• English
  • Login / Register
Discontinued
  • மாருதி ஸ்விப்ட் 2021-2024 முன்புறம் left side image
  • மாருதி ஸ்விப்ட் 2021-2024 பி��ன்புறம் left view image
1/2
  • Maruti Swift 2021-2024
    + 11நிறங்கள்
  • Maruti Swift 2021-2024
    + 21படங்கள்
  • Maruti Swift 2021-2024
  • Maruti Swift 2021-2024
    வீடியோஸ்

மாருதி ஸ்விப்ட் 2021-2024

4.3630 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.5.99 - 9.28 லட்சம்*
last recorded விலை
Th ஐஎஸ் model has been discontinued
buy யூஸ்டு மாருதி ஸ்விப்ட்
check the லேட்டஸ்ட் வெர்ஷன் of மாருதி ஸ்விப்ட்

மாருதி ஸ்விப்ட் 2021-2024 இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1197 சிசி
பவர்76.43 - 88.5 பிஹச்பி
torque98.5 Nm - 113 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
மைலேஜ்22.38 க்கு 22.56 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜி
  • ஏர் கண்டிஷனர்
  • android auto/apple carplay
  • advanced internet பிட்டுறேஸ்
  • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பின்பக்க கேமரா
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

மாருதி ஸ்விப்ட் 2021-2024 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.

ஸ்விப்ட் 2021-2024 எல்எஸ்ஐ bsvi(Base Model)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.5.99 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 எல்எஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.6.24 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 விஎக்ஸ்ஐ bsvi1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.6.95 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 விஎக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.7.15 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 விஎக்ஸ்ஐ அன்ட் bsvi1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.7.50 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ bsvi1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.7.63 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 விஎக்ஸ்ஐ ஏஎம்பி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.7.65 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 விஎக்ஸ்ஐ சிஎன்ஜி bsvi(Base Model)1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 30.9 கிமீ / கிலோRs.7.85 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.7.93 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 விஎக்ஸ்ஐ சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 30.9 கிமீ / கிலோRs.8.05 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ அன்ட் bsvi1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.8.18 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ் bsvi1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.8.34 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.8.43 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt bsvi1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.8.48 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி bsvi1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 30.9 கிமீ / கிலோRs.8.53 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.8.64 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடீ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்Rs.8.78 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி(Top Model)1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 30.9 கிமீ / கிலோRs.8.83 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட் bsvi1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.8.89 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட் bsvi1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.9.03 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.9.14 லட்சம்* 
ஸ்விப்ட் 2021-2024 இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடீ ஏஎம்டீ(Top Model)1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்Rs.9.28 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி ஸ்விப்ட் 2021-2024 விமர்சனம்

CarDekho Experts
அதன் புத்துணர்ச்சியூட்டும் தோற்றம், வண்ண விருப்பங்கள் மற்றும் புதிய இன்ஜின் ஆகியவற்றுடன், ஸ்விஃப்ட் இப்போது மிகவும் இளமையாகவும் ஆர்வமூட்டும் வகிஅயிலும் இருக்கிறது.

Overview

மாருதியின் பெஸ்ட் செல்லரில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட மற்றும் புதிய இன்ஜின் உள்ளது. இது முன்பு இருந்த விவேகமான மற்றும் ஆர்வமூட்டும் தேர்வாக இருக்கிறதா?

Overview

மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மூன்று வருட காலத்தை நிறைவு செய்துள்ளது, எதிர்பார்க்கப்படும் விற்பனை அட்டவணையில் தீப்பற்ற வைத்திருக்கின்றன. கூடுதல் வசதி கொண்ட அப்கிரேடை அறிமுகப்படுத்தவும், வேடிக்கையான ஹேட்ச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் சரியான நேரம், நீங்கள் நினைப்பீர்கள். இதோ, மாருதி சுஸூகி ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பை வழங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, முதல் பார்வையில், இது ஒரு முகத்தை மாற்றுவதற்கான அரை மனதுடன் முயற்சியாகத் தெரிகிறது. அப்படியானால், ஸ்விஃப்ட்டிலிருந்து இதையே அதிகம் எதிர்பார்க்க வேண்டுமா?.

வெளி அமைப்பு

Exterior

ஸ்விஃப்ட் காரை பொறுத்தவரையில் மாருதி ‘உடையவில்லை என்றால் சரி செய்யாதே’ என்ற பழமொழியை கடைபிடித்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, புத்தம் புதிய காரின் விலையை கொண்ட இது மூன்று வருட பழைமையான தோற்றத்துடன் இருக்கிறது.

Exterior

'புதிய' ஸ்விஃப்ட்டை முன் ஃபேஸ்லிப்ட் என்று தவறாக புரிந்துகொள்வது எளிது. புதுப்பிக்கப்பட்ட கிரில்லை பாருங்கள், அது இப்போது தேன்கூடு மெஷ் போன்ற வடிவத்தையும் ஒரு முக்கிய குரோம் ஸ்ட்ரிப்பையும் பெறுகிறது, மற்ற விஷயங்கள் எதுவும் மாறவில்லை. ஸ்மூத்தாக ஃபுளோ ஆகும் லைன்கள், ஸ்டப்பியான முன்பக்கம் மற்றும் உயர்த்தப்பட்ட ரம்ப் - இவை அனைத்தும் ஸ்விஃப்ட் காரின் டிசைன் சிறப்பம்சங்கள் - அவை அப்படியே இருக்கின்றன.

Exterior

டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டுக்கு பிரத்தியேகமான எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்களுக்கான டூயல்-டோன் ஃபினிஷ் ஆகியவை முந்தைய மாடலில் இருந்ததைப் போலவே கொடுக்கப்பட்டுள்ளன. மாருதி சுஸூகி செய்திருக்கக்கூடிய குறைந்த பட்ச மாற்றம் ஸ்விஃப்ட்டுக்கு புதிய சக்கரங்களை வழங்குவதுதான். நீங்கள் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டை தேர்ந்தெடுக்க விரும்பினால், இப்போது உங்களுக்கு டூயல்-டோன் கலர் ஸ்கீம் கிடைக்கும். ரெட் வித் பிளாக், வொயிட் வித் பிளாக் மற்றும் ப்ளூ வித் வொயிட் ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கும்.

Exterior

பின்புறத்தில் எதுவும் மாறாவில்லை. புதுப்பிக்கப்பட்ட டெயில் லேம்ப் கிராபிக்ஸ், சில மீட்டி எக்ஸாஸ்ட் டிப்ஸ்களுடன் கூடிய ஸ்போர்டியர் பம்பரைக் பார்க்க விரும்புகிறோம் - இது ஹீட்டுக்கு கீழே உள்ள கூடுதல் ஆற்றலைக் குறிக்கிறது.

உள்ளமைப்பு

Interior

டிசைன் ‘அப்டேட்கள்’ உங்களை திணறடித்தால், உட்புறம் உங்களுக்காக இன்னும் பல விஷயங்களைக் கொண்டுள்ளது. டாஷ்போர்டு நேராக, டிரைவரை நோக்கி இருக்கும். இது இன்னும் கடினமாகவும், பிளாஸ்டிக் போலவும், தரத்தின் அடிப்படையில் பார்த்தால் சராசரியானதைப் போலவும் உணர வைக்கிறது - குறிப்பாக நீங்கள் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸில் நேரத்தை செலவிட்டிருந்தால் அதை நிச்சயமாக இதில் உணர்வீர்கள். பிளாக் இந்த கேபினில் ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் இது பட்ஜெட் ஹேட்ச்பேக்கில் இருப்பது போன்ற உணர்வை சேர்க்கிறது. மாருதி டாஷ் மற்றும் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலில் டார்க் கிரே ஆக்ஸன்ட்களுடன் சிறப்பான தோற்றத்தை வழங்க முயற்சித்துள்ளது.

Interior

தரம் குறைந்த பிளாஸ்டிக்கைத் தவிர, இங்கே புகார் செய்வதற்கு அதிகம் இல்லை. எர்கனாமிக்ஸ் -ல் சிறந்து விளங்குகிறது, மேலும் வசதியான ஓட்டுநர் நிலைக்குச் செல்வதும் மிகவும் எளிதானது. பெரிய முன் இருக்கைகள் தாராளமாக இடமளிக்கும் மற்றும் ஆதரவை கொடுக்கின்றன, மேலும் முதல் இரண்டு வேரியன்ட்கள் உயரத்தை சரிசெய்யக் கூடிய செயல்பாட்டை பெறுகின்றன.

Interior

பின்பக்க சீட்களிலும் அப்டேட்கள் எதுவும் இல்லை. ஆறு அடி உயரமுள்ள ஒருவர் மற்றொருவருக்கு பின்னால் அமரக்கூடிய அளவுக்கு முழங்கால் அறை உள்ளது. பின்புறத்தில் மூன்று பக்கவாட்டு இறுக்கமான பொருத்தமாக இருக்கிறது, ஆனால் வேலையை சரியாக செய்யக்கூடியது. ஃபிகோ மற்றும் நியோஸ் போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், ஸ்விஃப்ட் சற்று அகலமான கேபினை வழங்குகிறது. ஆச்சரியப்படும் விதமாக, மாருதி புதிய ஸ்விஃப்ட்டில் பின்புற ஏசி வென்ட்கள் இல்லை. இது நிச்சயமாக ஆல் பிளாக் கேபினை விரைவாக குளிர்விக்க உதவி செய்திருக்கும்.

InteriorInterior

நடைமுறையில் எந்த புகாரும் இல்லை. க்ளோவ்பாக்ஸ், டோர் பாக்கெட்டுகள், சீட் பேக் பாக்கெட்டுகள் மற்றும் சென்ட்ரல் க்யூபிகள் ஆகியவற்றில் போதுமான ஸ்டோரேஜ் உள்ளது. 268-லிட்டர் பூட் கூட போதுமானது, ஆனால் அந்த பெரிய லோடிங் லிப் என்பது கனமான சாமான்களை தூக்கும் போது உங்களுக்கு கடினமாக இருக்கும். முதல் இரண்டு வேரியன்ட்களுடன், நீங்கள் 60:40 ஸ்பிளிட் பின்புற இருக்கைகளைப் பெறுவீர்கள், இது ஸ்விஃப்ட்டின் பயன்பாட்டு அளவை அதிகரிக்கும்.

தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள்

InteriorInterior

முதலில் புதியதை பார்ப்போம். 2021 ஸ்விஃப்ட் இப்போது ஆட்டோ-ஃபோல்டிங் மிரர்களைக் கொண்டுள்ளது, இது நீங்கள் காரை லாக் செய்யும் போது உள்ளே மடிந்து கொள்ளும், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டனை அழுத்தினால் திறக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில், பலேனோவில் இருப்பதைப் போன்றே நேராக இருக்கும் மல்டி இன்ஃபார்மேஷன் டிஸ்பிளே உள்ளது. இறுதியாக, க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த அம்சங்கள் அனைத்தும் ZXi+ வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். குறைந்த டிரிம்களில் ஏதேனும் ஒன்றை வாங்க விரும்பினால், புதிய அம்சம் எதுவும் இல்லை.

Interior

சுஸூகியின் புதுப்பிக்கப்பட்ட ‘ஸ்மார்ட்பிளே’ டச் ஸ்கிரீன் ஸ்விஃப்ட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வழக்கமான அம்சங்களைக் கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வயர்லெஸ் ஆக இதை பயன்படுத்த முடியாது. டாப்-ஸ்பெக் ஸ்விஃப்ட்டின் மற்ற சிறப்பம்சங்களில் ஆறு-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு

Safety

மாருதி சுஸூகி டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் ISOFIX சைல்டு சீட்களை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. அப்டேட்டின் ஒரு பகுதியாக, ஸ்விஃப்ட் பெரிய பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (AMT வெர்ஷன்களுக்கு மட்டுமே) கிடைத்தது.

குளோபல் NCAP ஆனது இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்டை கிராஷ் டெஸ்ட் செய்தது, அதில் அது மோசமான 2 நட்சத்திரங்களை பெற்றது. பாடி ஷெல் ஒருமைப்பாடு 'அன்ஸ்டேபிள்' என மதிப்பிடப்பட்டது

செயல்பாடு

Performance

மாருதி சுஸூகியின் ஃபன் நிறைந்த ஹேட்ச்பேக், புதிய பெட்ரோல் இன்ஜின் காரணமாக, கூடுதலான புன்னகையை அளிக்கிறது. டிஸ்பிளேஸ்மென்ட் 1.2-லிட்டராக இருக்கும் போது, மோட்டார் சுஸூகியின் 'டூயல்ஜெட்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது கூடுதல் 7PS ஐ உருவாக்க உதவுகிறது. நீங்கள் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம்.

இதை சோதனை செய்தபோது, ஸ்விஃப்ட் 0-100கிமீ வேகத்தை 11.63 வினாடிகளில் அடைந்தது, இப்போது நிறுத்தப்படும் மாடலுடன் ஒப்பிடும்போது ஒரு வினாடி விரைவானது. வியக்கத்தக்க வகையில், மைலேஜ் 23.2kmpl (MT) மற்றும் 23.76kmpl (AMT) ஆக இருக்கிறது முன்பிருந்த 21.21kmpl -க்கு மாறாக கூடுதலாக இருக்கிறது. இது நீங்கள் ஐடிலிங் நிலையில் இருக்கும்போது கார் தானாகவே ஆப் செய்து கொள்ளும் ஸ்டார்ட் ஸ்டாப் செயல்பாட்டின் சேர்க்கை காரணமாக இருக்கலாம் - சிவப்பு விளக்கு அல்லது மோசமான போக்குவரத்து நெரிசலில் மாட்டும் போது இது உபயோகமானதாக இருக்கும்.

Performance

நீங்கள் எதிர்பார்ப்பது போல், இன்ஜின் தொடக்கத்திலும் செயலற்ற நிலையிலும் வெண்ணெய் போன்று மென்மையாக இருக்கும். அதிர்வுகள் இல்லை, விரும்பத்தகாத சத்தங்கள் இல்லை - எதுவும் இல்லை. மேனுவலை ஓட்டுவது ஒரு கடுமையான வேலை அல்ல. சூப்பர் லைட் கிளட்ச் மற்றும் கியர் லீவரில் இருந்து மென்மையான இயக்கம் பம்பர் டூ பம்பர் டிராஃபிக்கில் நீங்கள் சோர்வடையாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் இதைப் பற்றி பேசுகையில், தினசரி வாகனம் ஓட்டும் போது கூடுதல் சக்தியை நீங்கள் கவனிப்பீர்கள். நிச்சயமாக போக்குவரத்தில் இடைவெளிகளை தேர்ந்தெடுப்பது முன்பை விட சற்று எளிதானது. நெடுஞ்சாலையில், நீங்கள் மூன்று இலக்க வேகத்தில் வசதியாக பயணிக்க முடியும்.

Performance 5-ஸ்பீடு AMT அடிப்படையில் போதுமான வசதியை வழங்குகிறது. AMT -க்கு இது வியக்கத்தக்க வகையில் விரைவானது. நீங்கள் லேசான காலுடன் வாகனம் ஓட்டினால், சிறிய அசைவை நீங்கள் உண்மையில் பொருட்படுத்த மாட்டீர்கள். ஆனால் நீங்கள் ஆக்ஸிலரேட்டரைத் தரையிறக்கும் போதுதான், AMTயின் சற்று பின்னடைவுத் தன்மை தெளிவாகத் தெரியும், அப்ஷிஃப்ட்டிங் -கிற்கு முன் ஏறக்குறைய ஒரு வினாடியை எடுத்துக் கொள்கிறது.

இரண்டிற்கும் இடையில், நாங்கள் மேனுவலை தேர்ந்தெடுப்போம். இது அதிக முயற்சிக்கு உத்தரவாதம் அளிக்காது மற்றும் ஸ்விஃப்ட்டின் ஃபன் நிறைந்த இயல்போடு அதிகமானதை பெறுகிறது .

சவாரி மற்றும் கையாளுமை

Performance

மென்மையான சாலைகளில் தினசரி பயணங்களுக்கு, ஸ்விஃப்ட் உங்களுக்கு வசதியாக இருக்கும். நீங்கள் சீரற்ற நிலப்பரப்பு அல்லது கூர்மையான விளிம்புகள் அல்லது சாலையின் விரிவாக்க இணைப்புகள் மீது ஓட்டும் போது மட்டுமே சஸ்பென்ஷனின் உறுதியை உணர முடியும். இங்கே ஒரு விரைவான ஹேக் என்னவென்றால் வெறுமனே வேகமாகச் செல்வதாகும், ஏனெனில் அது கேபினுக்குள் உள்ள இயக்கத்தை மென்மையாக்குகிறது. நெடுஞ்சாலை பயணங்களுக்கு, நீங்கள் ஓரளவுக்கு வேகத்தில் செல்லும் போது இதை புகார் செய்ய மாட்டீர்கள். அதைக் கடந்து செல்லும் போது, சற்று மிதக்கும் தன்மையை கொடுக்கிறது, ஸ்டீயரிங் லேசானதாகவும் துண்டிக்கப்பட்டதாகவும் உணர்கிறது. ஆனால், ஸ்விஃப்ட் என்பது ட்விஸ்டிகளின் தொகுப்பிலேயே சிறப்பாக ரசிக்கப்படுகிறது, சாலையில் நேராக செல்லும் போது அல்ல.

Performance

மலைப்பாதைகளில், விரைவான ஸ்டீயரிங் மற்றும் மூலைகளில் ஸ்விஃப்ட்டின் ஆர்வத்தை நீங்கள் பாராட்டுவீர்கள். சரியான உள்ளீடுகள் மூலம், நீங்கள் டெயிலை வெளியே இழுக்கலாம் மற்றும் பக்கவாட்டில் வேடிக்கையாகவும் இருக்கும். உறுதியான சஸ்பென்ஷன் இங்கே ஸ்விஃப்ட்டுக்கு ஆதரவாக இருக்கிறது, தேவையற்ற பாடி ரோலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

வகைகள்

2021 ஸ்விஃப்ட் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. LXi தவிர அனைத்து வேரியன்ட்களிலும் AMT கிடைக்கிறது.

எங்களது அறிவுரைகள்:

     பேஸ் வேரியன்ட்டை தவிர்க்கவும்.

     நீங்கள் சிக்கனமான பட்ஜெட்டில் இருந்தால் VXi வேரியன்ட்டை வாங்கவும்.

     ZXi வேரியன்ட் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது - முடிந்தால் இதை நீட்டிக்கவும்.

     ZXi+ -ல் கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்கள் இல்லை - இருப்பினும் அது அதன் விலைக்கான பிரீமியத்தை நியாயப்படுத்துகிறது.

வெர்டிக்ட்

புதுப்பிப்புகளைப் பொறுத்தவரை, மாருதியின் ஸ்விஃப்ட் உங்களை ஆச்சரியப்படுத்தாது. இது ஒரு புதிய வடிவமைப்பு, இன்னும் சில நல்ல அம்சங்கள் மற்றும் தரத்தில் ஆகியவற்றைக் கொண்டு கொஞ்சம் கூடுதலாக மேம்படுத்தியிருக்கலாம். புதிய இன்ஜின் மட்டுமே உறுதியான புதுப்பிப்பாக தெரிகிறது. பழைய பெட்ரோல் மோட்டார் ஏற்கனவே ரீஃபைன்மென்ட், செயல்திறன் மற்றும் சிக்கனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அளவுகோலாக இருந்தபோதிலும், புதிய இன்ஜின் அவற்றில் கூடுதலாக ஒரு சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுகிறது.

Verdict

புதுப்பிப்புகள் இருந்தபோதிலும், ஸ்விஃப்ட் ஃபார்முலா மாறாமல் உள்ளது. நீங்கள் தனியாக வாகனம் ஓட்டும் போது வேடிக்கையில் சமரசம் செய்யாமல் ஒரு சிறிய குடும்பக் காரை விரும்பினால், ஸ்விஃப்ட் தொடர்ந்து ஒரு திடமான தேர்வாக இருக்கும்.

மாருதி ஸ்விப்ட் 2021-2024 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • ஃபங்கி ஸ்டைலிங் இன்னும் கவனம் பெறுகிறது. நிறைய மாற்றியமைக்கும் சாத்தியம் கூட!
  • பிளேஃபுல் சேஸிஸ் மற்றும் ஸ்டீயரிங் ஓட்டுவதற்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
  • க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கலர்டு MID போன்ற புதிய அம்சங்கள் இதை சிறந்த தொகுப்பாக மாற்றுகின்றன.

நாம் விரும்பாத விஷயங்கள்

  • இதைவிட அதிக இடத்தையும் சிறந்த தரத்தையும் வழங்கும் காரான பலேனோ -வுடன் ஒப்பிடும் போது விலை மிகவும் மோசமாக உள்ளது.
  • குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் இல்லை. புதிய மாடல் போல் தெரியவில்லை.
  • புதிய பாதுகாப்பு அம்சங்கள் AMT வேரியன்ட்டுக்கு மட்டுமே.

மாருதி ஸ்விப்ட் 2021-2024 car news

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Maruti Swift ரிவ்யூ: ஸ்போர்ட்டியான ஃபீல் கொடுக்கும் காம்பாக்ட் கார்
    Maruti Swift ரிவ்யூ: ஸ்போர்ட்டியான ஃபீல் கொடுக்கும் காம்பாக்ட் கார்

    ஹேட்ச்பேக்கில் உள்ள ஸ்போர்ட்டினஸ் தவறவிட்டதை ஈடுசெய்கின்றதா ?.

    By anshApr 09, 2024

மாருதி ஸ்விப்ட் 2021-2024 பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான630 பயனாளர் விமர்சனங்கள்
Mentions பிரபலம்
  • All (630)
  • Looks (150)
  • Comfort (204)
  • Mileage (261)
  • Engine (89)
  • Interior (65)
  • Space (39)
  • Price (92)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • D
    devender on Nov 27, 2024
    4.3
    Maruti Swift Dzire
    This vehicle is very nice comfortable and mileage is very good sweets starrings body and everything so beautiful and my favourite so many my dream car body so beautiful ok
    மேலும் படிக்க
  • B
    birendra kumar on Nov 07, 2024
    3.7
    Overall It A Good Package
    Overall it a good package for middle class but doesn't have that nice safety features. I am not happy with its millage and had less power. It is also over priced according to todays market.
    மேலும் படிக்க
    1 2
  • P
    prince mahato on Oct 04, 2024
    5
    Good Average Nice Performance Nice
    Good average nice performance nice look and noise less very affordable prices car perfect for middle class but small in size but best and no rooftop is disappointed good for buy
    மேலும் படிக்க
    1
  • A
    aditya on Apr 28, 2024
    4.7
    Amazing Car
    The Swift car, manufactured by Suzuki, is a popular hatchback known for its reliability, fuel efficiency, and sporty design. It's appreciated for its smooth driving experience, agile handling, and affordability. The Swift has gained a reputation for being a practical and fun-to-drive vehicle, making it a top choice in its segment for many buyers. Its compact size also makes it suitable for urban driving. Overall, the Swift car receives positive reviews for its performance, features, and value for money.
    மேலும் படிக்க
    4 2
  • N
    naveen on Apr 22, 2024
    4.3
    Good Car
    This car is useful for middle class family. Its have low maintenance. this car is facilities are good for mileage. The spare part of this car is easy available at low price and everywhere. Fast service. The local mechanic is also do work on it
    மேலும் படிக்க
    4 2
  • அனைத்து ஸ்விப்ட் 2021-2024 மதிப்பீடுகள் பார்க்க

ஸ்விப்ட் 2021-2024 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்த ஜனவரியில் ஸ்விஃப்ட் மீது மாருதி ரூ.39,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது.

விலை: மாருதி ஸ்விஃப்ட்டின் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கிறது.

வேரியன்ட்கள்: இது நான்கு வகையான டிரிம்களில் கிடைக்கிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. VXi மற்றும் ZXi டிரிம்மில் CNG விருப்பத் தேர்வும் வழங்கப்படுகிறது.

நிறங்கள்: இது மூன்று டூயல்-டோன் மற்றும் ஆறு மோனோடோன் எக்ஸ்டீரியர் ஷேட்களில் கிடைக்கிறது: சாலிட் ஃபயர் ரெட் வித் பேர்ல் மிட்நைட் பிளாக் ரூஃப், பேர்ல் மெட்டாலிக் மிட்நைட் ப்ளூ வித் பேர்ல் ஆர்க்டிக் வொயிட் ரூஃப், பேர்ல் ஆர்க்டிக் ஒயிட் வித் பெர்ல் மிட்நைட் பிளாக் ரூஃப், மெட்டாலிக் மாக்மா கிரே, பேர்ல் மிட்நைட் ப்ளூ, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், மெட்டாலிக் சில்க்கி சில்வர், சாலிட் ஃபயர் ரெட் மற்றும் பேர்ல் மெட்டாலிக் லுசென்ட் ஆரஞ்ச்.

பூட் ஸ்பேஸ்: ஸ்விஃப்ட் 268 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வருகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இந்த ஹேட்ச்பேக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.2-லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் (90PS/113Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG வேரியன்ட்டுகள் இதே இன்ஜினை பயன்படுத்துகின்றன மற்றும் 77.5PS மற்றும் 98.5Nm 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. மைலேஜை அதிகரிக்க இந்த ஹேட்ச்பேக் ஒரு ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியுடன் வருகிறது.

ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் புள்ளிவிவரங்கள் இங்கே:

    1.2-லிட்டர் MT - 22.38 கி.மீ/ லி

    1.2-லிட்டர் AMT - 22.56 கி.மீ/ லி

    CNG MT - 30.90 கி.மீ/கிலோ

அம்சங்கள்: ஸ்விஃப்டில் உள்ள வசதிகள் பட்டியலில் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பானது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில்-ஹோல்ட் கன்ட்ரோலுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றால் உறுதி செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள்: மாருதி ஸ்விஃப்ட் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸு க்கு போட்டியாளராக இருக்கிறது, அதே நேரத்தில் ரெனால்ட் ட்ரைபரை யும் இதற்கு மாற்றாக கருதலாம். இது மாருதி வேகன் R மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றிற்கு ஸ்போர்ட்டியர் மாற்றாகக் இருக்கும்.

2024 மாருதி ஸ்விஃப்ட்: 2024 மாருதி ஸ்விஃப்ட்: 2024 மாருதி ஸ்விஃப்ட்டின் ஆற்றல் மற்றும் மைலேஜ்  புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பழைய ஸ்விஃப்ட் மற்றும் அதன் போட்டியாளர்களின் இன்ஜின் விவரக்குறிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

மாருதி ஸ்விப்ட் 2021-2024 படங்கள்

  • Maruti Swift 2021-2024 Front Left Side Image
  • Maruti Swift 2021-2024 Rear Left View Image
  • Maruti Swift 2021-2024 Grille Image
  • Maruti Swift 2021-2024 Headlight Image
  • Maruti Swift 2021-2024 Taillight Image
  • Maruti Swift 2021-2024 Side Mirror (Body) Image
  • Maruti Swift 2021-2024 Door Handle Image
  • Maruti Swift 2021-2024 Front Wiper Image
space Image

கேள்விகளும் பதில்களும்

HussainAli asked on 3 Jan 2024
Q ) What is the price of Maruti Suzuki Super Carry?
By CarDekho Experts on 3 Jan 2024

A ) Maruti Suzuki Super Carry price range from Rs 5.15 Lakh to 6.30 Lakh.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhijeet asked on 20 Oct 2023
Q ) What are the safety features of the Maruti Swift?
By CarDekho Experts on 20 Oct 2023

A ) Passenger safety is ensured by dual front airbags, ABS with EBD, electronic stab...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhijeet asked on 8 Oct 2023
Q ) What is the mileage of Maruti Swift?
By CarDekho Experts on 8 Oct 2023

A ) The Maruti Swift mileage is 23.2 to 23.76 kmpl. The Automatic Petrol variant has...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Prakash asked on 23 Sep 2023
Q ) What are the features of the Maruti Swift?
By CarDekho Experts on 23 Sep 2023

A ) Its features list comprises a 7-inch touchscreen infotainment system, height-adj...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhijeet asked on 13 Sep 2023
Q ) What is the seating capacity of the Maruti Swift?
By CarDekho Experts on 13 Sep 2023

A ) The seating capacity of the Maruti Swift is 5 people.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience