• English
  • Login / Register

நாளை அறிமுகமாகிறது புதிய Citroen Basalt கார்

published on ஆகஸ்ட் 08, 2024 01:54 pm by rohit for சிட்ரோய்ன் பசால்ட்

  • 33 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பசால்ட் எஸ்யூவி-கூபே இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்தப்படும். இதன் ஆரம்ப விலை ரூ.8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Citroen Basalt India launch date confirmed

  • இது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள சிட்ரோனின் ஐந்தாவது தயாரிப்பாகும்.

  • ஆல்-எல்இடி லைட்ஸ், 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் சாய்வான கூரை ஆகியவை அடங்கும்.

  • 10.2-இன்ச் தொடுதிரை, ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 6 ஏர்பேக்குகள். 1.2-லிட்டர் N/A மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுடன் இது வரும்.

சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி-கூபே காரின் அதிகாரப்பூர்வ டீஸர்கள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்துள்ளன. பாசால்ட் இந்தியாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று சிட்ரோன் நிறுவனம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக அதன் ஆஃப்லைன் முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்களில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. டாடா கர்வ்வ் போட்டியாளரான இந்த காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:

வெளியில் தோற்றம் எப்படி இருக்கிறது ?

பசால்ட் ஒரு எஸ்யூவி-கூபே கார் என்றாலும் வடிவமைப்பு என்று வரும் போது சி3 ஏர்கிராஸ் உடன் பெரும்பாலான விஷயங்களை இது பகிர்ந்து கொள்கிறது. இது எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள், வி-வடிவ ஸ்பிளிட் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவியில் உள்ளதைப் போன்ற ஸ்பிளிட்டட் கிரில் ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்க பம்பர் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஃபாக் லைட்ஸ் மற்றும் வெர்டிகலான ரெட் இன்செர்ட்கள் மற்றும் சில்வர்-ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் இது கொண்டுள்ளது.

Citroen Basalt side

பக்கவாட்டில் பார்க்கும்ப் போது கூபே ரூஃப்லைன் மற்றும் 16-இன்ச் டூயல்-டோன் ஃபினிஷ் அலாய் வீல்கள் ஆகியவற்றின் மிகப்பெரிய ஹைலைட்டை நீங்கள் கவனிக்கலாம். பின்புறத்தில் இது ரேப்பரவுண்ட் ஆலசன் டெயில் லைட்ஸ் மற்றும் பிளாக் கலர் பம்பர் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

கேபின் மற்றும் வசதிகள்

Citroen Basalt cabin

டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஏசி வென்ட்களுக்கான அதே வடிவமைப்பு உள்ளிட்ட ஒரே மாதிரியான டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருப்பதால் C3 ஏர்கிராஸ் உடன் உள்ள ஒற்றுமையை இதில் பார்க்க முடிகிறது. இது வொயிட் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டாஷ்போர்டின் பயணிகள் பக்கத்தில் ஒரு பிராஸ் கலர் டிரிம் இன்செர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பசால்ட் -ன் கேபினின் மற்றொரு முக்கிய ஹைலைட் அதன் பின்புற இருக்கை தளமாகும், இது தொடையின் கீழ் சிறந்த ஆதரவை வழங்க 87 மிமீ நகரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Citroen Basalt wireless phone charging

C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யில் இருப்பதை போன்ற அதே 10.2-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவை சிட்ரோன் இந்த காரில் கொடுத்துள்ளது. பசால்ட் ஆனது ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS) ஆகியவை கொடுக்கப்படலாம்.

மேலும் படிக்க: Citroen C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி புதிய வசதிகளுடன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இது என்ன இன்ஜின் ஆப்ஷன்களை பெறும்?

பாசால்ட் 1.2-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின்களுடன் வரும், அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

விவரம்

1.2-லிட்டர் N/A பெட்ரோல்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

82 PS

110 PS

டார்க்

115 Nm

205 Nm வரை

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

கிளைம்டு மைலேஜ்

18 கி.மீ

19.5 கிமீ/லி, 18.7 கிமீ/லி

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Citroen Basalt rear

சிட்ரோன் பசால்ட் காரின் விலை ரூ.8.5 லட்சத்தில் இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்). இது டாடா கர்வ் உடன் நேரடியாக போட்டியிடும். அதே நேரத்தில் மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் க்ரெட்டா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், ஸ்கோடா குஷாக், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.

லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Citroen பசால்ட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience