C3 Aircross காரில் உள்ளதைப் போலவே டூயல் டிஸ்ப்ளேகளை பெறும் Citroen Basalt கார்
published on ஜூலை 23, 2024 05:05 pm by dipan for சிட்ரோய் ன் பசால்ட்
- 32 Views
- ஒரு கருத்தை எழுதுக
சிட்ரோன் பாசால்ட்டின் சமீபத்திய டீசர் C3 ஏர்கிராஸில் உள்ள அதே கேபின் செட்-அப், டூயல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஏசி வென்ட்களுடன் வரும் என்பதை காட்டுகிறது.
-
சிட்ரோன் நிறுவனம் தனது ஐந்தாவது மாடலாக பாசால்ட் பசால்ட் எஸ்யூவி-கூபேயை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
-
புதிய டீசர், சிட்ரோன் பாசால்ட்டின் கூடுதல் கேபின் அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
-
இது கூபே போன்ற சாய்வான ரூஃப் லைன், ஆலசன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்கள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
-
கேபினில் C3 ஏர்கிராஸை நினைவூட்டும் வகையிலான டேஷ்போர்டை கொண்டுள்ளது, 10.2-இன்ச் டச்ஸ்க்ரீன் மற்றும் 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உள்ளது.
-
இது C3 ஹேட்ச்பேக் அல்லது C3 ஏர்கிராஸில் இல்லாத ஆட்டோமேட்டிக் ஏசி வென்டுகளையும் கொண்டுள்ளது.
-
இதன் பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.
-
C3 ஏர்கிராஸ் மற்றும் C3 --ல் காணப்படும் அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS மற்றும் 205 Nm வரை) பசால்ட் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசால்ட் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
டாடா தனது நேரடி போட்டியாளரான கர்வ் எஸ்யூவியின் வெளிப்புற டிசைனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, சிட்ரோன் பசால்ட்டின் புதிய டீசர் அதன் டேஷ்போர்டு டிசைனை சிறப்பித்துக் காட்டுகிறது. இந்த சமீபத்திய டீசர் சிட்ரோன் பாசால்ட்டின் எஸ்யூவி போன்ற கேபினைக் காட்டுகிறது. இது C3 ஏர்கிராஸை நினைவூட்டுகிறது. மேலும் அதன் பல பிரீமியம் வசதிகளை இந்த டீசர் உறுதிப்படுத்துகிறது.
சமீபத்திய டீசர் வீடியோவில் நாங்கள் கண்டறிந்த சிறப்பம்சங்களைப் பற்றிய சுருக்கம் இதோ:
டீசரில் காட்டப்பட்டுள்ள விவரங்கள்
புதிய டீசரின் மிகவும் சுவாரஸ்யமான பகுதியான கேபின் மற்றும் அதன் வசதிகளை பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்துள்ளது. டீசர் C3 ஏர்கிராஸ் போன்ற டேஷ்போர்டை ஒத்த 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் காட்டுகிறது.
இருப்பினும் டீசர் C3 ஏர்கிராஸில் இல்லாத ஏசி பேனலை நமக்கு காட்டுகிறது.
மேலும், சமீபத்திய டீசர் வெளிப்புற டிசைனை விரிவாகக் காட்சிப்படுத்தியது, அதன் எஸ்யூவி-கூபே உடல் பாணியை ரூஃப் லையனுடன் சிறப்பித்துக் காட்டுகிறது. முன் புறத்தில் இதில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மற்றும் C3 ஹேட்ச்பேக்கை நினைவூட்டும் வடிவமைப்பு இருக்கிறது, இதில் V-வடிவ LED DRL-கள் மற்றும் ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் அடங்கும். பாசால்ட் ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்கள் மற்றும் ஹை-பொசிஷன்ட் பூட் லிட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முக்கியமாக சிட்ரோன் லோகோ மற்றும் 'பசால்ட்' பெயரை இது நமக்கு காட்டுகிறது.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஒரே மாதிரியான டச்ஸ்கிரீன் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளே தவிர க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகளையும் சிட்ரோன் பாசால்ட் பெறக்கூடும்.
பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
C3 ஏர்கிராஸ் மற்றும் C3 ஹேட்ச்பேக்கில் காணப்படும் அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/205 Nm வரை) மூலம் சிட்ரோன் பாசால்ட் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் (AT) ஆகியவை அடங்கும்.
அறிமுகம் மற்றும் போட்டியாளர்கள்
சிட்ரோன் பாசால்ட் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது சமீபத்தில் வெளியிடப்பட்ட டாடா கர்வ் உடன் நேரடியாக போட்டியிடும் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் MG ஆஸ்டர் ஆகியவற்றிற்கு ஸ்டைலான மாற்றாக இது இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: சிட்ரோன் C3 ஏர்கிராஸின் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful