• English
  • Login / Register

இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் 2024 Maruti Swift கார்... புதிய வடிவமைப்பு விவரங்கள் தெரிய வருகின்றன

published on நவ 07, 2023 03:52 pm by shreyash for மாருதி ஸ்விப்ட் 2021-2024

  • 34 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் விரிவான வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்ட கான்செப்ட் வடிவத்தில் முன்னோட்டத்தை காட்டுகிறது.

2024 Maruti Swift Front

  • புதிய மாருதி ஸ்விஃப்ட் புதிய வட்டமான கிரில் வடிவமைப்பைப் பெறும். 

  • LED ஃபாக் லைட்ஸ் உட்பட அனைத்து LED ஹெட்லைட் அமைப்பைக் கொண்டிருக்கும். 

  • இந்த ஹேட்ச்பேக் சோதனை கார் பிளைண்ட் ஸ்பாண்ட் டிடெக்‌ஷன் அம்சத்துடன் காணப்படுகிறது. 

  • உட்புறத்தில் இந்த கார் மாருதி பலேனோ மற்றும் ஃபிரான்க்ஸ் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.

  • இது அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம்.

  • இது 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அதன் கான்செப்ட்  அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட்டின் பரிசோதனை வாகனம் இந்தியாவில் முழுவதுமாக மறைப்பில் காணப்பட்டது. இந்த இந்தியா-ஸ்பெக் 2024 ஸ்விஃப்ட்டின் புதிய உளவு காட்சிகள், ஜப்பானில் காட்சிப்படுத்திய தயாரிப்புக்குத் தயாரான கருத்துத்தை ஒத்திருக்கும் புதிய வடிவமைப்பு எலமென்ட்களை வெளிப்படுத்துகின்றன. இந்த உளவு காட்சிகளை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

புதிய கிரில் & லைட்டிங் அமைப்பு

2024 Maruti Swift Front

இந்த புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரானது LED ஃபாக் லைட்ஸ் உட்பட புதுப்பிக்கப்பட்ட அனைத்து LED ஹெட்லைட் அமைப்புடன் வட்டமான கிரில்லைக் கொண்டுள்ளது. முன்பக்க பம்பர் சரியாகத் தெரியவில்லை என்றாலும் அது சில வடிவமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டதாகத் தெரிகிறது.

2024 Maruti Swift Rear

இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதி என்று வரும்போது, ​​இது தற்போதைய தலைமுறை ஸ்விஃப்ட்டை ஒத்திருக்கிறது, ஆனால் புகைப்படங்கள் பிளாக்டு அவுட் செய்யப்பட்ட ஒரு புதிய அலாய் வீல்களை வெளிப்படுத்துகின்றன. கவனிக்கத்தக்க மாற்றங்களில் ஒன்று, பின்புற கதவு கைப்பிடியின் பொருத்தம் ஆகும், இது பின்புற கதவில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சி-பில்லரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தற்போதைய ஸ்விஃப்ட்டுக்கு மாற்றமாக உள்ளது. பின்புறத்தில், புதிய ஸ்விஃப்ட் புதுப்பிக்கப்பட்ட டெயில் லைட்ஸ் மற்றும் பின்புற பம்பருடன், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட LED டெயில் லைட்களை கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: ரூ. 20 லட்சம் விலையுள்ள 5 சிஎன்ஜி எஸ்யூவிகள்

பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் பார்க்கப்பட்டது

2024 Maruti Swift ORVM

இந்தியாவில் உள்ள எந்த மாருதி கார்களும் பிளைண்ட் ஸ்பாட் கண்டறியும் அம்சத்தை தற்போது வழங்கவில்லை. ஆனால், இந்த நான்காம் தலைமுறை இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட் அதை கொடுக்கும் முதல் வாகனமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலே உள்ள புகைப்படங்களில், பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதலுடன் கூடிய வெளிப்புற மின்சார பின்புற கண்ணாடிகளை நீங்கள் தெளிவாகக் காணலாம்

எதிர்பார்க்கப்படும் உட்புற மாற்றங்கள்

2024 Maruti Swift Infotianment spy shot

புரடெக்‌ஷன்-ஸ்பெக் 2024 மாருதி ஸ்விஃப்ட்டின் உட்புறம் விரிவாக பார்க்கப்படவில்லை.  எனினும், ஜப்பான்-ஸ்பெக் ஸ்விஃப்ட் கான்செப்ட்டில் காணப்பட்டதைப் போன்ற டேஷ்போர்டு அமைப்பையே இது பெறும் வாய்ப்புள்ளது. உளவு காட்சிகளின்படி,  இன்ஃபோடெயின்மென்ட் திரையில்  ஒரு ஸ்னீக் பீக் உள்ளது. இது மற்ற மாருதி மாடல்களில் காணப்படும் அந்த 9 -இன்ச் யூனிட் உடன் ஒத்திருக்கிறது.

இந்த வாகனத்தின் அம்சங்களைப் பொறுத்தவரை, நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் புஷ் பட்டன் தொடங்கு/நிறுத்து, வயர்லெஸ் சார்ஜிங், பயண கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு கருவியில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கியுள்ளன.

மேலும் காண்க:  மறைக்கப்பட்ட நிலையில் டாடா பன்ச் EV சோதனையின் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது

பவர்டிரெய்ன் விவரங்கள் ?

இந்தியா-ஸ்பெக் 2024 மாருதி ஸ்விஃப்ட் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகம் செய்யும், இது கொஞ்சம் அதிக டார்க்கை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஸ்விஃப்ட்டின் 1.2-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் (90 Ps/113 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தேர்வை வழங்குகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்

இந்தியாவில், நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி வேகன் ஆர்  மற்றும் மாருதி இக்னிஸ் போன்றவற்றுக்கு மாற்றாக இருக்கும் அதே வேளையில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸுக்கு  போட்டியாக தொடரும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT

was this article helpful ?

Write your Comment on Maruti ஸ்விப்ட் 2021-2024

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience