சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra Thar 5-Door அறிமுகம் செய்யப்படவுள்ள மாதத்தை உறுதி செய்த மஹிந்திரா நிறுவனம்

மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக பிப்ரவரி 28, 2024 03:10 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

முதலீட்டாளர் சந்திப்பில் மஹிந்திரா தாரின் பெரிய பதிப்பு ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

  • மஹிந்திரா ஆகஸ்ட் 15 அன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றது.

  • 5-டோர் தார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டையும் 4WD மற்றும் RWD செட்டப்களுடன் பெறும்.

  • இதன் விலை ரூ.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-டோர் மஹிந்திரா தார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. நீண்ட காலமாகவே தயாரிப்புக்கு முந்தைய கட்டத்தில் உள்ள இந்த கார் அடிக்கடி சோதனை செய்யப்பட்டும் வருகின்றது. ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள ஸ்பை ஷாட்களின் மூலமாக அதன் வடிவமைப்பு மற்றும் கேபின் பற்றிய விவரங்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. மஹிந்திரா 5-டோர் தார் வெளியீட்டுக்காக நாம் அதிக காலம் காத்திருக்க வேண்டியதிருக்காது. காரணம் மஹிந்திரா இந்த காருக்கான அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இது நிச்சயமாக இந்த ஆண்டு வெளியிடப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 அறிமுகமாகிறதா ?

முதலீட்டாளர் சந்திப்பில் மஹிந்திரா மஹிந்திராவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (ஆட்டோ ஃபார்ம் செக்டார்) ராஜேஷ் ஜெஜூரிகர் மஹிந்திரா 5-டோர் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மஹிந்திரா தார் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அதாவது இது ஜூலை 2024 -ல் தொடங்கப்படும்.

மேலும் பார்க்க: சோதனை செய்யப்படும் போது சேற்றில் சிக்கிய 5-டோர் மஹிந்திரா தார்

இருப்பினும், ஆகஸ்ட் 15 அன்று (இந்திய சுதந்திர தினம்) தேசபக்தியின் அடையாளமாக புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. மேலும் 5-டோர் தார் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருப்பதாலும் முதலில் இந்தியா-ஒன்லி தயாரிப்பாக இருக்கும் என்பதாலும் ஆகஸ்ட் 15 2024 அன்று விலையை மஹிந்திரா அறிவிக்க வாய்ப்புள்ளது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

தார் 5-டோர் பதிப்பு 3-டோர் 4WD மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்களை பெறும்: 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின். இந்த இன்ஜின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படும். ஃபோர் வீல் டிரைவ் மற்றும் ஃபோர் வீல் டிரைவ் செட்டப்களை கொண்டிருக்கும்.

மேலும் படிக்க: மஹிந்திரா தார் 5-டோர் தார் 3-டோர்க்கு மேல் இந்த 10 அம்சங்களை வழங்கும்

3-டோர் பதிப்பில், டர்போ-பெட்ரோல் இன்ஜின் 152 PS/300 Nm மற்றும் டீசல் யூனிட் 132 PS/300 Nm அவுட்புட்டை உருவாக்குகிறது. இருப்பினும் 5-டோர் பதிப்பில் இந்த இன்ஜின்கள் அதிக அளவில் ட்யூன் செய்யப்பட்டிருக்கலாம். ஒருவேளை ஸ்கார்பியோ N -க்கு நெருக்கமாக இருக்கும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

மஹிந்திரா XUV400 இன் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீனின் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

5-டோர் தாரின் பல்வேறு விவரங்கள் பல்வேறு ஸ்பை ஷாட்கள் மூலமாக தெரிய வந்துள்ளன. இது ஒரு பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஒருவேளை 10.25-இன்ச் யூனிட்), டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் அதன் நிலையான மெட்டல் ரூஃபுக்கு பதிலாக சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

5-டோர் மஹிந்திரா தார் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா -வுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இது மாருதி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்

மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra தார் ROXX

M
manjunath
Sep 3, 2024, 5:43:55 PM

THAR seven seater will be available in future in india?

R
rajendra prasad
Apr 17, 2024, 6:57:42 PM

I was waiting for this 5 doors family oriented model. If anybody can tell the waiting period after booking?

C
chittibabu
Feb 27, 2024, 7:20:45 PM

Waiting for booking

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.42 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை