• English
    • Login / Register

    மாருதி ஸ்விஃப்ட் பழையது Vs புதியது: ஒப்பீடு

    மாருதி ஸ்விப்ட் 2021-2024 க்காக நவ 08, 2023 07:17 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 29 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்த விரிவான கேலரியில், நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட்டின் புதிய வடிவமைப்பில் உள்ளும் புறமும் உள்ள விவரங்களை பார்க்கலாம்.

    2024 Suzuki Swift vs Current Maruti Swift

    • 2024 சுஸூகி ஸ்விஃப்ட் அதன் கான்செப்ட் வடிவம் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஜப்பானில் அதன் புரடெக்‌ஷன்-ஸ்பெக் காரை அறிமுகம் செய்துள்ளது.

    • சர்வதேச அளவில், இது 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை ஹைபிரிட் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.

    • இதன் புதிய அம்சங்களில், 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பம் ஆகியவை அடங்கியுள்ளன.

    • 2024 ஆம் ஆண்டில் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இதன் விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும்.

    முதலில் புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் உற்பத்திக்கு நெருக்கமான கருத்தாக ஜப்பானில் அறிமுகமானது, பின்பு  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சமீபத்தில், சுஸூகி நிறுவனம்  இந்த புதிய ஜென் காம்பாக்ட் ஹேட்ச்பேக்கின் பவர்டிரெய்ன் விவரங்களையும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் வெளியிட்டது. இந்தியா-ஸ்பெக் மாடல் அதற்குரிய வேறுபாடுகளை கொண்டிருக்கும்போது, ​​​​ஜப்பான்-ஸ்பெக் ஹேட்ச்பேக் கார் நமது ஊருக்கும் வரும். தற்போது இங்கு விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் உள்ள அனைத்து மாற்றங்களையும் ஆராய்வோம்:

    முன்புறம்

    2024 Suzuki Swift Front
    Maruti Swift Front

    இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த வெளிப்புறத் தோற்றம் (ஃபாசியா) ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், அதன் கிரில் மாற்றப்பட்டுள்ளது. இது மிகவும் வட்டமான வடிவமைப்பு, ஒரு புதிய ஹனிகோம்ப் வடிவம், கீழ் பாதியில் யு-வடிவ குரோம் ஸ்ட்ரிப் உள்ளது மேலும் சுஸூகி லோகோ இப்போது பானட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    2024 Suzuki Swift Headlamp and Bumper
    Maruti Swift Headlamps and Bumper

    ஹெட்லைட்கள் எல்-வடிவ DRL -கள் , LED ஃபாக் லைட்களை புதிய இருப்பிட வசதி மற்றும் கீழே ஒரு குரோம் ஸ்ட்ரிப் உள்ளது மற்றும் பம்பர் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

    பக்கவாட்டம்

    2024 Suzuki Swift Side
    Maruti Swift Side

    ஸ்விஃப்ட்டின் ஒட்டுமொத்த ஷில்ஃஅவுட் படம்  இன்னும் அப்படியே உள்ளது, ஆனால் இந்தியா-ஸ்பெக் பதிப்பில் உள்ளதைப் போலவே, பின்புற கதவு கைப்பிடிகள் இப்போது சி-பில்லருக்கு பதிலாக கதவில் பொருத்தப்பட்டுள்ளன.

    2024 Suzuki Swift Alloy Wheels
    Maruti Swift Alloy Wheels

    மேலும், 2024 பதிப்பு புதிய ஸ்டைலான இரட்டை-டோன் அலாய் வீல்களை பெறுகிறது.

    பின்புறம்

    2024 Suzuki Swift Rear
    Maruti Swift Rear

    பின்புற மாற்றங்கள் நுட்பமாக ஆனால் முழுமையாக உள்ளன. டெயில் லைட்ஸ் மற்றும் பூட் லிப் ஆகியவை கூர்மையான தோற்றத்திற்காக சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பம்பர் புத்தம் புதியதாக உள்ளது. இந்தியா-ஸ்பெக் பதிப்போடு ஒப்பிடும்போது, ​​2024 சுஸூகி ஸ்விஃப்ட் கார் கருப்பு மற்றும் குரோம் பம்பருடன் வருகிறது, இதில் நேர்த்தியான ரிஃப்ளெக்டர் பேனல்கள் உள்ளன.

    இதையும் பார்க்கவும்: இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் 2024 Maruti Swift கார்... புதிய வடிவமைப்பு விவரங்கள் தெரிய வருகின்றன

    டாஷ்போர்டு

    2024 Suzuki Swift Dashboard
    Maruti Swift Dashboard

    இந்த காரின் டேஷ்போர்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இப்போது நீங்கள் மாருதி பலேனோ, ஃபிராங்க்ஸ் அல்லது  கிராண்ட் விட்டாரா -வில் இருப்பதை போன்றே தெரிகிறது. இது பிளாக் மற்றும் வொயிட் டூயல்-டோன் ஷேடில். மற்ற மாருதி மாடல்களை போலவே இதிலும் தற்போது கிளைமேட் கன்ட்ரோல் பேனல் உள்ளது மற்றும் ஏசி வென்ட்கள் வட்டமாக இல்லை.

    2024 Suzuki Swift Touchscreen
    Maruti Swift Touchscreen

    புதிய டேஷ்போர்டில் தற்போதைய ஸ்விஃப்டில் உள்ள 7 இன்ச் டச் ஸ்கிரீன் போல இல்லாமல் 9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  உள்ளது.

    முன் இருக்கைகள்

    2024 Suzuki Swift Front Seats
    Maruti Swift Front Seats

    இந்த 2024 ஸ்விஃப்ட் அனைத்தும் பிளாக் செமி-லெதர் இருக்கைகளுடன் புதிய வடிவமைப்பு வடிவத்துடன் வருகிறது. இந்த இருக்கைகள் பயணிகளுக்கு உதவியாக பெரிய அளவிலான விளிம்புகளைக் கொண்டுள்ளன.

    இந்த நான்காவது தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரின் விரிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது ஒரு புதிய பெட்ரோல் இன்ஜினை பெறும் என்பதை நாங்கள் அறிவோம்.  

    அறிமுக காலவரிசை

    2024 Suzuki Swift Front

    புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட், அதன் உலகளாவிய சந்தையில் அறிமுகமான பிறகு, 2024 முதல் பாதியில் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸுக்கு போட்டியாக இருக்கும்.

    மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT 

    was this article helpful ?

    Write your Comment on Maruti ஸ்விப்ட் 2021-2024

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience