• English
  • Login / Register

இந்த டிசம்பரில் ஹூண்டாய் கார்களில் ரூ.3 லட்சம் வரை சேமிக்கலாம்

published on டிசம்பர் 12, 2023 05:50 pm by ansh for ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் தள்ளுபடி உள்ளது. ஹூண்டாய் டுக்ஸான் ரூ. 1.5 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கின்றன.

Hyundai Year-end Offers

  • ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ரூ.48,000 வரை பலன்களை பெறுகிறது.

  • ஹூண்டாய் ஆரா ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.

  • பழைய மற்றும் புதிய ஹூண்டாய் i20 இரண்டுக்கும் ஆண்டு இறுதி பலன்களாக ரூ.50,000 வரை கிடைக்கும்.

  • இந்த ஆஃபர்கள் 2023 இறுதி வரை செல்லுபடியாகும்.

மாதாந்திர சலுகைகளை வழங்கும் பல்வேறு கார் தயாரிப்பாளர்களைப் போலவே, ஹூண்டாய் நிறுவனமும் ஆண்டு இறுதிக்கான சலுகைகளை வெளியிட்டுள்ளது. கொரிய தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் எக்ஸ்டர், வென்யூ, வென்யூ N லைன், கிரெட்டா மற்றும் ஐயோனிக் 5 தவிர அனைத்து மாடல்களிலும் தள்ளுபடிகள் அல்லது தொடர்புடைய ஆஃபர்களை வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த மாதம் ஹூண்டாய் காரை வாங்க விரும்பினால், 2023 இறுதி வரை ஹூண்டாய் வழங்கும் தள்ளுபடிகளைப் பாருங்கள்.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

2023 Hyundai Grand i10 Nios

தள்ளுபடி

தொகை

பணத் தள்ளுபடி

35,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3,000

மொத்த பலன்கள்

48,000 வரை

  • அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணத் தள்ளுபடி ஹேட்ச்பேக்கின் CNG வேரியன்ட்களுக்கானது. பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்கு ரூ.20,000 தள்ளுபடி கிடைக்கிறது, இது AMT வேரியன்ட்களில் ரூ.10,000 வரை குறைகிறது.

  • எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் எல்லா வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியானவை.

  • ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.51 லட்சம் வரை விலை உள்ளது.

நிலுவையில் உள்ள உங்களது சலான்களை செலுத்துங்கள்

ஹூண்டாய் ஆரா

Hyundai Aura

தள்ளுபடி

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.20,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3,000

மொத்த பலன்கள்

ரூ.33,000 வரை

  • கிராண்ட் i10 நியோஸை போலவே, ஹூண்டாய் ஆராவின் CNG வேரியன்ட்களில் இந்த அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கும்.

  • வழக்கமான வேரியன்ட்களுக்கு ரூ.10,000 குறைந்த பண தள்ளுபடி கிடைக்கும்.

  • ஆராவின் அனைத்து வேரியன்ட்களும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் நன்மைகளைப் பெறுகின்றன.

  • ஹூண்டாய் ஆரா 6.44 லட்சம் முதல் 9 லட்சம் வரை விலை உள்ளது.

மேலும் படிக்க: 2024 -ல் மாருதி, ஹூண்டாய், டாடா மற்றும் பிற கார்களின் விலை உயரவுள்ளது

ஹூண்டாய் i20 & i20 N லைன்

Hyundai i20 2023

தள்ளுபடி

தொகை

பழைய ஹூண்டாய் i20

புதிய ஹூண்டாய் i20

பழைய ஹூண்டாய் i20 N லைன்

பணத் தள்ளுபடி

30,000 வரை

ரூ.10,000

ரூ.50,000

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000

ரூ.10,000

-

மொத்த பலன்கள்

40,000 வரை

ரூ.20,000

ரூ.50,000

  • ஹூண்டாய் பழைய i20 மற்றும் i20 N லைன் (முந்தைய ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகள்) மற்றும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தள்ளுபடியை வழங்குகிறது.

  • பழைய i20 டிசிடி வேரியன்ட்களில் ரூ. 30,000 ரொக்கப் பலன்களைப் பெறுகிறது, அதே நேரத்தில் ஸ்போர்ட்ஸ் மேனுவல் டிரிம் ரூ. 25,000 ரொக்கத் தள்ளுபடியைக் கொண்டுள்ளது. மீதமுள்ள வேரியன்ட்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும்.

  • புதிய ஹூண்டாய் i20 அனைத்து வேரியன்ட்களிலும் ரூ. 10,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறுகிறது மற்றும் பழைய i20 N லைன் கார் அனைத்து வேரியன்ட்களிலும் ரூ. 50,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறுகிறது.

  • பழைய ஹூண்டாய் i20 N லைனைத் தவிர, பழைய மற்றும் புதிய i20 -ன் மற்ற அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூபாய் 10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

  • புதிய ஹூண்டாய் i20 6.99 லட்சம் முதல் 11.16 லட்சம் வரை விலை உள்ளது.

இந்தியாவில் மின்சார கார்கள்

ஹூண்டாய் வெர்னா

Hyundai Verna

தள்ளுபடி

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.20,000

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.25,000

மொத்த பலன்கள்

ரூ.45,000

  • அனைத்து வேரியன்ட்களிலும் ரூ.20,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறுகிறது.

  • ஹூண்டாய் வெர்னா விலை 10.96 லட்சம் முதல் 17.38 லட்சம் வரை இருக்கும்.

மேலும் படிக்க: சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன

ஹூண்டாய் அல்காஸர்

Hyundai Alcazar

தள்ளுபடி

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.20,000

மொத்த பலன்கள்

ரூ.35,000

  • அல்காஸர் பெட்ரோல் வேரியன்ட்களில் இந்த சலுகைகளைப் பெறுகிறது.

  • அதன் டீசல் வேரியன்ட்களுக்கு எந்த பண தள்ளுபடியும் இல்லை, ஆனால் ரூ. 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

  • ஹூண்டாய் அல்காஸார் விலை 16.77 லட்சம் முதல் 21.23 லட்சம் வரை இருக்கும்.

RTO பதிவுகளை சரிபார்க்க

ஹூண்டாய் டுக்ஸான்

Hyundai Tucson

தள்ளுபடி

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.1.5 லட்சம்

மொத்த பலன்கள்

ரூ.1.5 லட்சம்

  • டுக்ஸானின் பெட்ரோல் வேரியன்ட்கள் எந்த விதமான பலன்களையும் பெறவில்லை.

  • டீசல் வேரியன்ட்களுக்கு ரூ. 1.5 லட்சம் ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • ஹூண்டாய் டுக்ஸான் 29.02 லட்சம் முதல் 35.94 லட்சம் வரை விலை உள்ளது.

மேலும் படிக்க: 2024 ஆண்டில் இந்தியாவிற்கு புதிதாக வரவிருக்கும் கார்கள்: அடுத்த ஆண்டு சாலைகளில் நீங்கள் இந்த கார்களை பார்க்க வாய்ப்புள்ளது

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்

Hyundai Kona Electric

தள்ளுபடி

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.3 லட்சம்

மொத்த பலன்கள்

ரூ.3 லட்சம்

  • இந்த பட்டியலில் உள்ள ஒரே எலக்ட்ரிக் காருக்கு ரூ.3 லட்சம் ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் 23.84 லட்சம் முதல் 24.03 லட்சம் வரை விலை உள்ளது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்

குறிப்பு: உங்கள் இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலர் ஆப்ஷனின் அடிப்படையில் இந்த ஆஃபர்கள் வேறுபடலாம். கூடுதலான தகவல்களுக்கு, உங்களுக்கு அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

மேலும் படிக்க: கிராண்ட் i10 நியோஸ் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai Grand ஐ10 Nios

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience