• English
    • Login / Register

    பிரபல நடிகை பிரியாமணி வாங்கிய புதிய Mercedes-Benz GLC எஸ்யூவி … காரோட விலை எவ்வளவு தெரியுமா ?

    மெர்சிடீஸ் ஜிஎல்சி க்காக பிப்ரவரி 27, 2024 11:50 am அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 34 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    GLC ஆனது GLC 300 மற்றும் GLC 220d ஆகிய இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 74.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கிறது.

    Priya Mani Raj buys a Mercedes-Benz GLC SUV

    தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரியாமணி ‘ஃபேமிலிமேன்’ வெப்சீரிஸ், ஜவான் திரைப்படம் ஆகியவற்றின் வெற்றியின் மூலமாக வட இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது புதிய மெர்சிடிஸ் எஸ்யூவி -யை வாங்கியுள்ளார். பிரியாமணி வொயிட் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் GLC காரை தேர்ந்தெடுத்துள்ளார்.

    இந்த எஸ்யூவியை பற்றிய கூடுதல் தகவல்கள்

    Priya Mani Raj buys a Mercedes-Benz GLC SUV

    மெர்சிடிஸ்-பென்ஸ், ஆகஸ்ட் 2023 -ல், GLC 300 மற்றும் GLC 220d ஆகிய இரண்டு வேரியன்ட்களில் இரண்டாவது தலைமுறை GLC காரை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது. மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்யூவி -யின் விலை ரூ. 74.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).

    பவர்டிரெயின்கள் விவரம்

    சமீபத்திய GLC பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் கிடைக்கிறது, அதன் தொழில்நுட்ப விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:

    விவரங்கள்

    GLC 300

    GLC 220d

    இன்ஜின்

    2-லிட்டர் டர்போ-பெட்ரோல், 4-சிலிண்டர்

    2 லிட்டர் டீசல், 4 சிலிண்டர்

    பவர்

    258 PS

    197 PS

         

    டார்க்

    400 Nm

    440 Nm

    டிரான்ஸ்மிஷன்

    9-ஸ்பீடு AT

    9-ஸ்பீடு AT

    மெர்சிடிஸ்-பென்ஸ் இந்த காரை ‘4MATIC’ ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷன் மற்றும் ஆஃப்-ரோடிங் உட்பட பல்வேறு டிரைவ் மோட்களை இந்த காரில் கொடுக்கின்றது.

    மேலும் பார்க்க: Mercedes-Maybach GLS 600 காரை வாங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே

    இதிலுள்ள தொழில்நுட்ப வசதிகள்?

    Mercedes-Benz GLC cabin

    மெர்சிடிஸ்-பென்ஸ் GLC ஆனது வெர்டிகல் 11.9-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், டிரைவருக்கான 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹீட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    GLC -யில் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் சில ஆப்ஷனல் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

    GLC காரின் போட்டியாளர்கள்

    Mercedes-Benz GLC

    மெர்சிடிஸ்-பென்ஸ் GLC ஆடி Q5, வோல்வோ XC60, மற்றும் BMW X3 ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.

    மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் GLC டீசல்

    was this article helpful ?

    Write your Comment on Mercedes-Benz ஜிஎல்சி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    related news

      டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience