• English
    • Login / Register

    ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வின் மூலமாக இந்தியாவில் களமிறங்கும் வின் ஃபாஸ்ட் நிறுவனம்

    vinfast vf7 க்காக ஜனவரி 13, 2025 10:09 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 54 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 5-சீட்டர் கார் ஆகும். இது இந்தியாவுக்கான முதல் EV -யாக இது இருக்க வாய்ப்புள்ளது. இது முழுவதும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (CBU) இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    VinFast VF7 teased

    2023 அக்டோபரில் வியட்நாமை சேர்ந்த EV தயாரிப்பாளரான வின்ஃபாஸ்ட் -ன் முதல் அப்டேட்டை கிடைத்துள்ளது. விரைவில் இந்தியாவில் அதன் முதல் அறிமுகம் இருக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் கட்டத் தொடங்கியுள்ளது. வின்ஃபாஸ்ட் இப்போது வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் VF7 எலக்ட்ரிக் காரின் டீசரையும் இப்போது வெளியிட்டுள்ளது.

    A post shared by VinFast India (@vinfast.india)

    வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை பற்றிய சுருக்கமான பார்வை

    வின்ஃபாஸ்ட் என்பது வியட்நாமை சேர்ந்த ஒரு EV நிறுவனம் ஆகும். இது 2017 ஆண்டில் செயல்படத் தொடங்கியது பின்னர் வியட்நாமில் மட்டுமல்ல மற்ற சர்வதேச சந்தைகளிலும் அதன் இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் வின்ஃபாஸ்ட் வியட்நாமில் 3 எலக்ட்ரிக் கார்கள், இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு எலக்ட்ரிக் பஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. 3 கார்களில், இரண்டு கார்கள் உலகளாவிய சந்தைகளுக்கானவை. 2022 ஆண்டில் வின்ஃபாஸ்ட் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் தனது ஷோரூம்களை திறந்தது.

    VF7 என்றால் என்ன?

    VinFast VF7

    VF7 என்பது 4,545 மி.மீ மற்றும் 2,840 மி.மீ வீல்பேஸ் கொண்ட 5 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இந்தியாவில் இது முதல் காராக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மற்றும் அதன் விவரங்கள் மஹிந்திரா XEV 9e மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 காருக்கு இணையாக உள்ளன. வின்ஃபாஸ்ட் இந்தியாவிற்குள் நுழைந்தவுடன் VF7 காரை முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்கு கொண்டு வரலாம். பின்னர் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படலாம்.

    இதில் 75.3 kWh பேட்டரி பேக் உள்ளது. WLTP க்ளைம்டு 450 கி.மீ வரை ரேஞ்ச் உள்ளது. உலகளாவிய சந்தைகளில் இது ஒரே ஒரு (204 PS/310 Nm) மற்றும் Nm டூயல் மோட்டார் (354 PS/ 500 Nm) செட்டப்களில் கிடைக்கிறது. முந்தையது ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) ஆப்ஷன் உடன் வழங்கப்பட்டாலும் மற்றொன்று ஆல்-வீல் டிரைவ் டிரெய்னை (AWD) பெறுகிறது.

    மேலும் படிக்க: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் BYD Sealion 7 அறிமுகமாகவுள்ளது

    வின்ஃபாஸ்ட் VF7 வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    VinFast VF7 cabin

    வின்ஃபாஸ்ட் ஆனது VF7 எலக்ட்ரிக் எஸ்யூவி பனோரமிக் சன்ரூஃப், 12.9-இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

    வின்ஃபாஸ்ட் VF7 விலை மற்றும் போட்டியாளர்கள்

    வின்ஃபாஸ்ட் VF7 காரின் விலை ரூ. 50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா XEV 9e, BYD சீலையன் 7, ஹூண்டாய் அயோனிக் 5, மற்றும் கியா EV6  ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on VinFast vf7

    explore மேலும் on vinfast vf7

    • vinfast vf7

      Rs.50 Lakh* Estimated Price
      செப் 18, 2025 Expected Launch
      ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    space Image

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience