சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய சுஸூகி ஸ்விஃப்ட் -காரின் நிறங்கள்! இந்தியாவில் உள்ள ஸ்விஃப்ட் கார் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?

published on நவ 08, 2023 08:06 pm by shreyash for மாருதி ஸ்விப்ட்

விரைவில் மாற்றம் செய்யப்படவிருக்கும் இந்திய மாடல் மாருதி ஸ்விஃப்ட் 9 நிறங்களில் மட்டுமே கிடைக்கிறது

  • அக்டோபர் மாதம் ஜப்பான் மொபிலிட்டி நிகழ்ச்சியில் நான்காவது ஜெனரேஷன் சுஸூகி ஸ்விஃப்ட் கார் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • பலேனோ மற்றும் ஃபிரான்க்ஸ் போன்ற பிற மாருதி மாடல்களால் ஈர்க்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஃபேசியா மற்றும் உட்புற அமைப்பை கொண்டுள்ளது.

  • நியூ-ஜென் ஸ்விஃப்ட் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது.

  • இந்தியாவில் இதன் அறிமுகம் 2024 தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023-இல் அதன் உற்பத்தி நிறைவடையும் நிலையை தொடர்ந்து, சுஸூகி அதன் தாய்நாட்டில் நான்காவது-ஜெனரேஷன் சுஸூகி ஸ்விஃப் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலில் அற்புதமான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. ஜப்பானிய நிறுவனமான சுஸூகி நியூ-ஜென் ஸ்விஃப்ட்-இன் நிறங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. இப்போது ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பிராண்டியர் ப்ளூ மெட்டாலிக்

இந்தியாவில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் பெர்ல் மெட்டாலிக் மிட்நைட் ப்ளூ நிறம் போன்றே இது இருக்கும்.

கூல் யெல்லோ மெட்டாலிக்

நியூ-ஜென் சுஸூகி ஸ்விஃப்ட் -ன் புதிய நிறங்களில் இது ஒன்றாகும், இது ஜப்பான் மொபிலிட்டி நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதையும் பார்க்கவும்: மாருதி ஸ்விஃப்ட் பழையது Vs புதியது: ஒப்பீடு

பர்னிங் ரெட் பேர்ல் மெட்டாலிக்

ஸ்விஃப்ட் காரின் மிகவும் ஐகானிக் நிறமாக இருக்கும் இது, இந்திய மாடலில் சாலிட் ஃபயர் ரெட் என்றழைக்கப்படுகிறது.

ப்ளேம் ஆரஞ்ச் பெர்ல் மெட்டாலிக்

தற்போது இந்தியாவில் கிடைக்கும் பெர்ல் மெட்டாலிக் லூசண்ட் ஆரஞ்ச் நிறைத்தைக் காட்டிலும் அதிக பிரகாசமான நிறமாக இருக்கும்.

காரவன் ஐவரி பேர்ல் மெட்டாலிக்

நியூ-ஜென் ஸ்விஃப்ட்-இன் புதிய நிறங்களில் இதுவும் ஒன்று, இது இந்த பட்டியலில் மிகவும் நேர்த்தியானதாகவும், வெள்ளை அல்லது சில்வரை காட்டிலும் அதிக ஸ்டைலிஷ்-ஆகவும் உள்ளது.

பியூர் வைட் பேர்ல்

எந்த ஒரு காரிலும் இருக்கக்கூடிய வழக்கமான நிரமாகும், இது நியூ-ஜென் ஸ்விஃப்ட்டிற்கு புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தை அளிக்கக்கூடியது.

பிரீமியம் சில்வர் மெட்டாலிக்

சுஸூகி வழங்கும் பிரீமியம் சில்வர் நிறம் புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக்கிற்கு முன்னோக்கி கொண்டு செல்லப்படும் நிறங்களில் ஒன்றாகும்.

ஸ்டார் சில்வர் மெட்டாலிக்

முந்தைய சில்வர் நிறத்தைக் காட்டிலும், ஸ்டார் சில்வர் மெட்டாலிக் மேலும் பிரகாசமாக இருக்கும், இது வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களுக்கு இடையே உள்ள நிறமாக இருக்கும்.

சூப்பர் பிளாக் பெர்ல்

இந்தியாவில் உள்ள ஸ்விஃப்ட் காரில் இந்த நிறம் ஒரு சிறப்பு பிளாக் எடிஷனை வழங்குகிறது

ப்ளாக் ரூஃப் உடன் பிராண்டியர் ப்ளூ மெட்டாலிக்

இந்த நான்காவது ஜெனரேஷன் டியூயல் நிற ஸ்விஃப்ட் ஜப்பானில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட காராகும்.

பிளாக் ரூஃப் உடன் கூடிய பர்னிங் ரெட் மெட்டாலிக்

இது பர்னிங் ரெட் நிறத்தின் டியூயல் டோன் வேரியன்ட். இந்தியாவில் உள்ள ஸ்விஃப்ட் காரில் மிட்நைட் பிளாக் ரூஃப் உடன் சிவப்பு நிற தேர்வையும் மாருதி வழங்குகிறது

பிளாக் ரூஃப் உடன் கூல் எல்லோ மெட்டாலிக் கன்

இந்த புதிய நிற ஸ்விஃப்ட் கார் கருப்பு ரூஃப் உடன் வருகிறது.

பிளாக் ரூஃப் உடன் பியூர் வைட் பெர்ல் மெட்டாலிக்

காண்ட்ராஸ்ட் கருப்பு ரூஃப் உடன் பியூர் வைட் பெர்ல் நிறம் மேலும் அதிக ஸ்போட்ர்டியர் உணர்வை அளிக்கும்.

குறிப்பு: ஜப்பான் சுஸூகி ஸ்விஃப்ட் காரின் நிறங்களின் பெயர்கள் அனைத்தும் அதன் சொந்த மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பட்டுள்ளன.

சுஸூகி -யில், பிராண்டியர் ப்ளூ பெர்ல் மெட்டாலிக், பர்னிங் ரெட் பெர்ல் மெட்டாலிக், பியூர் வைட் பெர்ல், பிரீமியம் சில்வர் மெட்டாலிக் மற்றும் டியூயல் டோன் ரூஃப் கொண்ட ஸ்விஃப்ட் கார்களின் விலை ஆகியவை மற்றவற்றைக் காட்டிலும் வேறுபடும்.

இதையும் பார்க்கவும்: 2022 -ல் ஒவ்வொரு நாளும் 460 மேற்பட்ட இந்தியர்கள் சாலை விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர் ! எங்கே பெரும்பாலான விபத்து ஏற்பட்டுள்ளது என்று பாருங்கள்

புதிய இன்ஜின்

தற்போது இந்தியாவில் உள்ள ஸ்விஃப்ட் காரின் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் K-சீரீஸ் இன்ஜினை மாற்றி, புதிய ஜென் சுஸூகி ஸ்விஃப்ட்-இல் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z-சீரீஸ் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. புதிய இன்ஜினுக்கான அவுட்புட் விவரங்களை சுஸூகி இன்னும் வெளியிடவில்லை, மேம்பட்ட மைலேஜுக்காக இது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மாடல்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வுகள் இரண்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இந்திய அறிமுகம்

இந்தியாவில் 2024 மாருதி ஸ்விஃப்ட் காரின் டெஸ்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது மற்றும் ஹாட்ச்பேக்-கின் சமீபத்திய ஸ்பை ஷட்ஸ் இந்தியா மாடலின் புதிய டிசைன் விவரங்கள் மற்றும் அம்சங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஜெனரேஷன் ஸ்விஃப்ட் 2024 -ன் முன்பாதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ.6 லட்சம் முதல் தொடர்பும் என யூகிக்கபடுகிறது. இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் -க்கு போட்டியாளராகவும், மாருதி வேகன் R மற்றும் மாருதி இக்னிஸ் -க்கு ஸ்போர்டியர் மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

s
வெளியிட்டவர்

shreyash

  • 46 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை