Mahindra Thar Roxx காரில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை சமீபத்திய டீஸர் படம் உறுதி செய்துள்ளது
published on ஜூலை 30, 2024 07:34 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பெய்ஜ் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தார் ரோக்ஸ் காரில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் அதன் ஒட்டுமொத்த இன்-கேபின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சில பிரீமியம் வசதிகளுடன் வரும்.
-
மஹிந்திரா தார் 5-டோர் மாடலுக்கு தார் ரோக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
அதன் சமீபத்திய டீஸர் படத்தில் 5 இருக்கைகள் கொண்ட அமைப்பு மற்றும் பெய்ஜ் கலர் கேபின் தீம் ஆகியவற்றைக் பார்க்க முடிகிறது.
-
10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை 3-டோர் மாடலுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
-
விலை ரூ.15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் ஒரு வீடியோ டீசரை வெளியிட்ட சிறிது நேரத்தில் மஹிந்திரா நிறுவனம் மேலும் ஒரு புதிய டீஸர் படத்தை வெளியிட்டது. படத்தில் அனைவரது கவனத்தை ஈர்க்கும் விவரம் என்னவென்றால், சமீபத்திய ஸ்பை ஷாட்கள் மூலம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு பனோரமிக் சன்ரூஃப் இந்த காரில் இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கார் மஹிந்திரா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15 அன்று இந்த காரை அறிமுகப்படுத்தவுள்ளது.
கூடுதல் விவரங்கள்
பனோரமிக் சன்ரூஃப் இருப்பதால் தார் ரோக்ஸ்ஸின் எதிர்பார்க்கப்படும் வசதிகளின் பட்டியல் பெரிதாககூடும். இது ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் அதன் நேரடி போட்டியாளர்களை விட கூடுதலாக ஒரு புள்ளியை இதற்கு கொடுக்கும். ஃபோர்ஸ் கூர்க்கா, மாருதி சுஸூகி ஜிம்னி ஆகிய இரண்டும் சன்ரூஃப் உடன் வரவில்லை. ஸ்பை ஷாட்களில் கவனிக்கப்பட்டதை போல கேபினுக்குள் இருக்கும் பெய்ஜ் நிற அப்ஹோல்ஸ்டரியை நீங்கள் கவனிக்கலாம். மேலும் டீசரில் சன்ரூஃப் தவிர மூன்றாவது வரிசையின் அமைப்பை காட்டாததால், தார் ரோக்ஸ் 5 இருக்கைகள் கொண்டதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
காரில் என்ன வசதிகள் கிடைக்கும்?
டீசரில் கவனித்து பார்த்தால் ஃபிரீ-புளோட்டிங் டச்ஸ்கிரீன் யூனிட் (XUV400 காரிலிருந்து 10.25-இன்ச் டிஸ்ப்ளே) கொடுக்கப்பட்டிருப்பதையும் நாம் கவனிக்க முடியும். 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (XUV 3XO மற்றும் XUV400 போன்றவை), டூயல்-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகளும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை பாதுகாப்புக்காக வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தொடர்புடையது: Mahindra Thar Roxx பெயர் தொடர்பான கார்தேக்கோவின் இன்ஸ்டாகிராம் கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்துள்ளன
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மஹிந்திரா 3-டோர் மாடல் காரில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஸ்டாண்டர்டாக வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் பவர் அவுட்புட்டில் மாற்றங்கள் இருக்கலாம். இந்த ஆப்ஷன்களில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) செட்டப் என இரண்டும் வழங்கப்படலாம்.
விலை என்னவாக இருக்கும்?
மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் ஆரம்ப விலை ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் உடன் நேரடியாக போட்டியிடும். மேலும் மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்.
இன்ஸ்டன்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்