ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும்
ஜனவரி 1, 2009-க்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து ஹோண்டா கார்களும் e20 எரிபொருளில் இயங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
e20-எரிபொருளில் இயங்கும் இன்ஜின்களை தயாரிப்பதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானதாகி வருவதால் பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் அவர்களது புதிய மாடல்கள் இந்தத் தரநிலைகளுக்கு ஏற்ப இணங்கி செல்வதை உறுதி செய்து வருகின்றன. இருப்பினும் பழைய கார்களின் உரிமையாளர்கள் e20-எரிபொருள் தொடர்பாக கவலைப்படலாம். இருப்பினும் ஜனவரி 1, 2009-க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து ஹோண்டா மாடல்களும் e20 எரிபொருளுக்கு இணக்கமானவை என்பதால் ஹோண்டா உரிமையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. இதில் தற்போதைய ஸ்பெக் ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மற்றும் ஹோண்டா எலிவேட், அத்துடன் அப்டேட் செய்யப்பட்ட மாடலுடன் விற்கப்படும் இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் ஆகியவையும் அடங்கும்.
e20 எரிபொருள் என்றால் என்ன?
e20 எரிபொருள் என்பது 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் ஆகிய இரண்டின் கலவையாகும். இது ஏப்ரல் 1, 2025 முதல் அனைத்துப் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கும் கட்டாயமாகும். எத்தனால் என்பது கரும்பு, அரிசி உமி மற்றும் மக்காச்சோளம் போன்ற மூலங்களிலிருந்து சர்க்கரையைப் பதப்படுத்தும் போது பெறப்படும் ஒரு துணை விளைபொருள் ஆகும்.
மேலும் படிக்க: ஜனவரி 2025-இல் அதிகம் விற்பனையான டாப் 10 கார் பிராண்டுகள் எதுன்னு தெரிந்துகொள்ளுங்கள்
e20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அது முழுமையாக பெட்ரோலை விடத் தூய்மையான எரிபொருளை எரிக்கிறது. இதன் மூலம் வாகனத்தின் டெயில்பைப் வெளியேற்றத்தைக் குறைகிறது. மேலும் இது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான அரசாங்கத்தின் செலவினங்களைப் பெருமளவில் குறைக்க உதவுகிறது.
ஒரு இன்ஜின் e20 எரிபொருளில் இயங்கும் வகையில் டிசைன் செய்யப்படாமல் இருந்தாலோ அத்தகைய இன்ஜினில் e20 பயன்படுத்தப்பட்டாலோ அது இன்ஜினின் உள்ளே அதிகப்படியான அரிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் அதன் காரணமாக அதன் நீண்ட ஆயுளைப் பாதிக்கும். இருப்பினும், முன்னரே கூறியது போல ஜனவரி 1, 2009-க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட ஹோண்டா கார்கள் e20 இணக்கமானவை.
இந்தியாவில் உள்ள ஹோண்டாவின் மாடல்கள்
ஹோண்டா தற்போது ஹோண்டா அமேஸ் (புதிய மற்றும் முந்தைய தலைமுறை மாடல்கள் இரண்டும்), ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய நான்கு மாடல்களை வழங்குகிறது.
முந்தைய தலைமுறை அமேஸின் விலை ரூ.7.20 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் புதிய அமேஸின் விலை ரூ.8.10 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரை உள்ளது. இது மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் போன்ற சப்-4m செடான் கார்களுடன் போட்டியிடுகிறது.
ஹோண்டா சிட்டி ஆனது ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியாவுடன் போட்டியிடும் ஒரு சிறிய ரகச் செடான் ஆகும், இதன் விலை ரூ.11.82 லட்சம் முதல் ரூ.16.55 லட்சம் வரை உள்ளது. இதன் ஹைப்ரிட் வெர்ஷனனா ஹோண்டா சிட்டி ஹைப்ரிட், ரூ.19 லட்சம் முதல் ரூ.20.75 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை என்றாலும், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடரின் ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கு மாற்றாக இதை ஒரு செடான் மாற்றாகக் கருதலாம்.
ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி-களுடன் ஹோண்டா எலிவேட் போட்டியிடுகிறது. ஹோண்டா எலிவேட்டின் விலை ரூ.11.69 லட்சம் முதல் ரூ.16.73 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை, டெல்லி
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.