சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Kia ​​Sonet HTX வேரியன்ட்டை 6 படங்களில் பாருங்கள்

published on ஜனவரி 24, 2024 02:10 pm by shreyash for க்யா சோனெட்

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் HTX வேரியன்ட் டூயல்-டோன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கியா சோனெட் சமீபத்தில் ஒரு அப்டேட்டை பெற்றது இதன் மூலமாக காரில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன மேலும் வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2024 சோனெட் ஃபேஸ்லிஃப்ட் அதன் டீசல் பவர்டிரெய்னுடன் , மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனையும் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. கியா அப்டேட் செய்யப்பட்ட சோனெட்டை 7 வேரியன்ட்களில் வழங்குகிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-லைன். புதிய சோனெட் -ன் மிட்-ஸ்பெக் HTX வேரியன்ட் -டில் என்ன இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.

முன் பக்கத்தில், 2024 கியா சோனெட்டின் மிட்-ஸ்பெக் HTX வேரியன்ட், மேட் குரோம் நிறத்தில் டைகர் நோஸ் கிரில்லை கொண்டுள்ளது. HTX வேரியன்ட்டில் LED ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் ஆகியவை உள்ளன. கூடுதலாக, பம்பரின் கீழ் பகுதியில் சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளது, இது காருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கின்றது.

பக்கவாட்டில், கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் மிட்-ஸ்பெக் HTX வேரியன்ட் 16-இன்ச் டயமண்ட்-கட் டூயல்-டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, மற்ற விவரங்கள் HTX வேரியன்ட்டிற்குக் கீழே இருக்கும் சொனேட் -ன் HTK+ வேரியன்ட்டுடன் ஒத்துப்போகின்றன. இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவி வேரியன்டில் சன்ரூஃப் உள்ளது, இது அனைத்து இன்ஜின் ஆப்ஷன்களில் ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது.

பின்புறத்தில் பேசுகையில், இது கனெக்டட் LED டெயில்லேம்ப்கள் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா ஆகியவை உள்ளன. கரடுமுரடான தோற்றம் ஒரு பிளாக்-அவுட் பின்புற பம்பர் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது சில்வர் ஸ்கிட் பிளேட் உடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்கவும்: புதிய Kia Sonet பேஸ்-ஸ்பெக் HTE வேரியன்ட் -ன் விவரங்களை 5 படங்களில் பாருங்கள்

உள்ளே, 2024 கியா சோனெட் HTX ஆனது பிளாக் மற்றும் பிரெளவுன் கலர் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய ஆல்-பிளாக் டாஷ்போர்டை கொண்டுள்ளது. ஏசி வென்ட்கள் மற்றும் டோர் ஹேண்டில்களை சுற்றியும் சில்வர் ஆக்ஸென்ட்கள் பிரீமியம் உணர்வை கொடுக்கின்றன. இந்த வேரியன்ட் லெதரால் சுற்றப்பட்டுள்ள ஸ்டீயரிங் மற்றும் கியர் நாப் ஆகியவை உள்ளன. இருப்பினும், இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT மற்றும் 1.5-லிட்டர் டீசல் iMT அல்லது AT 2024 சோனெட் HTX வேரியன்ட்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் HTX வேரியன்ட்டின் அம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 4.2-இன்ச் செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே, டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -கள், டிரைவ் மோடுகள், பேடில் ஷிஃப்டர்கள், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களில் மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமரா, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைன்டர்கள் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. .

அப்டேட் செய்யப்பட்ட சோனெட்டின் பின்புற பக்கத்தைப் பற்றி பேசுகையில், இது சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் பின்புற இருக்கைகள் கூடுதலான இடவசதிக்கு ஏற்ற வகையில் 60:40 ஸ்பிளிட் விகிதத்தையும் கொண்டுள்ளன.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் அதன் HTX வேரியன்ட்டில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120 PS / 172 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS / 250 Nm). முந்தையது 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றொன்று மூன்று டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுகிறது: 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6-ஸ்பீடு iMT. , மற்றும் ஒரு 6-ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர்.

விலை போட்டியாளர்கள்

2024 கியா சோனெட் காரின் HTX வேரியன்ட்டின் விலை ரூ.11.49 லட்சத்தில் இருந்து ரூ.12.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா,ஹூண்டாய் வென்யூ, மற்றும் மஹிந்திரா XUV300 ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றது.

மேலும் படிக்க: சொனெட் ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

shreyash

  • 50 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது க்யா சோனெட்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை