• English
  • Login / Register

சோதனை செய்யப்படும் போது சேற்றில் சிக்கிய 5-டோர் மஹிந்திரா தார்

published on பிப்ரவரி 26, 2024 07:17 pm by shreyash for மஹிந்திரா தார் ராக்ஸ்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நீங்கள் 5-டோர் தாரில் சாலைக்கு வெளியே செல்ல நீங்கள் விரும்பினால், 4WD வேரியன்டை தேர்ந்தெடுக்கும் போது கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டியிருக்கும் என்பதை சமீபத்திய ஸ்பை வீடியோ காட்டுகிறது

Mahindra Thar 5-door Stuck In Manali

  • சோதனை கார் ஒரு ரியர்-வீல்-டிரைவ்  (RWD) வேரியன்ட் போல் தெரிகிறது.

  • கிடைக்கக்கூடிய டிராக்ஷன் மற்றும் டயர்களின் கண்டிஷன் போன்ற பல காரணிகள் கார் சிக்கிக்கொண்டதற்கு காரணமாக இருக்கலாம்.

  • மஹிந்திரா அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் எஞ்சினுடன் தாரின் நீளமான  வெர்ஷனை வழங்க திட்டமிட்டுள்ளது.

  • இதன் விலை ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-டோர் மஹிந்திரா தார் டெஸ்ட் மியூல்களின் பல ஸ்பை ஷாட்கள் இணையத்தை மூழ்கடிக்கும் அதே வேளையில், சமீபத்திய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது, அது 4WD SUV-ஐ விட ரியர்-வீல்-டிரைவ் வேரியன்ட்டைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மணாலியில் ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோவில் 5-டோர் தார் டெஸ்ட் மியூல் சேற்றுப் பாதையிலிருந்து வெளியேற போராடியது பற்றி தெரியவந்தது, இது ஆஃப்-ரோட் பயணத்திற்கான 4WD வேரியன்டை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை நம்மக்கு உணர்த்துகிறது.

A post shared by Rajesh Thakur (@rajeshhimalayan)

வீடியோவை உன்னிப்பாகக் கவனித்ததில், டெஸ்ட் மியூலின் ரியர் வீல்கள் மட்டுமே இயக்கத்தில் இருப்பது தெளிவாகிறது, இது 4X2 (ரியர்-வீல்-டிரைவ்) வேரியன்டாக இருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் 4WD எங்கேஜ் ஆகாமல் இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, போதுமான டிராக்ஷன் இல்லாததால், சேறும் சகதியுமான நிலப்பரப்பில் செல்லும் அதன் திறனை குறைத்திருக்கலாம். உண்மையில், இந்த நிகழ்வை மட்டும் காரணம் காட்டி தார் 5-டோர் ஆஃப்-ரோடு திறன்களை மதிப்பிடக்கூடாது. பனி மற்றும் சேறு கலந்த நிலப்பரப்பில் பயணிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். கூடுதலாக, SUVயில் ஸ்டாண்டர்ட் டயர்களைப் பயன்படுத்துவதால் அதன் திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம், இது வழுக்கக்கூடிய சாலைகளுக்கு உகந்ததாக இருக்காது.

நிச்சயமாக, ஒரு காரின் செயல்திறன், டிரைவரின்  திறமை மற்றும் டெஸ்ட் மியூலில் பயன்படுத்தப்படும் டயர்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படலாம். சவாலான நிலப்பரப்பில் வாகனம் எவ்வளவு திறம்பட செல்ல முடியும் என்பதை தீர்மானிப்பதில் இந்த அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வரவிருக்கும் 5-டோர் மஹிந்திரா தார் பற்றிய கூடுதல் தகவல்கள்

5-door Mahindra Thar Cabin

வரவிருக்கும் மஹிந்திரா தார் 5-டோர், 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், அதன் 3-டோர் மாடலில் உள்ளது போன்றே அதே எஞ்சின் ஆப்ஷன்களைப் பயன்படுத்த உள்ளது. இருப்பினும், இந்த என்ஜின்கள் அதிக செயல்திறனை வழங்குவதற்காக டியூன் செய்யப்படும். இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். வழக்கமான தார் போலவே, 5-டோர் வேரியன்ட் 4-வீல்-டிரைவ் (4WD) மற்றும்  ரியர்-வீல்-டிரைவ் (RWD) டிரைவ்டிரெய்ன் ஆகிய இரண்டின் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

மேலும் பார்க்க: ஃபோர்ஸ் கூர்காவில் எடுக்கப்பட்ட 5-டோரின் சமீபத்திய ஸ்பை ஷாட்கள் அது லான்ச் செய்ய தயாராக இருப்பதை காட்டுகிறது

தார் 3-டோர் வேரியண்டில் வழங்கப்பட்டுள்ளதை விட கூடுதல் அம்சங்கள் 

5-door Mahindra Thar Spied

மஹிந்திராவின் 3-டோர் வேரியண்டுடன் ஒப்பிடுகையில், 5-டோர் வெர்ஷனில் கூடுதல் அம்சங்களுடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு பெரிய டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, சிங்கிள் பேன் சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட்கள் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM (இன்சைட் ரியர் வியூ மிரர்) ஆகியவை இந்த மேம்பாட்டில் அடங்கும். நீளமான தார் அதன் ஸ்டாண்டர்ட் வெர்ஷனை தாண்டி என்ன வழங்க முடியும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, தார் 5-டோரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஃப்ரன்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமராவைப் பெறலாம். மேலும் இதை விட உயர் வேரியன்ட்களில் மேம்படுத்தப்பட்ட பார்வைக்காக 360 டிகிரி கேமராவையும் பெறலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் 5-டோர் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும், அதே நேரத்தில் ஃபோர்ஸ் கூர்காவின் 5-டோர்  வெர்ஷனுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: தார் ஆட்டோமேட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra தார் ROXX

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience