Maruti Fronx காரிலிருந்து 2024 Maruti Swift பெறலாம் என எதிர்பார்க்கப்படும் 5 வசதிகள்
published on ஏப்ரல் 04, 2024 05:46 pm by shreyash for டொயோட்டா டெய்சர்
- 136 Views
- ஒரு கருத்தை எழுதுக
2024 மாருதி ஸ்விஃப்ட் சில தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை அதன் கிராஸ்ஓவர் எஸ்யூவி உடன்பிறப்பான ஃபிரான்க்ஸ் உடன் பகிர்ந்து கொள்ளக்கூடும்.
புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு புதிய இன்ஜின் மற்றும் ஆல் நியூ கேபின் ஆகியவற்றைக் இது கொண்டிருக்கலாம். மேலும் 2024 ஸ்விஃப்ட், மாருதி ஃப்ரான்க்ஸ் காரிலிருந்து சில வசதிகளை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபிரான்க்ஸ் -லிருந்து 2024 ஸ்விஃப்ட் பெறக்கூடிய 5 விஷயங்கள் இங்கே உள்ளன.
பெரிய 9 இன்ச் டச் ஸ்கிரீன்
புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாருதி ஃபிரான்க்ஸில் இருப்பதை போன்றே வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்யும் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறலாம். இதே போன்ற 9 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட் மாருதி பலேனோ மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா உடன் இப்போது கிடைக்கிறது
மேலும் பார்க்க: டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் vs மாருதி ஃப்ரான்க்ஸ்: வடிவமைப்பில் உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன
வயர்லெஸ் சார்ஜிங்
2024 ஸ்விஃப்ட் ஃபிரான்க்ஸ் உடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய மற்றொரு வசதி வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் ஆகும். இந்த வசதி சென்டர் கன்சோல் பகுதியைச் சுற்றி கேபிள் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையை மாற்றலாம். மேலும் கேபிள்கள் சில சமயங்களில் கியரை மாற்றுவதற்கு இடையூறாகவும் இருக்கும்.
ஹெட்ஸ் அப் டிஸ்பிளே
மாருதி புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேவை (HUD) கொடுக்கலாம். இது காரின் அப்போதைய வேகம், கடிகாரம் RPM மற்றும் உடனடி மைலேஜ் போன்ற தகவல்களை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இருந்து சற்று உயரத்தில் ஒரு சிறிய கண்ணாடி பகுதியில் காட்டுகின்றது. HUD டிஸ்பிளே இருந்தால் ஓட்டுநர் சாலையிலிருந்து விலகி பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த வசதி மாருதி ஃபிரான்க்ஸ் உடன் மட்டுமல்லாமல் மாருதி பலேனோ மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றிலும் இப்போது கிடைக்கின்றது.
360 டிகிரி கேமரா
2024 மாருதி ஸ்விஃப்ட் ஃபிரான்க்ஸ் இலிருந்து ஒரு பெரிய 9-இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட்டை பெறக்கூடும் என்பதால் கூடுதலாக கிராஸ்ஓவர் எஸ்யூவி -ன் 360-டிகிரி கேமராவுடனும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பயனுள்ள வசதியாகும். இது குறுகலான பார்க்கிங் இடங்கள் அல்லது பம்பர்-டு-பம்பர் டிராஃபிக்கில் கூட காரை பார்க் செய்ய உதவுகிறது.
6 ஏர்பேக்குகள்
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக 2024 மாருதி ஸ்விஃப்ட் மாருதி ஃபிரான்க்ஸ் உடன் வழங்கப்படும் 6 ஏர்பேக்குகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிரான்க்ஸில் தற்போது ஸ்டாண்டர்டாக இது கொடுக்கப்படுவதில்லை. என்றாலும் கூட 6 ஏர்பேக்குகள் காரில் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப 2024 ஸ்விஃப்ட் இந்த வசதியை ஸ்டாண்டர்டான சேர்க்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
இந்தியாவில் 2024 மாருதி ஸ்விஃப்ட் கார் கூடிய விரைவில் ஆரம்ப விலை ரூ.6 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும். மேலும் இது ஒரு மாருதி வேகன் R மற்றும் மாருதி இக்னிஸ் போன்ற ஹேட்ச்பேக்குகளுக்கும் மாற்றாக கருதப்படும்.
மேலும் படிக்க: டொயோட்டா டெய்சர் AMT