Citroen C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி புதிய வசதிகளுடன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
published on ஆகஸ்ட் 05, 2024 05:13 pm by dipan for சிட்ரோய்ன் சி3
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
C3 டூயோ கார்கள் இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து விடுபட்ட சில வசதிகள் மட்டுமில்லாமல் பாதுகாப்புக்காகவும் சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்படலாம்.
-
C3 மற்றும் C3 ஏர்கிராஸ் இப்போது LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ORVM-மவுண்டட் டர்ன் இண்டிகேட்டர்களை கொண்டுள்ளது.
-
C3 ஆனது புதிய 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் இரண்டு கார்களிலும் ஆட்டோ ஏசி மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை உள்ளன.
-
10.2 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள் போன்ற வசதிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
-
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட மாடல்களின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் எதுவும் மாற்றமிருக்காது.
-
அப்டேட் செய்யப்பட்ட இரண்டு மாடல்களும் அவற்றின் தற்போதைய விலையை விட சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்குப் சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் மற்றும் இந்த C3 ஏர்கிராஸ் எஸ்யூவி கார்களுக்கு ஒரு பெரிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாடல்களில் இப்போது பல புதிய வசதி, வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. அப்டேட்டட் சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யில் புதிதாக என்ன இருக்கிறது என்பதை ஆராய்வோம்.
புதியது என்ன?
புதுப்பிக்கப்பட்ட சிட்ரோன் மாடல்கள் அவற்றின் வெளிப்புற வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. பழைய ஹாலோஜன் யூனிட்களுக்கு பதிலாக இப்போது LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMs) இப்போது ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் முன்பக்க ஃபென்டர்களைக் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இப்போது வாஷருடன் ரியர் கண்ணாடி வைப்பர் உள்ளது.
உள்ளே டாஷ்போர்டு ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் C3 ஆனது C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யிலிருந்து பெறப்பட்ட ஒரு புதிய 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களிலும் இப்போது ஆட்டோ ஏசி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பவர் விண்டோ ஸ்விட்சுகள் சென்டர் கன்சோலில் இருந்து டோர் பேட்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் எலக்ட்ரானிக் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி இன்னும் கொடுக்கப்படவில்லை.
பாதுகாப்பை பொறுத்தவரையில் இரண்டு சிட்ரோன் மாடல்களும் இப்போது 6 ஏர்பேக்குகளை கொண்டதாக அப்டேட் செய்யபப்பட்டுள்ளன.
பிற வசதிகள் மற்றும் பாதுகாப்பு
C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் இரண்டும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல் மற்றும் உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய டிரைவர் இருக்கை போன்ற வசதிகளுடன் தொடர்ந்து வருகின்றன. எஸ்யூவி இரண்டாவது வரிசை பயணிகளுக்கு கூரையில் ஏசி வென்ட்களும் இப்போது கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் விவரங்கள்
சிட்ரோன் C3 ஆனது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/190 Nm) உட்பட இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. மற்றொரு ஆப்ஷன் 1.2-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜின் (82 PS/115 Nm), இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆனது 110 PS மற்றும் 205 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனலான 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் அவை தற்போது கிடைக்கும் மாடல்களை விட பிரீமியம் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய-ஸ்பெக் சிட்ரோன் C3 விலை ரூ.6.16 லட்சத்தில் இருந்து ரூ.9.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) ஆக உள்ளது. இது மாருதி வேகன் R, மாருதி செலிரியோ மற்றும் டாடா டியாகோ ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. இதன் விலை மற்றும் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும் போது சிட்ரோன் ஹேட்ச்பேக் ஆனது நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், டாடா பன்ச், மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
பெரிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யின் விலை தற்போது ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.14.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் உடன் போட்டியிடும். மேலும் டாடா கர்வ்வ் மற்றும் சிட்ரோன் பஸால்ட் இரண்டும் ஸ்டைலான மற்றும் எஸ்யூவி-கூபே C3 ஏர்கிராஸ்க்கு மாற்றாக இருக்கும்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: C3 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful