• English
  • Login / Register

5 -ஆண்டு எதிர்காலத் திட்டத்தை வெளியிடும் எம்ஜி மோட்டார் இந்தியா, முக்கிய கவனம் பெறும் EV க்கள்

published on மே 11, 2023 04:50 pm by rohit

  • 23 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த கார் தயாரிப்பு நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் இந்திய வர்த்தக செயல்பாடுகளுக்காக ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய உள்ளதாகப் பகிர்ந்துள்ளது.

MG logo

  • குஜராத்தில் மற்றொரு உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ள எம்ஜி, தற்போதைய 1.2 லட்சம் ஆண்டு உற்பத்தித் திறனை  3 லட்சமாக அதிகரிக்க உள்ளது.

  • EV பாகங்களின் உள்ளூர் உற்பத்தியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு குஜராத்தில் பேட்டரி அசெம்பிளி பிரிவை நிறுவுகிறது.

  • 4-5 புதிய கார்களை அறிமுகபடுத்தும் திட்டத்துடன் உள்ளது அவை பெரும்பாலும் EV க்களாக இருக்கும்.

  • 2028 ஆம் ஆண்டுக்குள் EV தயாரிப்பு வரிசையிலிருந்து மொத்த கார் விற்பனையில் 65 முதல் 75 சதவீதத்தை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.

எம்ஜி மோட்டார்  இந்திய சந்தையில் அதன் பங்களிப்பை வலுப்படுத்துகிறது மற்றும் புதிதாக அறிவுக்கப்பட்டுள்ள அதன் 5-ஆண்டு எதிர்காலத் திட்டங்களை உறுதிப்படுத்துகிறது. அதில் புதிய தொழிற்சாலையை நிறுவுதல், புதிய கார்களை அறிமுகப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை உள்ளூர் மயமாக்குதல் மற்றும் புத்தம் புதிய மூதலீட்டு சுழற்சி ஆகியவை அடங்கியுள்ளன. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் இதோ காணலாம் வாருங்கள்:

உள்ளூர்மயமாக்கல் மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்துதல்

MG Halol plant in action


ஏற்கனவே உள்ள 1.2 லட்சம் கார்களிலிருந்து ஆண்டுக்கு 3 லட்சம் கார்களாக உற்பத்தி வெளியீட்டை அதிகரிக்க  குஜராத்தில் இரண்டாவது உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க எம்ஜி திட்டமிடுகிறது.

கார் தயாரிப்பு நிறுவனம், குஜராத்தில் EV கூறுகளின் உள்ளூர் உற்பத்தியை வலுப்படுத்தவும் பேட்டரி அசெம்பிளி பிரிவை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.  அது புதிய தொழில்நுட்பங்களான ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்ஸ் மற்றும் செல் உற்பத்தி ஆகியவற்றிலும் JVs மற்றும் மூன்றாவது தரப்பு உற்பத்தி மூலமாக உள்ளூர்மயமாக்கலை அதிகரிக்கவும் முதலீடு செய்யும்

அடுத்து வரும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியர்களிடையே பெரும்பான்மையான ஷேர் ஹோல்டிங்கை பகிர்வதற்காக திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க: 2023 ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார் பிராண்டுகள் இதோ

புதிய கார்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை

MG ZS EV

குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், நமது சந்தையில் பெரும்பாலும் EV க்களாக வரும் நான்கு முதல் ஐந்து கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக எம்ஜி தெரிவித்துள்ளது நமது. சந்தையில் 2028க்குள் அதன் மொத்த விற்பனையில் 65 முதல் 75 சதவீதம் EV கார்களாக இருக்கும் எனவும் கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு

MG Comet EV

மேலே-குறிப்பிடப்பட்ட நோக்கங்களை அடைய, கார் தயாரிப்பு நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் இந்திய வர்த்தக செயல்பாடுகளில் ரூ.5,000 கோடி க்கு அதிகமாக முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. 2028 இல் நோக்கத்தை அடைவதற்கான மற்றொரு வழி அதிகளவு பணியாளர்களை அதாவது 20,000 அளவிற்கு ஆற்றல்மிக்க பணியாளர்களை பணியமர்த்துதல் ஆகும்.

மேலும் படிக்க: 2023 ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 15 கார் பிராண்டுகள் இதோ

இதுவரை உள்ள எம்ஜி -யின் இந்திய இலக்குகள்

2023 MG Hector

தனது நடுத்தர அளவு எஸ்யூவி யான  ஹெக்டர் உடன் 2019 -ல் இந்தியாவிற்குள் கார் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் நுழைந்துள்ளது. அதன் 4- வருட காலப்பகுதியில், முழு-அளவுள்ள எஸ்யூவி மற்றும் இரண்டு EVக்கள் உள்ளிட்ட கார்களை நமது சந்தையில் எம்ஜி மோட்டார் அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் ஒன்று இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காரான புதிதாக அறிமுகப்பட்ட கோமெட் EV ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில், அது ஹோண்டாவிற்குப் பிறகு எட்டாவதாக சிறப்பாக விற்பனையாகும் கார் ஆகும்.

மேலும் படிக்க: 2023 எம்ஜி ஹெக்டர் முதல் பயணம்: ADAS மற்றும் சேர்க்கப்பட்ட அம்சங்கள் ப்ரீமியத்திற்கு ஏற்புடையதாக உள்ளனவா?

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி இவிஎக்ஸ்
    மாருதி இவிஎக்ஸ்
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev5
    க்யா ev5
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience