• English
  • Login / Register

புதிய சுஸூகி ஸ்விஃப்ட் 2024: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

மாருதி ஸ்விப்ட் க்காக அக்டோபர் 26, 2023 05:57 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாராக உள்ள இந்த கான்செப்ட் அடுத்த மாருதி ஸ்விஃப்ட் காரில் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது

2024 Suzuki Swift Concept

  • ஒரு கான்செப்ட் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் வெளிப்படுத்தப்பட்டது.

  • புதிய முன் வடிவமைப்பு மற்றும் ஸ்டைலான புதிய அலாய் வீல்களை பெறுகிறது
  • கேபினை பொறுத்தவரையில் பலேனோ, ஃபிராங்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாராவை போன்றே பகிர்ந்து கொள்கிறது.

  • இந்தியா-ஸ்பெக் பதிப்பு 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் தொடரும்.

  • அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மாருதி ஸ்விஃப்ட் நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகும்; மற்றும் நீண்ட காலமாக, இது ஒரு புதுப்பித்தலுக்கு காத்திருக்கிறது. ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 இல் நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கான்செப்ட்டை  சுஸுகி வெளிப்படுத்தியதால், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புதுப்பிப்பு வரவுள்ளதாகத் தெரிகிறது. இது என்ன வழங்குகிறது மற்றும் இந்தியா-ஸ்பெக் பதிப்பில் என்ன கிடைக்கும் என்பதைப் பார்க்கவும்.

புதிய வடிவமைப்பு

2024 Suzuki Swift Concept Front

ஸ்விஃப்ட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் வடிவமும் அப்படியே உள்ளது. இருப்பினும், இது இப்போது மிகவும் நவீனமாகவும் உறுதியாகவும் தெரிகிறது. முன் வடிவமைப்பில் தேன்கூடு வடிவத்துடன் கூடிய புதிய வட்ட வடிவ கிரில் மற்றும் ஸ்லீக்கர் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் பகல்நேர இயங்கு விளக்குகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி ஜிம்னி 5-கதவு கார் ஏற்றுமதி பாதையில் செல்கிறது

ஃபுளோட்டிங் ரூஃப் வடிவமைப்புடன் தொடர்வதால் பக்கமானது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒரே மாதிரியாகத் தெரிகிறது. தற்போதைய பதிப்போடு ஒப்பிடும்போது,  பின்புற டோர் ஹேண்டில்கள்,  சி-பில்லருக்கு அருகில் மீண்டும் கதவில் வைக்கப்பட்டுள்ளன. அலாய் வீல்களுக்கும் புதிய வடிவமைப்பு உள்ளது.

2024 Suzuki Swift Concept Rear

பின்புற முனையில் புதிய வடிவிலான டெயில்கேட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் டெயில்லைட்கள் உட்பட சில வடிவமைப்பு புதுப்பிப்புகள் உள்ளன, இதில் சி-வடிவ லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் பிளாக் இன்செர்ட்கள் உள்ளன.

வழக்கமான கேபின்

2024 Suzuki Swift Concept Cabin

புதிய ஸ்விஃப்ட்டின் கேபினைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது, இது மாருதியின் மற்ற மாடல்களான பலேனோ , ஃபிரான்க்ஸ் , மற்றும் கிராண்ட் விட்டாரா போன்றவற்றின் கேபின்களைப் போலவே இருக்கும் என்பதுதான். ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்கிரீன் ஆகியவை ஒரே மாதிரியாக இருப்பதால் தான்.

இதையும் படியுங்கள்: இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோமெட்டிக் கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸூகி நிறுவனம், அவற்றில் 65 சதவீதம் ஏஎம்டி கார்களாகும்

இருப்பினும், டேஷ்போர்டு ஒரு தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இது பிளாக் மற்றும் பெய்ஜ் ஷேட் கொண்ட அடுக்கு டேஷ்போர்டுடன் வருகிறது.

அம்சங்கள்

2024 Suzuki Swift Concept Touchscreen

இந்த கான்செப்ட்டின் அம்சப் பட்டியலின் அனைத்து விவரங்களும் வெளியிடப்படவில்லை, ஆனால் கேபினின் தோற்றத்தில், இது 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்  ஆகியவற்றை பெறும் என்பது தெளிவாகிறது. பெரிய டச் ஸ்கிரீன் தவிர, இந்த அம்சங்கள் அனைத்தும் தற்போது ஸ்விஃப்ட்டில் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்: இந்த பண்டிகை காலத்தில் தள்ளுபடி வழங்கும் ஒரே மாருதி எஸ்யூவி இதுதான்

பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது பல ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகத்துடன் கூடிய ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டிரைவர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஹை பீம் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் வரும்.

பவர்டிரெய்ன்

Maruti Swift Engine

புதிய ஸ்விஃப்ட் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி சுஸுகி அதிகம் வெளியிடவில்லை, ஆனால் இந்த கார் தயாரிப்பாளர் சிவிடி கியர்பாக்ஸுடன் சிறப்பான மைலேஜை கொடுக்கும் பவர்டிரெய்ன் இதில் கிடைக்கும் என்று கூறியுள்ளது. இருப்பினும், இந்தியா-ஸ்பெக் பதிப்பு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் (90பிஎஸ் /113நியூட்டன் மீட்டர்) தொடர்ந்து வரும்.

வெளியீடு எப்போது ?

சுஸுகி முதலில் ஸ்விஃப்ட்டின் தயாரிப்பு-ஸ்பெக் பதிப்பை வெளியிடும், பின்னர் அது ஹேட்ச்பேக்கை விற்பனை செய்யத் தொடங்கும். இந்தியாவில், புதிய ஸ்விஃப்ட் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைய பதிப்பை விட இது விலை கூடுதலாக இருக்கும், இதன் விலை ரூ.5.99 லட்சத்தில் இருந்து ரூ.9.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இது அறிமுகப்படுத்தப்பட்டதும், புதிய ஸ்விஃப்ட் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி

was this article helpful ?

Write your Comment on Maruti ஸ்விப்ட்

1 கருத்தை
1
S
sumit kumar
Mar 30, 2024, 9:42:40 PM

Hurry launch

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience