• English
  • Login / Register

ஜனவரி 2024 முதல் மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது

மாருதி ஆல்டோ கே10 க்காக நவ 27, 2023 06:44 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் மாருதி ஜிம்னி போன்ற சமீபத்திய வெளியீடுகள் உட்பட அனைத்து மாடல்களிலும் விலை உயர்வு இருக்கும்.

Suzuki logo

  • விலை உயர்வு வெவ்வேறு மாடல்கள் மற்றும் வேரியன்ட்களுக்கு ஏற்ப மாறுபடும்.

  • பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகியவை விலை உயர்வுக்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

  • மாருதியின் தற்போதைய வரிசையில் அரேனா மற்றும் நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும் 17 மாடல்கள் உள்ளன.

கார் தயாரிப்பாளர்கள் ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் விலை உயர்வை அறிவிப்பது ஒரு பொதுவான நடைமுறையாகும், இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். 2024 நெருங்கிவிட்ட நிலையில், மாருதி ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும் வகையில் விலை உயர்வை அறிவித்துள்ளது. வெவ்வேறு மாடல்கள் மற்றும் வேரியன்ட்களுக்கு ஏற்ப விலை மாற்றம் இருக்கும்.

உயர்வுக்கான காரணம்

Maruti Fronx

பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகியவற்றின் விளைவாக தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளது, அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்று மாருதி கூறியுள்ளது. எனினும், விலை உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. மாருதியின் தற்போதைய வரிசையின் தற்போதைய மாடல் வாரியான விலை விவரம் உங்கள் பார்வைக்கு.

மாருதி அரேனா மாடல்கள்

மாடல்

விலை வரம்பு

மாருதி ஆல்டோ K10

ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம்

மாருதி S-பிரஸ்ஸோ

ரூ.4.26 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம்

மாருதி இகோ

ரூ.5.27 லட்சம் முதல் ரூ.6.53 லட்சம்

மாருதி செலிரியோ

ரூ.5.37 லட்சம் முதல் ரூ.7.14 லட்சம்

மாருதி வேகன் R

ரூ.5.54 லட்சம் முதல் ரூ.7.42 லட்சம்

மாருதி ஸ்விஃப்ட்

ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம்

மாருதி டிஸையர்

ரூ.6.51 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம்

மாருதி எர்டிகா

ரூ.8.64 லட்சம் முதல் ரூ.13.08 லட்சம்

மாருதி பிரெஸ்ஸா

ரூ.8.29 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம்

இதையும் பார்க்கவும்: 2024 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸை விட இந்த 5 விஷயங்களை வழங்க முடியும்

நெக்ஸா மாடல்கள்

மாடல்

விலை வரம்பு

மாருதி இக்னிஸ்

ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.16 லட்சம்

மாருதி பலேனோ

ரூ.6.61 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம்

மாருதி ஃபிரான்க்ஸ்

ரூ.6.61 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம்

மாருதி சியாஸ்

ரூ.9.30 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம்

மாருதி XL6

ரூ.11.46 லட்சம் முதல் ரூ.14.82 லட்சம்

மாருதி ஜிம்னி

ரூ.12.74 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம்

மாருதி கிராண்ட் விட்டாரா

ரூ.10.70 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம்

மாருதி இன்விக்ட்டோ

ரூ.24.82 லட்சம் முதல் ரூ.28.42 லட்சம்

மாருதியின் தற்போதைய வரிசையில் அரேனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டும் உட்பட மொத்தம் 17 மாடல்கள் உள்ளன. மிகவும் விலை குறைவான மாடலான மாருதி ஆல்டோ K10, ரூ.3.99 லட்சத்தில் தொடங்கி, விலை உயர்ந்த காரான இன்விக்டோ -வின் விலை 28.42 லட்சம் வரை இருக்கிறது.

இதையும் பார்க்கவும்: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்

மாருதியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கூடுதல் அறிவிப்புகள்

Upcoming Maruti cars

சமீபத்தில் எங்களுக்கு ஒரு அப்டேட் கிடைத்தது அதன் படி 2031-ம் ஆண்டுக்குளாக 5 புதிய ICE மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஒரு புதிய MPV, 2 புதிய ஹேட்ச்பேக்குகள் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்யூவி ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: ஆல்டோ K10 ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti ஆல்டோ கே10

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience