சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட் இன்டீரியர் பற்றிய புதிய விவரங்கள் இங்கே, கார் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்

published on ஏப்ரல் 10, 2024 05:37 pm by ansh for மாருதி ஸ்விப்ட்

இப்போது படம்பிடிக்கப்பட்டுள்ள ஸ்விஃப்ட்டில் உள்ள கேபின் சர்வதேச அளவில் விற்கப்படும் புதிய ஜென் காரில் உள்ளதை போலவே உள்ளது.

  • இந்தியாவில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் பெரிய 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் உடன் வரக்கூடும்.

  • இது புதிய டேஷ்போர்டு, சிறிய ஏசி வென்ட்கள் மற்றும் புதிய கேபின் தீம் கொண்ட புதிய வடிவமைப்பு கொண்ட கேபினுடன் வரும்.

  • மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படலாம்.

  • விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆண்டின் பிற்பகுதியில் நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டது. மற்றும் ஹேட்ச்பேக்கின் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஸ்விஃப்ட் -ன் சோதனை கார்களை இந்திய சாலைகளில் பார்க்க முடிந்தது. எனவே இது விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்திய ஸ்பை ஷாட் ஒன்றில் புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக்கின் இன்ட்டீரியர் விவரங்களை நம்மால் பார்க்க முடிகின்றது.

தெரிய வரும் இன்ட்டீரியர் விவரங்கள்

இந்த ஸ்பை ஷாட்கள் தெளிவாக இல்லை என்றாலும் புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் காரில் என்ன கிடைக்கும் என்பதற்கான ஒரு பார்வையை அவை நமக்குத் தருகின்றன. முதலாவதாக சர்வதேச-ஸ்பெக் மாடலில் இருந்து வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பை கொண்ட பெரிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதிலும் கிடைக்கும்.

மேலும் படிக்க: இந்தியாவில் ஹைபிரிட் கார்கள் விலை குறைவதற்கான 3 வழிகள்

இரண்டாவதாக படங்களில் உள்ள விவரங்கள் குறைவாகவே இருகின்றன. ​​இந்தியாவில், புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் சர்வதேச-ஸ்பெக் ஒன்றின் அதே கேபினுடன் வரலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இது சற்றே மாற்றியமைக்கப்பட்ட செய்யப்பட்ட டாஷ்போர்டு, சிறிய ஏசி வென்ட்கள் மற்றும் லைட்டர் கேபின் தீம் ஆகியவற்றைப் பெறக்கூடும்.

வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்

வெளிப்புறத்தில் உள்ள வடிவமைப்பு மாற்றங்களை பொறுத்தவரையில் உள்ள புதிய ஜென் ஸ்விஃப்ட்டில் மேம்படுத்தப்பட்ட கிரில், ஸ்லீக்கர் பம்ப்பர்கள், புதிய வடிவிலான 15-இன்ச் அலாய் வீல்கள், புதுப்பிக்கப்பட்ட டெயில் லைட் செட்டப் மற்றும் ஸ்போர்ட்டியர் ரியர் ஸ்பாய்லர் போன்றவை இருக்காலாம்.

மேலும், தற்போதைய-ஜென் ஸ்விஃப்ட்டில் பின்புற கதவின் கைப்பிடிகள் சி-பில்லரில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் ​​நான்காவது-ஜென் மாடலில் கதவிலேயே கைப்பிடிகள் இருக்கும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தவிர புதிய ஸ்விஃப்ட் இந்தியாவில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேயையும் பெறலாம். ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட மற்ற வசதிகள் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்க: Maruti Fronx காரிலிருந்து 2024 Maruti Swift பெறலாம் என எதிர்பார்க்கப்படும் 5 வசதிகள்

பாதுகாப்பைப் இது 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களுடன் வரலாம். சர்வதேச-ஸ்பெக் ஸ்விஃப்ட் ADAS தொகுப்புடன் வருகிறது. அவற்றில் பெரும்பாலானவை இந்தியா-ஸ்பெக் பதிப்பிலும் இருக்கலாம். சோதனை கார் படம்பிடிக்கப்பட்ட போது அதில் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் இருப்பது தெரிய வந்தது.

பவர்டிரெய்ன்

இந்த அப்டேட் உடன் ஸ்விஃப்ட் புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையும் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 82 PS மற்றும் 112 Nm வரை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. குளோபல் மாடல்களுக்கு மைல்டு ஹைபிரிட் பவர்டிரெய்ன் பதிப்பும் உள்ளது.

மேலும் படிக்க: பிரிட்டன் சந்தைக்கான 2024 Maruti Suzuki Swif காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.. இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்

இப்போதுள்ள இந்தியா-ஸ்பெக் பதிப்பில் 4-சிலிண்டர் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (90 PS/113 Nm) உள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் ஸ்விஃப்ட் 77.5 PS மற்றும் 98.5 Nm இன் குறைக்கப்பட்ட அவுட்புட்டை கொண்ட CNG பவர்டிரெய்னையும் வழங்குகிறது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

2024 மாருதி ஸ்விஃப்ட் அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். மேலும் இதன் விலை ரூ.6 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அறிமுகமான பின்னர் இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் -காருக்கு போட்டியாக தொடரும்.

ஆதாரம்

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

a
வெளியிட்டவர்

ansh

  • 73 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை