ஸ்கோடாவின் புதிய சப்-4m எஸ்யூவி -க்கு பெயரிடும் போட்டி தொடக்கம்: மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
published on பிப்ரவரி 28, 2024 07:26 pm by rohit for ஸ்கோடா kylaq
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி -யானது பிராண்டின் வழக்கமான எஸ்யூவி பெயரிடும் மரபுக்கு ஏற்ப 'K' உடன் தொடங்கி 'Q' என்ற எழுத்தில் முடிவடையும் பெயராக இருக்க வேண்டும்.
-
போட்டிக்கான பதிவுகளை ஏப்ரல் 12 2024 வரை சமர்ப்பிக்கலாம்.
-
ஒரு வெற்றியாளருக்கு புதிய எஸ்யூவி -யை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் மேலும் 10 அதிர்ஷ்டசாலிகள் ப்ராக் (Prague) செல்வதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.
-
பெயரிடும் பாணியானது ஸ்கோடாவின் மற்ற எஸ்யூவி -களான கோடியாக் (Kodiaq) குஷாக்(Kushaq) மற்றும் கரோக்(Karoq) போன்றவற்றுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
-
ஸ்கோடாவின் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பெயர்களில் க்விக் (Kwiq) கைலாக் (Kylaq) மற்றும் கைரோக்(Kyroq) ஆகியவை அடங்கும்.
-
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி -யின் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா Sub-4m SUV மார்ச் 2025-க்குள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் வரவிருக்கும் இந்த மாடலின் பெயர் இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா அதன் ரசிகர்களையே அதற்கான பெயரை தேர்ந்தேடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பெயரிடும் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது இதில் அனைவரும் பங்கேற்கலாம் புதிய ஸ்கோடா எஸ்யூவி -க்கான பெயரை பரிந்துரைக்கும் தங்கள் உள்ளீடுகளை சமர்ப்பிக்க பங்கேற்பாளர்களை அழைக்கிறது.
போட்டிக்கான விவரங்கள்
ஸ்கோடா நிறுவனத்தால் புதிய பெயரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டு நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது: அது 'K' என்ற எழுத்தில் தொடங்கி 'Q' உடன் முடிவடையும் பெயராக இருக்க வேண்டும் மேலும் அது 1 அல்லது 2 எழுத்துக்களை மட்டுமே கொண்ட வார்த்தையாக இருக்க வேண்டும். போட்டிக்கான பதிவுகள் தற்போது வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 12 2024 வரை அதிகாரப்பூர்வ போட்டி இணையதளத்தின் மூலமாகவோ அல்லது #NameYourSkoda என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியோ ஸ்கோடாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். ஒரு வெற்றியாளருக்கு புதிய ஸ்கோடா எஸ்யூவி -யை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஸ்கோடாவுடன் ப்ராக் செல்வதற்கான வாய்பை வெல்லலாம்.
ஸ்கோடா அதன் வரவிருக்கும் sub-4m எஸ்யூவி -க்கான ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பெயர்கள் அவற்றின் அர்த்தங்களுடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
-
ஸ்கோடா காரிக் (உற்சாகமாக வடிவமைக்கப்பட்டது) - 'காரிகர்' என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
-
ஸ்கோடா க்விக் (சக்தியும் புத்திசாலித்தனமும் இணக்கமாகது) - 'க்விக்' என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
-
ஸ்கோடா கைலாக் (காலத்தால் அழியாத நேர்த்தி) - 'கைலாசா' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
-
ஸ்கோடா கிமாக் (உங்களைப் போன்றே விலைமதிப்பற்றது) - 'கைமானா' என்ற ஹவாய் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
-
ஸ்கோடா கைரோக் (ஆள்வதற்காக உருவாக்கப்பட்டடது) - 'கிரியோஸ்' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
மேலும் பார்க்க: பிரபல நடிகை பிரியாமணி வாங்கிய புதிய Mercedes-Benz GLC எஸ்யூவி … காரோட விலை எவ்வளவு தெரியுமா ?
வழக்கமான அதன் பெயரிடும் பாணி
குஷாக் கோடியாக் மற்றும் கரோக் போன்ற 'K' இல் தொடங்கி 'Q' உடன் முடிவடையும் பெயர்களைக் கொண்ட தற்போதைய எஸ்யூவி -களுடன் ஸ்கோடா இந்த பெயரிடும் முறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
புதிய எஸ்யூவி பற்றிய சுருக்கமான விவரம்
குஷாக்கின் 10-இன்ச் டச் ஸ்கிரீனின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
இன்னும் பெயரிடப்படாத வரவிருக்கும் இந்த கார் குஷாக் காம்பாக்ட் எஸ்யூவி -யின் அதே MQB-A0-IN பிளாட் ஃபார்மை பயன்படுத்தும். இருப்பினும் சப்-4m செக்மெண்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப அளவு மாற்றியமைக்கப்படும். பெரிய டச் ஸ்கிரீன் சன்ரூஃப் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்ட பல அம்சங்கள் நிறைந்த காராக இது இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 5-ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற குஷாக்கின் MQB-A0-IN பிளாட்ஃபார்மில் இது கட்டமைக்கப்படும் என்பதால் புதிய எஸ்யூவி -யிலில் இருக்கும் அதே அளவிலான பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்றவை அடங்கும்.
காரை இயக்குவது எது?
குஷாக்கிலிருந்து சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (115 PS/ 178 Nm) ஸ்கோடா இந்த பிரிவில் உள்ள வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வர வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி -யின் ஆரம்ப விலை ரூ.8.50 (எக்ஸ்-ஷோரூம்) லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், டாடா நெக்ஸான் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் சப்-4m கிராஸ்ஓவர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
0 out of 0 found this helpful