Hyundai Creta EV ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது
published on நவ 22, 2024 04:35 pm by dipan for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
- 128 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (COO) தருண் கார்க், ஹூண்டாய் கிரெட்டா EV ஜனவரி 2025-இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்
-
கிரெட்டா EV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் ஹூண்டாயின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய எலெக்ட்ரிக் காராக மாற உள்ளது.
-
இது கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனை அடிப்படையாக கொண்டிருக்கும்.
-
டிசைனைப் பொறுத்தவரை EV-குறிப்பிட்ட மாற்றங்களுடன் கிரெட்டாவை ஒத்திருக்கும்.
-
கேபினில் 10.25-இன்ச் டூயல் டிஸ்ப்ளே மற்றும் டூயல்-டோன் தீம் உள்ளிட்ட நிலையான கிரெட்டாவைப் போன்ற ஒரு தளவமைப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதுகாப்பு தொகுப்பில் ஆறு ஏர்பேக்குகள் (தரநிலையாக) மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
-
பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப் பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச் 400 கிலோமீட்ருக்கு மேல் இருக்கும்.
-
விலைகள் ரூ. 20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா EV-யை விரிவாக சோதித்து வருகிறது, பல ஸ்பை ஷாட்கள் மற்றும் வீடியோக்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். சமீபத்தில், ஹூண்டாய் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (COO) தருண் கார்க் சமீபத்திய முதலீட்டாளர் சந்திப்பின் போது ஜனவரி 2025-க்குள் இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா EV அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
கிரெட்டாவைப் போன்றே ஒரு டிசைன்
முன்பு காணப்பட்ட கிரெட்டா EV-யின் டெஸ்ட் மியூல்கள், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா ICE (இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்) மாடலை ஒத்த டிசைனை வெளிப்படுத்தின. இணைக்கப்பட்ட LED DRL செட்-அப்புடன் ஒத்த ஹெட்லைட் டிசைனைக் கொண்டிருந்தன. கூடுதலாக, டெயில் லைட் டிசைன், மையத்தில் லைட் பார் உட்பட, ICE கிரெட்டாவுடன் ஒத்திருக்கும் என்று ஸ்பை ஷாட்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மூடிய கிரில் செட்-அப் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் இதை மேலும் தனித்துவமான அமைக்கும். கூடுதலாக, ஏரோடைனமிகல் முறையில் வடிவமைக்கப்பட்ட 17 இன்ச் அலாய் வீல்களைப் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Tata Harrier EV மார்ச் 2025-க்குள் விற்பனைக்கு வரவுள்ளது
ஒரே மாதிரியான உட்புற வடிவமைப்பு
ஸ்டாண்டர்ட் கிரெட்டாவைப் போன்ற உட்புற அமைப்பைக் கொண்ட கிரெட்டா EV-யின் டெஸ்ட் மியூலானது சமீபத்தில் சாலையில் காணப்பட்டது. ஸ்பை ஷாட்கள் டூயல் டோன் உட்புறத்தையும் டூயல்-ஸ்கிரீன் காட்சிகளுக்கான ஒருங்கிணைந்த செட்-அப்பையும் காட்சிப்படுத்தியது. இருப்பினும், இது ஒரு புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் பொருத்தப்பட்ட டிரைவ் செலக்டரைக் கொண்டிருக்கும், இது பெரிய ஐயோனிக் 5-இன் டிசைனை ஒத்திருக்கும்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
ஸ்பை ஷாட்களில் காணப்படுவது போல், கிரெட்டா EV ஆனது 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் காற்றோட்டமான முன் சீட்களுடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு ஏர்பேக்குகள் (தரநிலையாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு அம்சங்களை கிரெட்டா EV-யில் ஹூண்டாய் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாராவை வீழ்த்தி, அக்டோபர் 2024-இல் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவியாக மாற உள்ளது
பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்
EV-யின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய விவரங்களை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், அதன் போட்டியாளர்களைப் போலவே, இது சிங்கள் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரெட்டா EV ஆனது 400 கிலோமீட்ருக்கு மேல் கிளைம் செய்யப்படும் ரேஞ்ஜை வழங்கக்கூடியது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா EV ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV, டாடா கர்வ் EV மற்றும் வரவிருக்கும் மாருதி eVX ஆகியவற்றுடன் போட்டியிடும். கூடுதலாக, இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400-க்கு பிரீமியம் மாற்றாக செயல்படும்.
குறிப்பு: ICE-பவர்டு கிரெட்டாவின் படங்கள் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: Hyundai Creta-வின் ஆன் ரோடு விலை