• English
  • Login / Register

காமெட் EVக்கான ஆர்டர் புத்தகங்களைத் திறக்கும் எம்ஜி

published on மே 16, 2023 05:53 pm by shreyash for எம்ஜி comet ev

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இதன் அறிமுக விலை ரூ.7.98 லட்சம் முதல் ரூ.9.98 லட்சம் வரை இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்)  இது முதல் 5,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

MG Comet EV

  • 11,000 ரூபாய் வைப்புத்தொகைக்கு அல்ட்ரா-காம்பாக்ட் EV ஐ முன்பதிவு செய்யலாம்.

  • காமெட் EV க்கான சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே நடந்து வருகின்றன.

  • எம்ஜி அதன் 2-கதவு மின்சார வாகனத்தை மூன்று வேரியன்ட்களில்  வழங்குகிறது: பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ்

  • இது 17.3kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது,  230km ரேன்ஜை -ஐக் கொண்டுள்ளது.

  • அதன் பின்புற-ஆக்ஸிலில்  பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் மூலம் 42PS மற்றும் 110Nmஐ உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  • மே 22 ஆம் தேதி முதல் டெலிவரி தொடங்கும்.

எம்ஜி காமெட் EVக்கான முன்பதிவுகள்  இறுதியாக ரூ.11,000 டெபாசிட்டிற்கு அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. இது பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ் ஆகிய மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது - இதன் விலை ரூ.7.98 லட்சம் முதல் ரூ.9.98 லட்சம்  (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும். மேலும் இந்த விலை முதல் 5,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். எம்ஜி நிறுவனம் காமெட் EV காரை வாங்குவோர், முன்பதிவு செய்த நேரம் முதல் டெலிவரி வரை, அதன் மொபைல் செயலி மூலம் தங்கள் ஆர்டரின் நிலையைக் கண்காணிக்க உதவுகிறது.

அல்ட்ரா காம்பாக்ட் பரிமாணங்கள்

MG Comet EV Side

எம்ஜி காமெட் EV என்பது 2-கதவு அல்ட்ரா-காம்பாக்ட் எலக்ட்ரிக் கார் ஆகும், அதன் உள்ளே நான்கு பேர் பயணிக்க இடவசதி உள்ளது. இதன் சப்-3மீ நீளம், 4.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்ட இது சந்தையில் மிகக் குறுகிய காராக இருக்கிறது .

காரில் உள்ள அம்சங்கள்

MG Comet EV Cabin

காமெட் EV ஆனது இன்டெகிரேட்டட் டூயல் 10.25 -இன்ச்  டிஸ்பிளே  செட்டப்பைக்  கொண்டுள்ளது (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காகவும் உள்ளது). அதன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 55 கனெக்டட் கார் அம்சங்களை ஆதரிக்கிறது, இதில் மொபைல் ஆப்ஸ் மற்றும் பிற குரல் கட்டுப்பாடு அம்சங்கள் மூலம் ரிமோட் செயல்பாடுகள் அடங்கும்.

மேலும் படிக்கவும்: 5 - ஆண்டு எதிர்காலத்திட்டத்தை வெளியிடும் எம்ஜி மோட்டார் இந்தியா, முக்கிய கவனம் பெறும் EVக்கள்

பாதுகாப்பைப் பொருத்தவரை, எம்ஜி இன் 2-கதவு EV இரட்டை-முன்புற ஏர்பேக்குகள், EBD உடன் ABS,  விர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது.

பேட்டரி மற்றும் பயணதூரம்

MG Comet EV Charging Port

எம்ஜி காமெட்  EV, 17.3kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது,  230km பயணதூரத்தைக் கொண்டுள்ளது. இது 42PS மற்றும் 110Nm உற்பத்தி செய்யும் பின்புற-ஆக்ஸில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. EV ஆனது 3.3kW AC சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது பேட்டரியை 0-100 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய ஏழு மணிநேரமும், 10-80 சதவீதத்தில் இருந்து சார்ஜ் செய்ய ஐந்து மணிநேரமும் ஆகும்.

போட்டியாளர்கள்

MG Comet EV Rear

2-கதவு அல்ட்ரா காம்பாக்ட் EV ஆனது டாடா டியாகோ  EV மற்றும் சிட்ரோன் eC3ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்கவும்: காமெட் EV ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on M ஜி comet ev

explore மேலும் on எம்ஜி comet ev

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience