Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது
published on நவ 19, 2024 01:14 pm by dipan for டாடா ஹெரியர் ev
- 71 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹாரியர் EV மற்றும் டாடா சியரா எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் டாடா உறுதி செய்துள்ளது.
2024-25 நிதியாண்டில் இரண்டு புதிய EV -களை அறிமுகம் செய்யப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கர்வ்வ் இவி சில மாதங்களுக்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஹாரியர் இவி 2024-25 நிதியாண்டின் இறுதியில், அதாவது மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரும் என்பதையும் மேலும் டாடா சியரா 2025 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்பதையும் உறுதி செய்துள்ளது. டாடா ஹாரியர் EV -யில் என்ன கிடைக்கும் என்பதை என்பதைப் பார்ப்போம்:
டூயல் மோட்டார் செட்டப்
ஹாரியர் EV -யில் ரியர்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் இருக்கும் என்பதை சில ஸ்பை ஷாட்கள் மூலம் தெரிய வந்தது. ஆகவே டாடா EV ஆனது ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்களின் ஆப்ஷனையும் கொண்டிருக்கலாம்.
பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் டாடா கர்வ் EV போலவே 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம். அதற்கு கீழே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும் கூட 502 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை இது கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஹாரியர் போன்ற வடிவமைப்பு
ஹாரியர் EV ஆனது அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் காரை போலவே தோற்றத்தை கொண்டிருக்கும் என்பதை ஏராளமான ஸ்பை காட்சிகள் காட்டுகின்றன. மேலும், 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா ஹாரியர் EV கான்செப்டை மற்ற டாடா கார்களுடன் காட்சிக்கு வைத்திருந்தது. இது உற்பத்திக்கு தயாராக இருக்கும் பதிப்பிற்கு நெருக்கமாக இருந்தது.
அதே கான்செப்ட் அதன் ICE உடன் ஒப்பிடும்போது வித்தியாசமான அலாய் வீல்களை கொண்டிருந்தது. மேலும் குறிப்பிட்ட EV வடிவமைப்பு எலமென்ட்களுடன் இது ஒரு குளோஸ்டு கிரில்லும் கொடுக்கப்படவுள்ளது. வெளியீடு மிக விரைவில் இருக்கும் என்பதால் உற்பத்திக்கு தயாராக இருக்கும் பதிப்பின் உண்மையான வடிவமைப்பு வரும் மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO மற்றும் டாடா நெக்ஸான்: பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
புதிய ஹாரியரின் பெரும்பாலான முக்கிய வசதிகள் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி உள்ளிட்ட ஆகியவை அதன் எலக்ட்ரிக் பதிப்பிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வென்டிலேட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் (மூட் லைட்டிங் உடன்) மற்றும் ஜெஸ்டர்டு-பவர்டு கொண்ட டெயில்கேட் ஆகியவற்றைப் பெறலாம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இதில் 7 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா இருக்கும். ஹாரியர் EV ஆனது ஹாரியரின் ICE பதிப்பில் காணப்படும் அட்வான்ஸ்டு டிரைவ் அசிஸ்ட் செட்டப்களையும் (ADAS) பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா ஹாரியர் EV காரின் விலை சுமார் ரூ. 30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். மஹிந்திரா XEV 9e தவிர இது மஹிந்திரா XUV.e8, பிஒய்டி 3 அட்டோ மற்றும் மாருதி eVX ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் MG ZS EV மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகிய கார்களுக்கு மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹாரியர் டீசல்
0 out of 0 found this helpful