இந்த மே மாதம் Maruti Nexa கார்களில் ரூ.74,000 வரை ஆஃபர் கிடைக்கும்
published on மே 03, 2024 03:26 pm by rohit for மாருதி பாலினோ
- 145 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி ஃபிரான்க்ஸ் காரில் மிகக் குறைந்த தள்ளுபடி கிடைக்கும். ஆனால் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களில் கூடுதலாக ரூ. 50,000 மதிப்புள்ள ஆஃபர்களை பெறலாம்.
-
மாருதி கிராண்ட் விட்டாராவில் அதிகபட்சமாக ரூ.74,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
-
பலேனோ மற்றும் ஜிம்னி ஆகியவற்றுக்கு ரூ. 50,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்.
-
மாருதி ஃபிரான்க்ஸ் காரில் ரூ.28,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது.
-
இக்னிஸ் காருக்கு ரூ. 58,000 வரை மொத்த சலுகைகள் கிடைக்கும்.
-
அனைத்து ஆஃபர்களும் 2024 மே மாத இறுதி வரை செல்லுபடியாகும்.
பிரீமியம் ஹேட்ச்பேக்கான மாருதி பலேனோ மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி உட்பட மொத்தம் 8 மாடல்கள் மாருதி நெக்ஸா வரிசையில் உள்ளன. இந்த மாடல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்க திட்டமிட்டால் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்-அடிப்படையிலான இன்விக்டோ MPV தவிர மற்ற அனைத்திற்கும் மாருதி பல்வேறு தள்ளுபடிகளை வழங்குகின்றது. மே 2024 இறுதி வரை செல்லுபடியாகும் மாடல் வாரியான ஆஃபர்களின் விவரங்கள் இதோ:
பலேனோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.30,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.5,000 |
மொத்த பலன்கள் |
ரூ.50,000 வரை |
-
மாருதி பலேனோ -வின் AMT வேரியன்ட்களுக்கு மட்டுமே மேலே குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும்.
-
மேனுவல் கியர் பாக்ஸ் உடன் ஹேட்ச்பேக்கை வாங்க விரும்பினால் பணத் தள்ளுபடி ரூ. 5,000 ஆக குறைக்கின்றது மற்ற சலுகைகள் எதுவும் மாறாது.
-
எக்ஸ்சேஞ்ச் போனஸ் -க்கு பதிலாக 20,000 ரூபாய்க்கு ஆப்ஷனலாக ஸ்கிராப்பேஜ் போனஸையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
-
நீங்கள் பலேனோ CNG -யை வாங்க விரும்பினால் மாருதி அதை ரூ.10,000 ரொக்க தள்ளுபடியுடன் வழங்குகிறது மற்ற தள்ளுபடிகள் மாறாது.
-
மாருதி பலேனோ காரின் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம் வரை உள்ளது.
ஃபிரான்க்ஸ்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.15,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.10,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.3,000 |
மொத்த பலன்கள் |
ரூ. 28,000 வரை |
-
நீங்கள் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களைத் தேர்ந்தெடுத்தால் மாருதி ஃபிரான்க்ஸ், கார் தயாரிப்பாளர் மேலும் அவர்களுக்கு ரூ. 43,000 மதிப்புள்ள வெலாசிட்டி எடிஷன் ஆக்ஸசரி கிட்டை வழங்குகிறது.
-
எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ஆப்ஷனலாக ஸ்கிராப்பேஜ் போனஸாக ரூ.15,000 கிடைக்கும்.
-
இதன் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை வாங்க விரும்புவோருக்கு ரொக்கத் தள்ளுபடி ரூ. 10,000 ஆகக் குறைகிறது. அதே சமயம் ஃபிரான்க்ஸ் CNG எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸுடன் மட்டுமே கிடைக்கும்.
-
மாருதி ஃபிரான்க்ஸ் காரின் விலை ரூ.7.51 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை உள்ளது.
கிராண்ட் விட்டாரா
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.20,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.50,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4,000 |
மொத்த பலன்கள் |
ரூ. 74,000 வரை |
-
மேலே குறிப்பிட்டுள்ள ஆஃபர்கள் மாருதி கிராண்ட் விட்டாரா -வின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வேரியன்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ. 18.43 லட்சத்தில் இருந்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
மாருதி எஸ்யூவியின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வேரியன்ட்களையும், அதிகபட்ச ஆப்ஷனலாக ஸ்கிராப்பேஜ் போனஸ் உடன் (எக்ஸ்சேஞ்ச் போனஸ் -க்கு பதிலாக) ரூ.55,000 வழங்குகிறது.
-
எஸ்யூவியின் ஹையர்-ஸ்பெக் பெட்ரோல்-மட்டும் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களை (AWD உட்பட) தேர்ந்தெடுப்பவர்களுக்கு பணத் தள்ளுபடி ரூ. 5,000 அதிகரிக்கும் போது எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஸ்கிராப்பேஜ் போனஸ் ரூ.20,000 ஆக குறையும்.
-
மிட்-ஸ்பெக் கிராண்ட் விட்டாரா டெல்டா வேரியன்ட் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி, ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
-
மாருதி எஸ்யூவியின் பேஸ்-ஸ்பெக் சிக்மா வேரியன்ட்டை ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வழங்குகிறது.
-
தற்சமயம் கிராண்ட் விட்டாரா ரூ.10.99 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஜிம்னி
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.50,000 |
மொத்த பலன்கள் |
ரூ.50,000 வரை |
-
மாருதி ஜிம்னி -யின் அனைத்து வேரியன்ட்களிலும் ரூ. 50,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்.
-
மாருதி எந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸை வழங்கவில்லை.
-
ஜிம்னியின் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் வரை உள்ளது.
மேலும் பார்க்க: அறிமுகத்திற்கு முன்னரே வெளியான புதிய Maruti Swift காரின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள்
XL6
சலுகை |
தொகை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.20,000 |
மொத்த பலன்கள் |
ரூ. 20,000 வரை |
-
மேலே குறிப்பிட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ் மாருதி XL6 காரின் பெட்ரோல் வேரியன்ட்களுடன் மட்டுமே வழங்கப்படுகிறது
-
எக்ஸ்சேஞ்ச் போனஸ் -க்கு பதிலாக ரூ.25,000 ஆப்ஷனலாக ஸ்கிராப்பேஜ் போனஸ் உடன் அதையும் பெறலாம்.
-
XL6 MPV -யின் CNG வேரியன்ட்களில் தள்ளுபடி கிடைக்காது.
-
மாருதி எம்பிவி காரின் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.77 லட்சம் வரை இருக்கின்றது.
சியாஸ்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ. 20,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ. 25,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.3,000 |
மொத்த பலன்கள் |
ரூ. 48,000 வரை |
-
மாருதி சியாஸின் அனைத்து வேரியன்ட்களிலும் மேலே உள்ள ஆஃபர்கள் கிடைக்கும்.
-
எக்ஸ்சேஞ்ச் போனஸ் -க்கு பதிலாக ரூ. 30,000 -க்கு ஆப்ஷனலாக ஸ்கிராப்பேஜ் போனஸையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
-
மாருதி சியாஸ் காரின் விலை ரூ.9.40 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம் வரை உள்ளது.
இக்னிஸ்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.40,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.3,000 |
மொத்த பலன்கள் |
ரூ. 58,000 வரை |
-
மாருதி இக்னிஸ் காருக்கு அதிகபட்ச ஆஃபர்கள் மேலே கூறியது AMT வேரியன்ட்களில் கிடைக்கும்.
-
நீங்கள் ஹேட்ச்பேக்கின் மேனுவல் வேரியன்ட்டை தேர்ந்தெடுத்தால் பணத் தள்ளுபடி ரூ. 5,000 ஆக குறையும் மற்ற சலுகைகள் எதுவும் மாறாது.
-
நீங்கள் ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை தேர்வு செய்யலாம், அல்லது ரூ. 20,000 ஸ்கிராப்பேஜ் போனஸை தேர்ந்தெடுக்கலாம்.
-
மாருதி இக்னிஸின் விலை ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.11 லட்சம் வரை உள்ளது.
குறிப்புகள்:
1) ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் கார்ப்பரேட் சலுகைகள் மாறுபடலாம்.
2) மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து ஆஃபர்கள் மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாருதி நெக்ஸா டீலரை தொடர்பு கொள்ளவும்.
3) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை ஆகும்
மேலும் படிக்க: மாருதி பலேனோ AMT