சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட New Maruti Swift 2024 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

modified on மே 09, 2024 03:30 pm by rohit for மாருதி ஸ்விப்ட்

புதிய ஸ்விஃப்ட் முன்பை விட ஷார்ப் ஆகவும், இன்ட்டீரியரில் கூடுதல் பிரீமியமாகவும் உள்ளது. அதே நேரத்தில் புதிய பெட்ரோல் இன்ஜினையும் கொண்டுள்ளது.

  • LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi+ ஆகிய 5 வேரியன்ட்களில் இது கிடைக்கும்.

  • மாருதி நிறுவனம் இதன் விலையை ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.65 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை நிர்ணயித்துள்ளது.

  • டிசைன் சிறப்பம்சங்களில் ஷார்ப்பான LED DRL -கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய லைட்டிங் செட்டப் ஆகியவை அடங்கும்.

  • கேபினில் இப்போது 9-இன்ச் பெரிய டச் ஸ்கிரீன் கொண்ட புதிய வடிவிலான டாஷ்போர்டு அமைப்பு உள்ளது.

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன..

  • இது புதிய 1.2-லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி ஸ்விஃப்ட் இப்போது ஒரு ஜெனரேஷன் அப்டேட்டை பெற்றுள்ளது. இது இப்போது 4 வது ஜெனரேஷன் அவதாரத்தில் கிடைக்கிறது. உள்ளேயும் வெளியேயும் சில மாற்றங்களுடன், புதிய இன்ஜின் ஆப்ஷன் மற்றும் புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியான விலை விவரங்கள்

வேரியன்ட்

விலை MT*

விலை AMT*

LXi MT

ரூ.6.49 லட்சம்

VXI

ரூ.7.30 லட்சம்

ரூ.7.78 லட்சம்

VXi (O)

ரூ.7.57 லட்சம்

ரூ.8.07 லட்சம்

ZXi

ரூ.9 லட்சம்

ரூ.9.5 லட்சம்

ZXi+

ரூ.9.15 லட்சம்

ரூ.9.65 லட்சம்

* விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியாவுக்கானவை (அறிமுகம்)

புதிய ஸ்விஃப்ட் வரிசை ஒரு புதிய மிட்-ஸ்பெக் VXi (O) டிரிமை பெறுகிறது.

புதிய பெட்ரோல் இன்ஜின்

மாருதி புதிய ஸ்விஃப்ட்டை புதிய 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் (82 PS/112 Nm வரை) வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. புதிய ஸ்விஃப்ட்டின் வரிசையில் மாருதி CNG பவர் ட்ரெயினை பின்னால் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவமைப்பு

காரை முதலில் பார்க்கையில் புதிய ஸ்விஃப்ட் ஜெனரேஷன் அப்டேட்டை விடவும் பழைய மாடலின் அப்டேட்டட் இட்டரேஷன் போல தெரிகிறது. ஆனால் இது ஒரு மோசமான விஷயம் அல்ல. புதிய ஹெட்லைட் கிளஸ்டர்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கிரில் போன்ற சிறிய அப்டேட்கள் இதற்கு புதிய தோற்றத்தை கொடுக்கின்றன.

புதுப்பிக்கப்பட்ட பம்ப்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட LED டெயில் லைட்ஸ் (புதிய உள் லைட்டிங் எலமென்ட்களுடன்) மற்றும் புதிதாக ஸ்டைல் ​​செய்யப்பட்ட டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றை வெளியில் உள்ள மாற்றங்களாக பார்க்க முடிகின்றது. முன்பக்க LED ஃபாக் லைட்ஸ் மற்றும் சிறிதளவு மாற்றப்பட்டுள்ள கிரில் ஆகியவற்றை தவிர்த்து பார்த்தால் இந்தியா-ஸ்பெக் நான்காம்-ஜென் ஸ்விஃப்ட் UK-ஸ்பெக் மற்றும் ஜப்பான்-ஸ்பெக் மாடல்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவு மட்டுமே வடிவமைப்பில் மாற்றங்களை பெற்றுள்ளது.

உள்ளே என்ன மாறியுள்ளது?

காரின் உள்பக்கத்தில் உள்ள மாற்றங்களைப் பொறுத்தவரையில் டாஷ்போர்டில் கூடுதலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது ஒரு பெரிய டச் ஸ்கிரீன் செட்டப், மாற்றியமைக்கப்பட்ட சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்களால் டேஷ்போர்டு புதிய மாருதி பலேனோவில் உள்ளதைப் போலவே மாறியுள்ளது .

கோ டிரைவரின் பக்கத்தில் பழைய மாடலின் கேபினுடன் உள்ள ஒற்றுமையை உணர முடியும். அதே 3-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் டூயல்-பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் (மையத்தில் ஒரு வண்ண TFT MID உள்ளது) ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க: 2024 மாருதி டிசையர் தற்போதுள்ள டிசையர் காரில் இருந்து பெறக்கூடிய 5 விஷயங்கள்

கூடுதல் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு

புதிய ஸ்விஃப்ட் ஆட்டோ ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் கூடிய பெரிய 9-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப்பை பெறுகிறது.

பாதுகாப்புக்காக இப்போது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை உள்ளன.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் போட்டியாளர்கள்

2024 மாருதி ஸ்விஃப்ட் தொடர்ந்து ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் போட்டியிடுகின்றது. ரெனால்ட் ட்ரைபர் கிராஸ்ஓவர் MPV, மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பன்ச் போன்ற மைக்ரோ எஸ்யூவி -களுக்கு மாற்றாகவும் இருக்கும்.

r
வெளியிட்டவர்

rohit

  • 38 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை