Citroen C3 Aircross தோனி எடிஷன் படங்களில் விவரிக்கப்பட்டுள்ளது
இந்த லிமிடெட் பதிப்பில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் -க்கு சில ஒப்பனை மேம்படுத்தல்கள் மற்றும் சில பாகங்கள் கொடுத்தது. இதன் வெளிப்புறத்தில் தோனியின் ஜெர்சி எண் "7" ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எம்.எஸ். தோனி அதன் பிராண்ட் தூதராக கையெழுத்திட்ட சிறிது நேரத்திலேயே சிட்ரோன் C3 ஏர்கிராஸ் தோனி எடிஷனை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் சமீபத்தில் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் இரண்டுக்கும் கிடைக்கும் என சிட்ரோன் அறிவித்துள்ளது. இப்போது எஸ்யூ -வின் லிமிடெட் எடிஷனை விரிவான படங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இது உள்ளேயும் வெளியேயும் காஸ்மெட்டிக் அப்டேட்களை கொண்டுள்ளது. மற்றும் தொகுப்பின் ஒரு பகுதியாக சில ஆக்ஸசரீஸ்களை பெறுகிறது. தோனி எடிஷன் இப்போது டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டது. எனவே இந்த எடிஷன் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்:
வெளிப்புறத்தில், தோனி எடிஷன் டூயல்-டோன் காஸ்மோ ப்ளூ வண்ணம் மற்றும் வொயிட் ரூஃப் உடன், ஹூட், பின்புற டோர்கள் மற்றும் பூட் ஆகியவற்றில் முக்கிய "7" ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பக்க மற்றும் பின்புற பக்கத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் "தோனி எடிஷன்" ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டுள்ளது இது வழக்கமான மாடலில் இருந்து வேறுபட்டது.
இந்த பதிப்பில் கூடுதல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும், இது ஒரு சில ஆக்ஸசரீஸ்கள் உடன் வருகிறது.
இல்லுமினேட்டட் டோர் சில்ல்கள், ஓட்டுநர் இருக்கையில் "7" என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சீட் கவர்கள் மற்றும் பயணிகள் இருக்கையில் தோனியின் கையெழுத்து ஆகியவை ஆகியவை அடங்கும்.
"தோனி எடிஷன்" பிராண்டிங் மற்றும் சிட்ரோனின் லோகோவுடன் டூயல் கலர் குஷன்கள் மற்றும் சீட் பெல்ட் குஷன்கள் ஆகியவை மற்ற பாகங்களாக உள்ளன. சிறப்பு பதிப்பில் வழங்கப்படும் ஒரே புதிய வசதி முன்பக்க டாஷ் கேமரா ஆகும்.
தோனி பதிப்பில் கிடைக்கும் அனைத்து ஆக்சஸெரீகளின் பட்டியல் இதோ:
தோனி ஸ்டிக்கர்கள் |
சீட் கவர் |
குஷன் பில்லோவ் |
சீட் பெல்ட் குஷன் |
இல்லுமினேட்டட் சில் பிளேட்கள் |
முன்பக்க டாஷ்கேம் |
பவர்டிரெய்ன்
ஹூட்டின் கீழ் எந்த மாற்றங்களும் இல்லை எனவே லிமிடெட் எடிஷன் ஸ்டாண்டர்டான மாடலின் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் (110 PS/205 Nm) மூலம் இயக்கப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் தோனி பதிப்பின் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் வழக்கமான மாடலின் அதனுடன் தொடர்புடைய வேரியன்ட்டை விட இது கூடுதல் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விலை ரூ. 8.99 லட்சம் முதல் ரூ. 14.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மற்றும் ஹோண்டா எலிவேட் உடன் போட்டியிடும். மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காருக்கு ஒரு மாற்றாகவும் கருதலாம்.
மேலும் படிக்க: சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக்