• English
    • Login / Register

    இந்த பண்டிகை காலத்தில் தள்ளுபடியை பெறும் ஒரே மாருதி எஸ்யூவி எது தெரியுமா ?

    மாருதி ஜிம்னி க்காக அக்டோபர் 25, 2023 07:40 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 27 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    என்ட்ரி லெவல் ஜிம்னி ஜெட்டா வேரியன்ட் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது

    Maruti Jimny

    • மாருதி ஜிம்னி ஜெட்டாவை தலா ரூ.50,000 ரொக்க தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன்  வழங்குகிறது.

    • டாப்-ஸ்பெக் ஆல்ஃபா டிரிம், வெறும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை கொண்டிருக்கும் போது பணத் தள்ளுபடி கிடைக்காது.

    • ஜிம்னியை இயக்குவது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 4WD ஸ்டாண்டர்டாக உள்ளது.

    • மாருதி எஸ்யூவி வேரியன்ட்ளின் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.

    மாருதி சுஸுகி தற்போது அதன் தயாரிப்பு வரிசையில் 4 எஸ்யூவி வேரியன்ட்டை கொண்டுள்ளது, அவற்றில் 3 பிரீமியம் நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்கப்படுகின்றன. மாருதி பிரெஸ்ஸா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் மாருதி ஃபிராங்க்ஸ் போன்ற மாடல்களில் எந்த பலன்களும் இல்லை, மாருதி ஜிம்னிக்கு மட்டும் சிறப்பு தள்ளுபடிகள் 2023 அக்டோபர் மாதத்தில் கிடைக்கும்.

    ஜிம்னியில் கிடைக்கும் சலுகைகள்

    Maruti Jimny

     
    சலுகைகள்

     
    தொகை

     
    பணத் தள்ளுபடி

     
    ரூ. 50,000

     
    எக்ஸ்சேஞ்ச் போனஸ்

     
    ரூ. 50,000

     
    மொத்த பலன்கள்

     
    - ரூ 1 லட்சம் வரை

    • ஜிம்னியின் என்ட்ரி லெவல் ஜெட்டா வுக்கு மட்டுமே மாருதி மேற்குறிப்பிட்ட தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த சலுகை அக்டோபர் 20 ஆம் தேதி முதல் மட்டுமே கிடைக்கும், இது அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும்.

    • டாப்-ஸ்பெக் ஆல்ஃபா வேரியன்ட்களுக்கு எந்தவிதமான ரொக்க தள்ளுபடியும் இல்லை ஆனால் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வருகிறது.

    மேலும் படிக்க: மாருதி சுஸூகி இன்றுவரை 10 லட்ட்சத்திற்கும் அதிகமான ஆட்டோமெட்டிக் கார்களை விற்றுள்ளது, 65 சதவீத AMT யூனிட்கள் விற்பனையாகின்றன.

    ஆஃப்-ரோடருக்கு எது சக்தி அளிக்கிறது?

    Maruti Jimny petrol engine


    மாருதி, இந்தியா-ஸ்பெக் 5-டோர் ஜிம்னியை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (105PS/134Nm) பொருத்தியுள்ளது, இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4-வீல் டிரைவ் டிரெய்னை (4WD) ஸ்டாண்டர்டாக பெறுகிறது.

    வேரியன்ட்கள், விலை மற்றும் போட்டியாளர்கள்

    Maruti Jimny rear

    மாருதி ஜிம்னி ரூ.12.74 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம் வரையிலான விலையில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரண்டு வேரியன்ட்களில்  மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது  ‌ஃபோர்ஸ் குர்க்கா மற்றும்‌ மஹிந்திரா தார்‌ ஆகியவற்றுடன் போட்டியிடும்.

    தொடர்புடையவை:  வெளிநாடுகளிலும் கால்பதிக்க தயாரான மேட் இன் இந்தியா மாருதி ஜிம்னி 5-டோர்

    மேலும் படிக்க: ஜிம்னி  ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Maruti ஜிம்னி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience