பிரிட்டன் சந்தைக்கான 2024 Maruti Suzuki Swif காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.. இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்

published on மார்ச் 27, 2024 05:59 pm by rohit for மாருதி ஸ்விப்ட்

 • 22 Views
 • ஒரு கருத்தை எழுதுக

UK-ஸ்பெக் நான்காம்-ஜென் ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

2024 Suzuki Swift UK specifications revealed

 • சுஸூகி நிறுவனம் 2024 ஏப்ரலில் புதிய ஸ்விஃப்ட்டை பிரிட்டனில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

 • இப்போது விற்பனை செய்யப்பட்டு வரும் இந்தியா-ஸ்பெக் மாடலை விட 15 மி.மீ நீளமானது. ஆனால் அதே அகலம் மற்றும் வீல்பேஸை கொண்டுள்ளது.

 • UK -வில் 2WD மற்றும் AWD ஆப்ஷன்கள் இரண்டிலும் கிடைக்கும்; இந்தியா-ஸ்பெக் மாடல் 2WD ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

 • 9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி ரிவர்சிங் கேமரா மற்றும் ADAS போன்ற வசதிகளை பெறுகிறது.

 • ஏப்ரல் 2024 -க்குள் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து தொடங்க வாய்ப்புள்ளது (எக்ஸ்-ஷோரூம்).

நான்காவது தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் விரைவில் இந்திய சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே அதன் சொந்த நாட்டில் (ஜப்பான்) அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர உள்ளது. இப்போது ​​UK-ஸ்பெக் ஸ்விஃப்ட்டின் அளவுகள், பவர்டிரெய்ன் விவரங்கள், வேரியன்ட்கள் மற்றும் சில முக்கிய வசதிகள் உட்பட அனைத்து விவரங்களையும் சுஸூகி வெளியிட்டுள்ளது. அவற்றைப் இங்கே பார்ப்போம்:

புதிய ஸ்விஃப்ட்டின் அளவுகள்

அளவுகள்

யுகே-ஸ்பெக் ஸ்விஃப்ட்

தற்போதைய இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்

வித்தியாசம்

நீளம்

3860 மி.மீ

3845 மி.மீ

+15 மிமீ

அகலம்

1735 மி.மீ

1735 மி.மீ

எந்த வித்தியாசமும் இல்லை

உயரம்

1495 மிமீ (2WD)/ 1520 மிமீ (AWD)

1530 மி.மீ

-35 மிமீ/ -10 மிமீ

வீல்பேஸ்

2450 மி.மீ

2450 மி.மீ

எந்த வித்தியாசமும் இல்லை

UK-spec Suzuki Swift side

யுகே-ஸ்பெக் புதிய ஸ்விஃப்ட் தற்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் மாடலை விட 15 மிமீ நீளமானது. அதன் அகலம் மற்றும் வீல்பேஸ் இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் போலவே உள்ளது. யுகே-ஸ்பெக் மாடல் நம் நாட்டில் விற்பனையாகும் மாடலை விட 35 மிமீ வரை குறைவாக உள்ளது.

பவர்டிரெய்ன்கள்

UK-spec Suzuki Swift

ஜப்பான்-ஸ்பெக் ஹேட்ச்பேக்கில் காணப்படும் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் UK-ஸ்பெக் ஸ்விஃப்ட்டை சுஸூகி வழங்குகிறது. இதன் பவர் அவுட்புட் ஜப்பான்-ஸ்பெக் மாடலை போலவே இருந்தாலும் இது இன்னும் கொஞ்சம் கூடுதலான டார்க்கை உருவாக்குகிறது. இந்த இரண்டு சந்தைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய ஹேட்ச்பேக்கை 12V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கொடுக்கலாம். ஜப்பான்-ஸ்பெக் மாடலை  போலவே சுஸூகி இங்கிலாந்திலும் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனுடன் ஸ்விஃப்டை தொடர்ந்து வழங்கும்.

புதிய ஸ்விஃப்ட் இந்தியாவிற்கு வரும்போது ​​அது அதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் , 2WD செட்டப் உடன் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: ஃபியூல் பப்ம்பில் ஏற்பட்ட சிக்கல்: ரீகால் செய்யப்பட்ட Maruti Wagon R மற்றும் Baleno -வின் 16,000 யூனிட்கள்

காரிலுள்ள வசதிகள்

UK-spec Suzuki Swift cabin

புதிய UK-ஸ்பெக் ஸ்விஃப்ட்டிற்கான புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் வசதிகள் ஜப்பானிய மாடலை போலவே உள்ளன. இது 9 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோ ஏசி, எல்இடி ஹெட்லைட்கள் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவற்றுடன் வழங்கப்படும். பாதுகாப்புக்காக லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்சிங் கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் இந்த கார் வரும்.

முழுமையான ADAS தொகுப்பு அல்லது ஹீட்டட் சீட்களை தவிர மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் இந்தியா-ஸ்பெக் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு மற்றும் விலை

UK-spec Suzuki Swift rear

2024 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உடன் அதன் போட்டியை தொடரும். மேலும் ரெனால்ட் ட்ரைபர் சப்-4m கிராஸ்ஓவர் MPV -க்கு மாற்றாக இருக்கும் 

மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

explore மேலும் on மாருதி ஸ்விப்ட்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience