ஜனவரி 2025 முதல் ஹூண்டாய் கார்களின் விலை அதிகரிக்க உள்ளது
சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகள் உட்பட, ஹூண்டாயின் ஒட்டுமொத்த இந்திய கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்
பொதுவாக ஆண்டின் இறுதியில், கார் தயாரிப்பாளர்கள் கார்களுக்கான விலை மாற்றங்களை அறிவிப்பது வழக்கம், மேலும் ஹூண்டாய் அதற்கு விதிவிலக்கல்ல. 2025 ஆம் ஆண்டு நெருங்கிவிட்ட இந்த நிலையில், ஹூண்டாய் தனது MY2025 ரேஞ்சுகளின் விலை உயர்வை அறிவித்துள்ளது, மேலும் இந்த விலை உயர்வு 2025 ஜனவரியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. மாடல் மற்றும் வேரியன்ட்களைப் பொறுத்து அதற்கான விலைகள் மாறுபடும், ஹூண்டாய் உங்களின் கனவுக் காரக இருக்கும்பட்சத்தில் விலை அதிகரிப்பதற்கு முன்னரே உங்களின் கனவுக் காரை வாங்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இம்மாதம் அமைகிறது. காத்திருக்க வேண்டாம்-சேமிப்புடன் உங்களின் புத்தாண்டை தொடங்குங்கள்!
விலை உயர்வுக்கான காரணங்கள்
அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், சாதகமற்ற மாற்று விகிதங்கள் மற்றும் அதிகரித்த லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் காரணமாகக் கார்களின் விலையை உயர்த்த நேர்ந்ததாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடலைப் பொறுத்து விலைகள் ரூ.25,000 வரை அருகம் இருக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள ஹூண்டாய் மாடல்களின் விலைகள்
மாடல் |
விலை வரம்பு |
கிராண்ட் i10 நியோஸ் |
ரூ.5.92 லட்சம் முதல் ரூ.8.56 லட்சம் வரை |
i20 |
ரூ.7.04 லட்சம் முதல் ரூ.11.21 லட்சம் வரை |
i20 N லைன் |
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.52 லட்சம் வரை |
ஆரா |
ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.05 லட்சம் வரை |
வெர்னா |
ரூ.11 லட்சம் முதல் ரூ.17.48 லட்சம் வரை |
எக்ஸ்டர் |
ரூ.6 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரை |
வென்யூ |
ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.53 லட்சம் வரை |
வென்யூ N லைன் |
ரூ.12.08 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் வரை |
கிரெட்டா |
ரூ.11 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை |
கிரெட்டா N லைன் |
ரூ.16.82 லட்சம் முதல் ரூ.20.45 லட்சம் வரை |
அல்கஸார் |
ரூ.14.99 லட்சம் முதல் ரூ.21.55 லட்சம் வரை |
தூக்ஸன் |
ரூ.29.02 லட்சம் முதல் ரூ.35.94 லட்சம் வரை |
அயோனிக் 5 |
ரூ.46.05 லட்சம் |
ஹூண்டாயின் தற்போதைய இந்திய வரம்பில் மூன்று N லைன் வேரியன்ட்கள் உட்பட 13 மாடல்கள் உள்ளன. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மிகவும் மலிவு விலையில் ரூ. 5.92 லட்சத்தில் தொடங்குகிறது, அதே சமயம் பிரீமியம் காரக ஹூண்டாயின் ஐயோனிக் 5 உள்ளது, இதன் விலை ரூ.46.05 லட்சமாக உள்ளது.
மேலும் பார்க்க: பாரத் NCAP -ல் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது Hyundai Tucson
இந்தியாவில் ஹூண்டாயின் அடுத்த அறிமுகம் என்ன?
கொரிய வாகன உற்பத்தியாளர் 2025 ஆம் ஆண்டில் கிரெட்டா EV-இன் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்துடன் தொடங்க உள்ளது, இது ஜனவரியில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வரக்கூடிய பிற புதிய ஹூண்டாய் கார்களில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட தூக்ஸன், அயோனிக் 6 மற்றும் அநேகமாக புதிய தலைமுறை வென்யூ ஆகியவை அடங்கும்.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க : ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் AMT