Tata Altroz Racer: 15 படங்களில் காரை பற்றிய விரிவான விவரங்கள்
published on ஜூன் 24, 2024 04:47 pm by rohit for tata altroz racer
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது உள்ளேயும் வெளியேயும் ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தை பெறுகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய நெக்ஸானில் இருந்து கடன் வாங்கிய மிகவும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ் யூனிட் உடன் வருகிறது.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் வழக்கமான ஆல்ட்ரோஸ் -ன் ஸ்போர்ட்டியர் பதிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹேட்ச்பேக்கின் பெரும்பாலான விஷயங்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டு அதன் ஸ்போர்ட்டியர் தன்மைக்காக உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில் உள்ள 15 படங்களில் ஸ்போர்ட்டியர் டாடா ஆல்ட்ரோஸ் ரேசரை பற்றி நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம்:
வெளிப்புறம்
முதல் பார்வையிலேயே வழக்கமான மாடலில் இருந்து தனித்து தெரிய வைக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை நீங்கள் உடனடியாகக் காணலாம். இது டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன், புதிய வடிவிலான கிரில் மற்றும் ஹூட்டில் உள்ள இரண்டு வொயிட் லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது வழக்கமான ஆல்ட்ரோஸ் போன்ற அதே ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் பம்பர் டிசைனை கொண்டுள்ளது.
ஆல்ட்ரோஸ் ரேசரின் தோற்றம் வழக்கமான மாடலை போலவே உள்ளது. A-, B- மற்றும் C-பில்லர்கள் மற்றும் C-பில்லர் பொருத்தப்பட்ட பின்புற டோர் ஹேண்டில்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 360 டிகிரி செட்டப்பின் ஒரு பகுதியாக ஆல்ட்ரோஸ் ரேசரில் ORVM பொருத்தப்பட்ட பக்க கண்ணாடியையும், முன் ஃபெண்டர்களில் 'ரேசர்' பேட்ஜ்களையும் நீங்கள் பார்க்கலாம். ஆல்ட்ரோஸ் ரேசருக்கு ஸ்போர்ட்டியர் சைட் ஸ்கர்ட்கள் உள்ளன.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசரை ஸ்டாண்டர்ட் ஆல்ட்ரோஸில் உள்ள அதே 16-இன்ச் அலாய் வீல்களை கொடுத்துள்ளது.
பின்புறத்தில் ஆல்ட்ரோஸ் ரேசரில் ‘i-Turbo+’ பேட்ஜ் மற்றும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இது அதன் ஸ்டாண்டர்டான பதிப்பை போலவே வாஷர் மற்றும் டிஃபோக்கருடன் ஒரே மாதிரியான டெயில் லைட்கள் மற்றும் வைப்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உட்புறம்
ஆல்ட்ரோஸ் ரேசரின் மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்று பிளாக் கேபின் தீம் ஆகும். ஆனால் ஸ்டாண்டர்டான மாடலின் அதே டேஷ்போர்டு செட்டப்பை பெறுகிறது. டாடா ஸ்போர்ட்டியர் ஹேட்ச்பேக்கிற்கு ஸ்லைடிங் முன் ஆர்ம்ரெஸ்ட்டையும் ஸ்டோரேஜ் உடன் வழங்கியுள்ளது. ஏசி வென்ட்கள் மற்றும் கியர் லீவர் ஹவுஸிங்கை சுற்றி கான்ட்ராஸ்ட் ஆரஞ்சு மற்றும் வொயிட் எலமென்ட்கள் உள்ளன. இது இருக்கைகளில் ஆரஞ்சு ஸ்டிச் மற்றும் முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்களில் 'ரேசர்' எம்போஸிங் உள்ளது. டாடா அதன் ஸ்போர்ட்டியர் தன்மையை பூர்த்தி செய்ய முன் மற்றும் பின் இருக்கைகளில் ஆரஞ்சு மற்றும் வொயிட் கலர் லைனையும் கொடுத்துள்ளது.
ஆல்ட்ரோஸ் ரேசர் பேஸ் வேரியன்ட்டில் இருந்து லெதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப், லெதரெட் சீட்கள் ஆகியவற்றை பெறுகிறது. பின்புறத்தில் பயணிகள் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களை பெறுகிறார்கள் (மத்தியில் உள்ளவருக்கு இல்லை என்றாலும்) மற்றும் ஒரு ஆர்ம்ரெஸ்ட் உள்ளது.
ஆல்ட்ரோஸ் ரேசரில் 7 இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவை கொடுத்துள்ளது, அதில் ஓடோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ரீடிங்குகள், காலியாக இருக்கும் தூரம் ஆகியவை அடங்கும். ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது ஒரு பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் வருகிறது. இது இப்போது ஹேட்ச்பேக்கின் வழக்கமான வேரியன்ட்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆல்ட்ரோஸ் ரேசர் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், இந்த பிரிவில் முதல் முன் இருக்கை வென்டிலேஷன், ஒரு சன்ரூஃப் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது.
ஆல்ட்ரோஸ் ரேசரின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ESC, 360 டிகிரி கேமரா மற்றும் ரெயின்-சென்ஸிங் வைப்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் சிறந்த வேரியன்ட் இதுதான்
பவர்டிரெய்ன்கள்
நெக்ஸானின் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (120 PS/170 Nm), சிங்கிள் 6-ஸ்பீடு MT உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ள ஆல்ட்ரோஸ் ரேசரை டாடா வழங்குகிறது. தற்போதைக்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் ஸ்போர்ட்டியர் ஹேட்ச்பேக்கில் அதைச் சேர்க்க டாடா முடிவு செய்யலாம்.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் விலை மற்றும் போட்டியாளர்கள்
இது ஹூண்டாய் i20 N லைன் காருடன் போட்டியிடும். மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகிய இரண்டு சப்-4m கிராஸ்ஓவர் -களின் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கு மாற்றாக இருக்கும்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
மேலும் படிக்க: ஆல்ட்ரோஸ் ரேசர் ஆன்ரோடு விலை
0 out of 0 found this helpful