புதிய Kia Sonet பேஸ்-ஸ்பெக் HTE வேரியன்ட் -ன் விவரங்களை 5 படங்களில் பாருங்கள்
published on ஜனவரி 22, 2024 07:07 pm by rohit for க்யா சோனெட்
- 92 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால், கியா இதில் மியூஸிக் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொடுக்கவில்லை .
-
வெளிப்புறத்தில் ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் கவர்களுடன் கூடிய 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் ஆகியவை உள்ளன.
-
மேனுவல் ஏசி, முன்பக்க பவர் விண்டோஸ் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளன
-
பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்ளன, ஆனால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே கிடைக்கும்.
-
சோனெட் HTE -ன் விலை ரூ. 7.99 லட்சம் முதல் ரூ.9.79 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட் சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய சோனெட் பல்வேறு வடிவமைப்பு மற்றும் புதிய வசதிகளை உள்ளேயும் வெளியேயும் பெற்றிருந்தாலும், அதன் வேரியன்ட் வரிசையானது அப்படியே உள்ளது. புதுப்பிக்கப்பட்ட சப்-4m எஸ்யூவி 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line. பேஸ்-ஸ்பெக் HTE வேரியன்ட்டின் சில படங்களை இப்போது நாங்கள் விவரித்துள்ளோம் அவற்றை நீங்கள் கீழே பார்க்கலாம்:
வெளிப்புறம்
என்ட்ரி லெவல் வேரியன்ட் இருந்தபோதிலும், சோனெட் HTE ஆனது புதிய கிரில்லைக் கொண்டுள்ளது, ஆனால் பியானோ பிளாக் ஃபினிஷ் இல்லை . சோனெட் HTE ஆனது ஹாலோஜன் ஹெட்லைட்களுடன் வருகிறது, DRL -கள் இல்லை என்றாலும், அதற்கான அவுட்லைன்களை பெறுகிறது. முன்பக்க பம்பரில் சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளது.
பேஸ்-வேரியன்ட் என்பதை கவர்கள் கொண்ட 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது முன் ஃபெண்டர் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவற்றால் பார்க்க முடிகின்றது. சோனெட் HTE -யின் பின்புறத்தில், மையப் பகுதி இல்லுமினேட்டட் ஆக இல்லை, மேலும் கனெக்டட் ஹாலோஜன் டெயில்லைட்களுடன் வழங்கப்படுகிறது.
இன்ட்டீரியர் மற்றும் உபகரணங்கள்
2024 கியா சோனெட் HTE காரின் உட்புறம் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் தீமை பெறுகிறது. சென்டர் கன்சோலை சுற்றிலும், ஸ்டீயரிங் வீலிலும் கூட அதிக பிரீமியமாக தோன்றும் வகையில் சில்வர் ஃபினிஷ்களை கியா வழங்கியுள்ளது.
போர்டில் உள்ள உபகரணங்களைப் பொறுத்தவரை, கியா எந்தவிதமான இன்ஃபோடெயின்மென்ட் அல்லது மியூசிக் சிஸ்டத்தையும் வழங்கவில்லை. ஆனால் இது பின்புற வென்ட்கள், முன் பவர் ஜன்னல்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் கொண்ட மேனுவல் ஏசி போன்ற சில பேஸ் அம்சங்களைப் பெறுகிறது.
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை சோனெட்டின் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு வசதிகளில் அடங்கும்.
தொடர்புடையது: ஃபேஸ்லிப்டட் Kia Sonet HTK வேரியன்ட்டை படங்களில் விரிவாக இங்கே பாருங்கள்
இன்ஜின் ஆப்ஷன்கள்?
கியா 5-ஸ்பீடு MT உடன் 83 PS/ 115 Nm 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (N/A) பெட்ரோல் இன்ஜின் அல்லது 6-ஸ்பீடு MT அல்லது 116 PS/ 250 Nm 1.5-லிட்டர் டீசல் யூனிட் உடன் பேஸ்-ஸ்பெக் சோனெட் HTE -யை வழங்குகிறது.
எஸ்யூவியின் ஹையர்-ஸ்பெக் டீசல் வேரியன்ட்கள் 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் ஆப்ஷனுடன் கூட இருக்கலாம். கூடுதலான செயல்திறனை விரும்புவோருக்கு, 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன், 120 PS/ 172 Nm 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும்.
விலை வரம்பு மற்றும் போட்டி
கியா சோனெட் HTE -யின் விலை ரூ. 7.99 லட்சம் முதல் ரூ. 9.79 லட்சம் வரையிலும், அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ.15.69 லட்சம் வரையிலும் உள்ளது. கியாவின் சப்-4m எஸ்யூவி ஆனது மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மற்றும் சப்-4மீ கிராஸ்ஓவர் எஸ்யூவி -யான மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: கியா சோனெட் ஆன் ரோடு விலை