• English
  • Login / Register

இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோமெட்டிக் கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸூகி நிறுவனம், அவற்றில் 65 சதவீதம் ஏஎம்டி கார்களாகும்

மாருதி ஆல்டோ கே10 க்காக அக்டோபர் 19, 2023 06:06 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 96 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி 2014 -ல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, மேலும் டார்க் கன்வெர்ட்டரானது 27 சதவீதத்தை கொண்டுள்ளது.

Maruti automatic cars

மாருதி சுஸூகி  இந்தியா லிமிடெட் (MSIL) இந்தியாவில் 10 லட்சம் ஆட்டோமெட்டிக் கார்களை விற்பனை செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. வாகனத் துறையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸூகி, டூ-பெடல் ஆட்டோமெட்டிக் கார் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பரப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. தற்போது, ​​அந்த நிறுவனம் நான்கு தனித்துவமான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்களை வழங்குகிறது, இது பரந்த அளவிலான வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது.

புதுமையான தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை

Maruti Brezza
Maruti Baleno

2014 ஆம் ஆண்டில், நிறுவனம் ஆட்டோ கியர் ஷிப்ட் (AGS) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது - இது பொதுவாக AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) என அழைக்கப்படுகிறது - இது அதன் எளிமை மற்றும் குறைவான விலைக்காக வாடிக்கையாளர்களிடையே வெகு சீக்கிரத்தில் புகழ் பெற்றது. தற்போது, ​​ஆல்டோ முதல் ஃப்ரான்க்ஸ் வரை, மாருதியால் விற்கப்படும் 65 சதவீத ஆட்டோமெட்டிக் வாகனங்கள், ஏஜிஎஸ் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இதற்கிடையில், மொத்த ஆட்டோமெட்டிக் விற்பனையில் 27 சதவிகிதம் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) கொண்ட மாடல்களே காரணமாகும், ஜிம்னி மற்றும் சியாஸில் 4-ஸ்பீடு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல் 6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகியவை பேடில் ஷிஃப்டர்களுடன் 6-ஸ்பீடை பெறுகின்றன. கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ போன்ற பல்நோக்கு வாகனங்களில் வழங்கப்படும் பெட்ரோல்-ஹைப்ரிட் வேரியன்ட்கள், ஹைப்ரிட் எலக்ட்ரானிக், இ-சிவிடி விற்பனையில் சுமார் 8 சதவீதம் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  இந்த அக்டோபரில் சில மாருதி கார்களுக்கு ரூ.59,000 வரை சலுகைகளை பெறுங்கள்  

வாடிக்கையாளர்களின் விருப்பத்தேர்வுகள்

மாருதி சுஸூகியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக அதிகாரி ஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "மாருதி சுஸூகியில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எண்ணற்ற விருப்பங்களுடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை மக்களுக்கு சுதந்திரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்களின் ஆட்டோமெட்டிக் கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் 2023-24 நிதியாண்டில் ஒரு லட்சம் ஆட்டோமெட்டிக் வாகன விற்பனையை எட்டுவதற்கான நிலையில் இருக்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

Maruti Invicto

மாருதியின் நெக்ஸா வரிசையானது ஆட்டோமெட்டிக் கார் விற்பனையில் சுமார் 58 சதவீதத்திற்கு பங்களிக்கிறது, அதே சமயம் கார்களின் வரம்பு தோராயமாக 42 சதவீதமாக உள்ளது என்று அவர் மேலும் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: TiHAN ஐஐடி ஹைதராபாத் வளாகத்தில் டிரைவர் இல்லாத மின்சார ஷட்டில்களை பயன்படுத்துகிறது 

அதிகம் பங்களிக்கும் பகுதிகள்

டெல்லி என்சிஆர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட முக்கிய பங்களிப்பாளர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாருதி சுஸூகியின் ஆட்டோமெட்டிக் கார் விற்பனை செழித்து வருகிறது. கூடுதல் வசதிகள் உள்ளதால், ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பம் இன்னும் பிரீமியத்தில் இருந்தாலும் - பெரும்பாலான நகர்ப்புறங்களில் போக்குவரத்து நிலைமை மோசமடைந்து வருவதால் அதன் முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

மேலும் படிக்க: ஆல்டோ K10 ஆன் ரோடு விலை 

was this article helpful ?

Write your Comment on Maruti ஆல்டோ கே10

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience