சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன
published on டிசம்பர் 08, 2023 09:29 pm by rohit
- 243 Views
- ஒரு கருத்தை எழுதுக
பெரும்பாலான கார் நிறுவனங்கள் இலவசமாக சர்வீஸ் செக் செய்து தருகின்றன. ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் காப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு செலவில் சில சலுகைகளை வழங்குகின்றன.
மிக்ஜாம் புயலால் கடந்த சில நாட்களாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதன் காரணமாக இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. மேலும் வெள்ளத்தால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. அதனால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் முயற்சியில், ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போன்ற சில கார் தயாரிப்பாளர்கள் இப்போது பல்வேறு வழிகளில் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. ஹூண்டாய் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, உதவும் வகையில் அவசரகால சாலையோர உதவிக் குழுவை அமைத்துள்ளது. அதே நேரத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாகனங்களின் காப்பீட்டுக் கோரிக்கைகளில் தேய்மானத்தில் 50 சதவீத தள்ளுபடியையும் வழங்குகிறது. பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் 1800-102-4645 என்ற எண்ணில் ஹூண்டாய் வாடிக்கையாளர் பராமரிப்புக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.
ஃபோக்ஸ்வேகன்
புயலால் பாதிக்கப்பட்டது ஃபோக்ஸ்வேகன் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள உரிமையாளர்கள் இலவசமாக சாலையோர உதவியை (ரோடு சைடு அசிஸ்டன்ஸை) பெறலாம். ஃபோக்ஸ்வேகன் வெள்ளப் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேதங்களை சரியான நேரத்தில் சரிசெய்வதை உறுதி செய்வதற்காக முன்னுரிமை அடிப்படையில் ‘விரிவான சர்வீஸ் செக்’ சேவையை வழங்கும். பாதிக்கப்பட்ட கார் வாடிக்கையாளர்கள் ஃபோக்ஸ்வேகன் சாலையோர உதவியை 1800-102-1155 அல்லது 1800-419-1155 என்ற எண்ணில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் பார்க்கவும்: Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது: அது ஒரு லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது
மஹிந்திரா
மஹிந்திரா பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி வழங்குவதற்கான சில முன்முயற்சிகளையும் அறிவித்துள்ளது, இது 2023 இறுதி வரை செல்லுபடியாகும். பாதிக்கப்பட்ட வாகனங்களை அருகிலுள்ள மஹிந்திரா சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல 50 கி.மீ தூரத்துக்குள்ளாக சாலையோர உதவியை (RSA) வழங்குகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டு சேதத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்படும், அதே நேரத்தில் உரிமையாளர்கள் பழுதுபார்ப்பு செலவில் தள்ளுபடியைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் சேவைக் குழுவை 1800-209-6006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 7208071495 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதே வேளையில், எங்கள் வாசகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்து தங்கள் குடும்பங்களை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது கார் தண்ணீரில் மூழ்கியிருந்தால், ஸ்டார்ட் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது காரின் சேதத்திற்கு வழிவகுக்கும் (மஹிந்திராவின் ஆலோசனையும் அதுதான்). இங்கு குறிப்பிடப்படாத நிறுவனங்களின் வாகன உரிமையாளர்கள் தங்கள் அருகில் உள்ள டீலர்ஷிப்பில் ஏதேனும் உதவி கிடைக்குமா என்பதை சரிபார்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
மேலும் படிக்க: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் நன்மைகள் மற்றும் தீமைகள்
0 out of 0 found this helpful