு லேப் -ஐ முடிக்க குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டது: வெறும் 2 நிமிடங்கள் 21.74 வினாடிகள் மட்டுமே அது எடுத்துக் கொண்டது.
-
டாடாவின் இந்த ஹேட்ச்பேக் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் " வேகமான இந்திய ஹேட்ச்பேக்" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. i20 N லைன் மற்றும் ஃபிரான்க்ஸ் டர்போ ஆகியவை 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்களுடன் கிடைக்கின்றன.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது இந்தியாவின் சமீபத்திய ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக் ஆகும். இதில் நெக்ஸான் -லிருந்து பெறப்பட்ட 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆல்ட்ரோஸ் ரேசர் அதன் மிகவும் பொருத்தமான போட்டியாளர்களான ஹூண்டாய் i20 N லைன், டர்போ மாறுபாட்டுடன் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகிய கார்களுடன் சோதனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள CoASTT ரேசிங் ட்ராக்கில் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திக் கார்களை ஓட்டி சோதனை செய்தார் . இந்த சோதனையில் மூன்று கார்களின் லேப் -ல் நேரம் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட்டன என்பதன் விவரங்கள் இங்கே
லேப் டைம்ஸ்
மாடல் |
பதிவு செய்யப்பட்ட நேரம் |
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
2.21.74 |
ஃபிரான்க்ஸ் டர்போ |
2.22.72 |
i20 N லைன் |
2.23.96 |
டாடா ஆல்ட்ராஸ் ரேசர் 2 நிமிடம் 21.74 வினாடிகளில் லேப் -ல் வேகமான மாடலாக உருவெடுத்தது. வெறும் 1.04 வினாடிகளில் பின்தங்கி மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஹூண்டாய் i20 என் லைன் கடைசி இடத்தைப் பிடித்தது. இது ஒரு லேப்பை முடிக்க ஆல்ட்ராஸ் ரேசரை விட 2.22 வினாடிகள் அதிகம் எடுத்தது. ஆகவே இந்த சோதனையின் முடிவில் டாடாவின் ஹேட்ச்பேக் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் "வேகமான இந்திய ஹேட்ச்பேக்" என்ற பெயரை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Tata Altroz Racer: 15 படங்களில் காரை பற்றிய விரிவான விவரங்கள்
பவர்டிரெய்ன்
இந்த கார்களின் பவர் ட்ரெயின்கள் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே:
மாடல் |
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
ஹூண்டாய் i20 N லைன் |
மாருதி ஃபிரான்க்ஸ் |
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
120 PS |
120 PS |
100 PS |
டார்க் |
170 Nm |
172 Nm |
148 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
ஆல்ட்ரோஸ் ரேசர் மற்றும் i20 N லைன் ஆகியவற்றின் அவுட்புட் புள்ளிவிவரங்கள் ஒரே மாதிரியானவை. ஆனால் i20 N லைன் ஒரு சிறிய இன்ஜின் மற்றும் ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெறுகிறது. ஃபிரான்க்ஸ் மறுபுறம் ஒரு சிறிய இன்ஜின் மற்றும் குறைந்த பவர் அவுட்புட் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த மூன்று கார்களும் முடித்த லேப் நேரம் அவற்றின் பவர்டிரெய்னை மட்டும் சார்ந்தது அல்ல, அவற்றின் கையாளும் திறன்களையும் சார்ந்தது.
விலை
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
ஹூண்டாய் i20 N லைன் |
மாருதி ஃபிரான்க்ஸ் |
ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் |
ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.52 லட்சம் |
ரூ.9.73 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் (டர்போ-பெட்ரோல்) |
ஆல்ட்ரோஸ் ரேசர் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக் ஆகும். ஏனெனில் இது ஃபிரான்க்ஸ் -ன் என்ட்ரி-லெவல் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்டை விட ரூ. 24,000 மற்றும் i20 N லைனின் பேஸ்-ஸ்பெக் N6 வேரியன்ட்டை விட ரூ.50,000 குறைவாக உள்ளது.
சமீபத்திய ஆட்டோமோட்டிவ் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸ் ஆன் ரோடு விலை